மீனாகுதே கருவாடு.. கையை பிசையும் எடப்பாடி பழனிசாமி.. திமுக கூட்டணியில் சிக்கலா? இது லிஸ்ட்ல இல்லயே
சென்னை: சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு காரணமே பாஜகதான் என்று அதிமுகவும், அதிமுக கூட்டணியில் போட்டியிட்டதால்தான் பாஜவுக்கு பின்னடைவு என்று பாஜகவும் மாறிமாறி குற்றஞ்சாட்டியதுதான், கூட்டணியில் உரசலை ஏற்படுத்திய முதல் புள்ளியாகும். இன்று இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
வடமாநிலங்களில் கடந்த 2 வருடங்களில் நடந்த சில தேர்தல்களில் பாஜக தோல்வியை தழுவியது.. காங்கிரசும், ஆம் ஆத்மியும் பாஜகவை முந்திக்கொண்டு வந்து கொண்டிருக்கின்றன..

வடமாநிலங்கள்: இதனால், தன்னுடைய கோட்டை என்று கருதக்கூடிய மாநிலங்களையே, பாஜக ஒவ்வொன்றாக இழந்து வருகிறது. எனவே, வடமாநிலங்களில் விட்டதை, தென்மாநிலங்களில் பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில்தான், கடநத் ஒரு வருடத்துக்கு முன்பேயே எம்பி தேர்தல் வியூகங்களில் களமிறங்கி உள்ளது. அதனால்தான், தமிழகத்தில் தென்மாவட்டங்களிலும் காலூன்றும் முயற்சியையும் மேற்கொண்டு வருகிறது.
இதற்காக அதிமுகவின் வாக்குகளை, குறி வைத்து அரசியல் வியூகம் வகுத்து வருகிறது. பாஜகவின் இந்த கனவுகளை, அதிமுக - மாநில பாஜக தகர்த்து கொண்டிருக்கின்றன..
பழனிசாமி: அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, கடந்த ஒரு வருட காலமாகவே, மோதல் போக்கு இருந்து வருகிறது.. ஒரேகூட்டணி என்றாலும் இவர்களுக்குள் மோதல் வலுக்க காரணம், இருவருமே மேற்கு மண்டலத்தைச் சார்ந்தவர்கள்.. இருவருமே ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள்.. இருவருமே கொங்கு என்பதால், தொகுதி விவகாரம் முதல் கூட்டணி வரை ஈகோ வெடித்துகிளம்பி விட்டது.
சில மாதங்களுக்கு முன்பு ஜெயலலிதாவை சீண்டி அண்ணாமலை பேசியிருந்தார்.. இப்போது அண்ணாதுரையை சீண்டி அண்ணாமலை பேசவும், இந்த பூசல் கூட்டணியில் வெடித்து வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் தொடங்கி செல்லூர் ராஜூ வரை, அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துள்ளனர்.. பாஜகவின் மூத்த தலைவர்களும் என்ன செய்வதென்றே தெரியாமல், இங்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் டெல்லிக்கு பாஸ் செய்து கொண்டிருப்பதாக தெரிகிறது.
ரியாக்ஷன்கள்: ஆனால், அதிமுகவிலோ இதற்கான ரியாக்ஷன்கள் வெடித்து வருகின்றன.. அதிமுக கூட்டணியில் இருந்து பாஜவை வெளியேற்றியதற்கு அதிமுகவினர் பட்டாசுவெடித்து கொண்டாடி வருகிறார்கள்..
"ஐபிஎஸ் படித்தவனை ஆடு மேய்க்க விட்ட இயக்கமல்ல. ஆடு மேய்த்தவனை ஐபிஎஸ் ஆக்கிய அண்ணா பெயரில் இயங்கும் மாபெரும் மக்கள் இயக்கம். கூட்டணியாவது, கூந்தலாவது... நன்றி மீண்டும் வராதீர்கள், கூட்டணியில் பாஜக இல்லை. விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையார் சுழி போட்டாச்சு.. நாளை நமதே... 40ம் நமதே" என்ற போஸ்டர் அடித்து ஒட்டிவிட்டார்கள்.
சீமான் திருமாவளவன்: அதிமுகவின் கூட்டணி முடிவை நாம் தமிழர் கட்சியின் சீமான் வரவேற்றுள்ளார்.. மற்றொருபக்கம் விசிகவின் திருமாவளவன் வரவேற்றுள்ளார்.. திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் அதிமுகவுக்கு வரும் என்று ஜெயக்குமாரும் திடீர் திடீரென கிலியை கிளப்பி கொண்டிருக்கிறார்.
இதற்கெல்லாம் காரணம், காங்கிரஸ் + விசிக + கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், மறைமுகமான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறதாம். மூத்த தலைவர் கார்கேவிடம் திருமாவளவன் பேசியதாகவும், காங்கிரசுக்கு 20 சீட்களை அதிமுக ஒதுக்க ஓகே சொல்லிவிட்டதாகவும், உறுதிப்படுத்தப்படாத செய்திகள் பரபரத்து கொண்டிருக்கின்றன.
நெருக்கடி: அதுமட்டுமல்ல, இந்த கட்சிகளை நழுவவிடக்கூடாது என்பதற்காகத்தான், கூட்டணி விஷயத்தில் ஒரு முடிவை எடுத்தாக வேண்டிய கட்டாயம் அதிமுகவுக்கு இன்று ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஆனால், பாஜகவோ, சைலண்ட் மோடுக்கு போய்விட்டது.. சோஷியல் மீடியாவிலோ, பொதுவெளியிலோ அதிமுக குறித்தோ கூட்டணி குறித்தோ விமர்சிக்க வேண்டாம் என்று பாஜகவினருக்கு அக்கட்சி தலைமை உத்தரவிட்டது.. அதேபோல, பாஜகவை விமர்சிக்க கூடாது என்று அதிமுகவினருக்கு அக்கட்சி தலைமை உத்தரவிட்டது. ஆனாலும் புகைச்சல் அதிகமாகி கொண்டே வருகிறது.
அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து அதிமுக அழுத்தம் தந்துவரும்நிலையல், அண்ணாமலையை மாற்ற முடியாது... அவர் மாநில தலைவராகவே நீடிப்பார். போய் தேர்தல் வேலையை பாருங்க என்று நட்டா ஆர்டர் போட்டுவிடவும், அதிர்ந்துபோன அதிமுக இன்று என்ன முடிவெடுக்கும் என்று தெரியவில்லை.
கையை பிசையும் எடப்பாடி: இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது.. ஜெயக்குமார், சிவி சண்முகம் ஒருபக்கம் பாஜக எதிர்ப்பை பதிவு செய்ய, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர் போன்றவர்கள் கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு எதிர்ப்பை பதிவு செய்ய, இவர்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்டு, கையை பிசைந்து நிற்கிறாராம் எடப்பாடி பழனிசாமி..
ஆக, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதா? அவமானத்தை தாங்கி விட்டு பாஜக கூட்டணியில் தொடர்வதா? இதற்கான இறுதி முடிவும் இன்று எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications