கோயம்பேட்டில் மீண்டும் அதிரடி.. ஸ்பாட்டுக்கே போன அதிகாரிகள்.. நாளைக்கு கடைசி நாள்.. இதை உடனே முடிங்க
சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் புதிய அதிரடிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. இது பொதுமக்கள் தரப்பில் பெருத்த வரவேற்பினை பெற்று வரும்நிலையில், இப்போதும் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவிலான சந்தை என்ற பெருமைக்குரியது சென்னை கோயம்பேடு மார்க்கெட்.. அதனால்தான், இங்கு தினமும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வந்து குவிகின்றன..

பராமரிப்பு: எனவேதான், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் (சிஎம்டிஏ) நிர்மாணிக்கப்பட்ட கோயம்பேடு மொத்தவிற்பனை அங்காடி வளாகம், அங்காடி நிர்வாகக் குழுவால் பராமரிக்கப்பட்டு வருகிறது... குறிப்பாக, கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள், ஒழுங்குமுறை நடவடிக்கைகள், உள்ளிட்டவற்றில் அதிகாரிகள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்கள்.
2 நாட்களுக்கு முன்புகூட ஒரு அதிரடி மேற்கொள்ளப்பட்டது.. அதாவது, மதுரவாயல், பூந்தமல்லி பிரதான சாலைகள், கோயம்பேடு மார்க்கெட் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க வேண்டும், என்று கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு உடனடியாக நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
அங்காடி நிர்வாகம்: அதன்படி, கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றுத்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு ஏலம் விடப்படும், என்று கோயம்பேடு அங்காடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேபோல, ஒழுங்குமுறைகளை மீறுவோர் மீதும் அதிகாரிகள் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.. உரிமம் புதுப்பிக்காமல் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருவதாக அங்காடி நிர்வாக அலுவலகத்துக்கு புகார்கள் குவிந்தன. கோயம்பேடு காய்கறி, பூ மார்க்கெட்டில் உரிமம் புதுப்பிக்க தவறிய 30 கடைகளுக்கு அங்காடி நிர்வாகம் சார்பில் கடந்த மாதம் சீல் வைக்கப்பட்டது..
வளாக கடைகள்: இப்போதும் ஒரு அதிரடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.. இதுகுறித்து சிஎம்டிஏ ஒரு செய்திக்குறிப்பையும் வெளியிட்டிருக்கிறது. அதில், "வளாகக்கடைகள் அனைத்தும், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அவற்றுக்கான உரிமம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பது சட்டப்படியிருக்கும் விதியாகும்.
கடந்த 2021-24-ம் தொகுப்பாண்டிற்குரிய உரிமம் புதுப்பிக்காதவர்களை கண்டறிந்து, கடைகளைமூடி முத்திரையிடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை, மொத்தமாக 60 கடைகள் மூடி முத்திரையிடப்பட்டுள்ளது. இப்போது மீண்டும் 7 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது..
அதிரடி உத்தரவு: காய்கறி மற்றும் மலர் அங்காடியில், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும (சிஎம்டிஏ) உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, உத்தரவின்பேரில், கோயம்பேடு தலைமை நிர்வாக அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி முன்னிலையில், கடந்த 2021 முதல் 2023 வரை உரிமம் புதுப்பிக்காத 7 கடைகளுக்கு தற்போது சீல் வைக்கப்பட்டது.
அதுமட்டுமல்ல, உரிமம் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நாளை மே 31-ம் தேதியே கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications