கேவலம்.. கழுத்தை புடிச்சு உங்களை வெளியே தள்ளணுமா? மதிக்காத பாஜக.. ஓபிஎஸ் இதை செய்யணும்.. சொல்றது யார்
சென்னை: அதிமுக - பாஜகவுடன் கூட்டணி வைக்குமா? வைக்காதா? என்பது வானிலை அப்டேட் போல ஆகிவிட்டது.. திடீரென இணக்கமாகிறார்கள், திடீரென சுணக்கமாகிவிடுகிறார்கள்.. என்னதான் நடக்கிறது அதிமுக கூட்டணிக்குள்?
இந்த மாதம் இறுதியில் தமிழகம் முழுவதும் நடைப்பயணம் துவக்குகிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. ஜூலை 28-ல் ராமேஸ்வரத்தில் துவங்கும் இந்த பயணத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார்.
அமித்ஷா தொடங்கி வைப்பதால், இந்த தொடக்கவிழாவில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும் என்று பாஜக முடிவு செய்துள்ளது. அதன்படி, விழாவில் கலந்து கொள்ள 3 பேருக்குமே அழைப்பும் விடுக்கப்பட்ட நிலையில், "அவசியம் கலந்து கொள்ள வருவேன்" என்று உறுதியளித்து விட்டாராம் எடப்பாடி பழனிசாமி.

டிடிவி தினகரன்: ஓபிஎஸ், டிடிவியை பாஜக தலைமை அழைத்திருக்கிறது என்கிற விபரம் எடப்பாடிக்கு தெரிந்ததுமே டென்ஷனாகிவிட்டாராம்.. "அமித்ஷா கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் நிச்சயம் அந்த ரெண்டுபேரும் (ஓபிஎஸ், தினகரன்) வருவார்கள். அவர்கள் முகத்தில் நாம் முழிக்கணுமா? டெல்லியில் ஜேபி நட்டாவை சந்தித்தபோது அதிமுக-பாஜக கூட்டணிக்குள் அவர்களை சேர்க்கக்கூடாது" என்று சொன்னேன். அப்படியிருந்தும் அழைக்கிறார்களே என்று ஜெயக்குமாரிடம் புலம்பி தள்ளிவிட்டாராம் எடப்பாடி பழனிசாமி.
இந்நிலையில், நம்முடைய தமிழ் ஒன் இந்தியா சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் பிரியன் ஒரு பேட்டி தந்துள்ளார். அந்த பேட்டியில், அண்ணாமலை பாதயாத்திரையில், ஓபிஎஸ் கலந்து கொள்வாரா? அவருக்கு அழைப்பு விடுக்கப்படுமா? அப்படி ஓபிஎஸ் கலந்து கொண்டால் சரியா? என்ற கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு ப்ரியன் நமக்கு தந்த பதில்கள்தான் இவை:
அணுகுமுறை: "எடப்பாடியை அண்ணாமலை கூப்பிட்டது நல்ல விஷயம்.. சரியான அணுகுமுறை.. ஆனால் பன்னீர்செல்வத்தை கூப்பிட்டாரா? என்று தெரியவில்லை. அப்படியே பன்னீர்செல்வத்தை கூப்பிட்டிருந்தாலும், அவர் கலந்துகொள்வது சரியான அணுகுமுறையாக இருக்காது.. ஏனென்றால், ஓபிஎஸ்ஸை டெல்லியில் நடந்த மீட்டிங்குக்கே கூப்பிடவில்லை. அப்படியிருக்கும்போது, அண்ணாமலையின் பாதயாத்திரையில் கலந்து கொள்வது தன்மானத்துக்கு சவால் விடுவது போன்றதாகிவிடும்.
பாஜகவே எங்களை வெளியே அனுப்பும்வரை, நாங்கள் வெளியே போக மாட்டோம், பாஜகவுடன்தான் இருப்போம் என்று ஓபிஎஸ் சொன்னதே, ரொம்ப கேவலமா இருக்கு. கழுத்தை புடிச்சு பாஜக வெளியே தள்ளினால்தான்போவீங்களா? இது ரொம்ப தப்பு. ஓபிஎஸ்ஸை அதிமுகவில் இருந்து வெளியேற்றியது தவறு என்று நான் தார்மீக ரீதியாக சுட்டிக்காட்டினேன்.
ஒற்றை தலைமையை கொண்டுவருவதற்காக, மெஜாரிட்டியை பயன்படுத்தி, ஓபிஎஸ்ஸை வெளியேற்றியது தவறு. அதிமுகவின் அடிப்படை விதிகளுக்கு முரணானது. ஆனால், இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொல்ல போகிறதோ அது வேறு.
எடப்பாடி பழனிசாமி: ஆனால், 2017-ம் ஆண்டிலிருந்தே பாஜகவுடன் நெருங்கி இருப்பவர் ஓபிஎஸ்.. இணக்கமாக இருப்பவரும்கூட. அவரது மகன் தேர்தலில் நின்றபோது, பிரதமர் மோடியே வந்து நேரிடியாக வந்து தேர்தல் பிரச்சாரத்தை செய்திருந்தார். எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதிகூட, இன்னமும் அவரது மகனை, அதிமுக எம்பி என்றுதான் லோக்சபாவில் சொல்லி கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, எடப்பாடிக்கு பயந்துகொண்டு, பன்னீர்செல்வத்தை பாஜக ஏன் கூப்பிடாமல் விட்டுவிட்டது?
எடப்பாடியிடம் இரட்டை இலை சின்னம் இருப்பதால், அதிமுகவை மட்டும் கூட்டத்துக்கு பாஜக கூப்பிடுகிறது என்றால், உற்ற தோழனாக இருந்துவரும் ஓபிஎஸ்ஸையும் பாஜக கூப்பிட்டிருக்க வேண்டும். ஈரோடு தேர்தலில் ஓபிஎஸ் பேசியதை எல்லாருமே பார்த்தோம். இரட்டை இலைக்காக விலகுவதாகவும் சொன்னவர். அப்படியிருக்கும்போது, பொதுத்தேர்தல் வரும்சமயத்தில் பாஜக இப்படி செய்திருக்ககூடாது.
ஆனால், அண்ணாமலை பாதயாத்திரையில் ஓபிஎஸ் கலந்துகொண்டால், அது சரிகிடையாது. அதிமுகவை ஒன்றிணைப்பதாக சொல்லிக்கொண்டு, ஒருத்தரை ஒருமாதிரியாகவும், இன்னொருத்தரை வேறுமாதிரியாகவும் நடத்திக்கொண்டு, தாங்கள்தான் அவர்களை ஆட்டுவிக்கிறோம் என்பதுபோல இன்று கொண்டுவந்துள்ளார்கள்.
இணக்கமான சூழல்: அப்படியிருக்கும்போது, ஓபிஎஸ், அவர்களுடன் மாட்டிக்கொள்ளாமல், எடப்பாடியுடன் நான் இணக்கமாக செயல்படுவேன் என்று சொல்ல வேண்டும். இல்லாவிட்டால், எனக்கென்று இவ்வளவு ஆதரவாளர்கள் இருக்கிறார்கள், எனக்குதான் தொண்டர்கள் பலம், எனக்குதான் மக்கள் ஆதரவு உள்ளது, மக்கள் என்னைதான் நம்புகிறார்கள் என்று ஓபிஎஸ் நினைத்தால், எடப்பாடியுடன் மட்டுமே போட்டியிருக்க வேண்டும். வேறு ஒரு கட்சியை நம்பக்கூடாது.
மதிக்காத கட்சியுடன் ஏன் ஓபிஎஸ் சேர வேண்டும்? அப்படியென்ன அவசியம் வந்தது? தினகரன்தான் உங்களுடன் இருக்கிறாரே, தனித்து போட்டியிடுங்கள். எடப்பாடி அதிமுகவை தோற்கடிக்க பாருங்கள். அதைவிட்டுட்டு, கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளினால்தான் போவேன் என்பது சரியா? அப்படின்னா பாஜகவை விட்டால் உங்களுக்கு வேற வழி இல்லையா? பாஜகவை நம்பித்தான் பொழப்பு ஓடுது என்று பன்னீர்செல்வம் நினைப்பது தவறு.
சவால்விட வேண்டும்: உடனடியாக தனியாக போட்டியிட வேண்டும். பாஜகவுடன் எடப்பாடி இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்லி, எடப்பாடிக்கு சவால் விட வேண்டும். மக்கள் ஆதரவு தனக்கு உள்ளது என்று ஓபிஎஸ் நிரூபிக்க வேண்டும். அதற்கான தளத்தை இப்போதே உருவாக்க வேண்டும். அதைவிட்டுட்டு பாஜக பாதயாத்திரைக்கு போவதெல்லாம், எதிர்காலத்தில் அதிமுகவுடன் எந்தவித தொடர்பும் இல்லை என்ற பிம்பத்தை உருவாக்கிவிடும்" என்கிறார் ப்ரியன்.
-
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications