கறுப்பு ஆடு மாட்டுது? அண்ணாமலை லேசில் விடமாட்டாரே! இப்பவே தமிழக பாஜக எகிறியடிக்குது! சென்னை பரபரப்பு
சென்னை: தமிழக பாஜக சார்பில், இன்றைய தினம், கட்சி நிர்வாகிகளின் கூட்டம் சென்னையில் நடந்து வருகிறது.. மாநில தலைவர் அண்ணாமலை இந்த கூட்டத்தை எதற்காக கூட்டியிருக்கிறார் என்பது குறித்த கணிப்புகள் வலம்வருகின்றன.
தமிழக பாஜக மாநில பொறுப்பாளர்கள், நாடாளுமன்ற தேர்தல் குழு, மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.. அதன்படி சென்னை அமைந்தகரையில் உள்ள அய்யாவு மஹாலில் அண்ணாமலை தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு கூட்டம் நடந்துவருகிறது.

இதில், பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், பாஜக வேட்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஆனால், எதற்காக இந்த கூட்டம் என்று தெரியவில்லை. எனினும் சில யூகங்கள் றெக்கை கட்டி பறக்கின்றன.
இளைஞர்கள்: கடந்த சில நாட்களுக்கு நாம் நம்முடைய "ஒன் இந்தியாவில்" பிரத்யேகமான செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தோம்.. அதாவது, நடந்து முடிந்த எம்பி தேர்தலில் இளைஞர்கள் பலருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.. அதேபோல், புதியவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை..
முக்கிய பதவியில் இருப்பவர்களுக்கும், சீனியர்களுக்கும், பிரபலங்களுக்குமே இந்த முறையும் தேர்தலில் வாய்ப்பு தரப்பட்டது.. அவ்வளவு ஏன்? மாநில தலைவர் அண்ணாமலையே தான் வேட்பாளராக்கப்படுவோம் என்று எதிர்பார்க்கவில்லையாம்..
பிரபலங்கள்: இன்னும் சொல்லப்போனால், இந்த தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என்றாராம்.. எனினும், கோவையில் அதிரடியாக களமிறக்கப்பட்டார்.. மூத்த தலைவர்களும், பிரபலங்களும் லோக்சபா தேர்தலில் களமிறங்குவற்கு காரணம், அதிமுகவுக்கு உரிய பதிலடியை தர வேண்டிய நெருக்கடி பாஜகவுக்கு ஏற்பட்டது. அத்துடன் பாஜகவின் வாக்கு வங்கியையும் உயர்த்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.
அதைவிட முக்கியமாக, திமுக வலுவாக உள்ள சில தொகுதிகளில் டஃப் தர வேண்டும் என்ற அவசியமும் தாமரை கட்சிக்கு ஏற்பட்டது. அதனால்தான், முக்கிய பிரமுகர்களை நிறுத்துவதன் மூலம் ஒரு சில இடங்களையாவது கைப்பற்ற முடியும் என்ற "கணக்கு" போடப்பட்டது.. இந்த காரணத்தை அடிப்படையாக வைத்தே, தொகுதிகளில் தாராளத்தையும் இறைத்திருந்தது.
சிக்கல்கள்: ஆனால், திட்டமிட்டபடி, பாஜகவின் கணக்குகள் அத்தனையும் நொறுங்கிவிட்டதாம். அதாவது, அடிமட்ட நிர்வாகிகளுக்கே முறையாக பணம் போய்ச்சேரவில்லையாம்.. சில இடங்களில் உட்கட்சி பூசலும், உள்குத்தும் வெடித்திருந்தால், களப்பணிகளை சில இடங்களில் சரியாக மேற்கொள்ளவில்லை என அண்ணாமலைக்கு "சீக்ரெட் ரிப்போர்ட்" போயிருக்கிறதாம்.
விசாரணை: இதுகுறித்த விசாரணை நடத்துவதுடன், இதுபோன்ற சிக்கல்கள், வரப்போகும் சட்டசபை தேர்தலில் வரக்கூடாது என்பதற்காக இப்போதே, அலர்ட் ஆகியிருக்கிறதாம் தமிழக பாஜக..
இங்கு இன்னொரு விஷயத்தையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.. 2 நாட்களுக்கு முன்பு, பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை அண்ணாமலை தந்திருந்தார்..
அதில், "தமிழகத்தில் பாஜக இனி மற்ற கட்சிகளின் தயவில் இருக்க வேண்டிய அவசியமில்லை 2026ல் நடக்க உள்ள தேர்தலுக்கு, 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை இப்போதே அறிவிக்க கட்சித் தலைமையை வலியுறுத்த போகிறேன்" என்று அதிரடியாக அண்ணாமலை கூறியிருக்கிறார்.
கையாடல்: அந்தவகையில், இன்றையதினம் நடக்க போகும் கூட்டத்தில், தேர்தல் களப்பணியில் ஆர்வம் காட்டாதவர்கள், பணத்தை முறையாக விநியோகிக்காமல் கையாடல் செய்தவர்கள், என அத்தனை பேருக்கும் "கட்டம்?" கட்டும் முடிவு தமிழக பாஜக இன்றைய தினம் எடுக்கலாம் என்கிறார்கள்..
அதேபோல, சட்டசபை தேர்தலில் அதிக சீட்களில் போட்டியிட முடியும் என்பதால் ஏராளமான இளைஞர்களுக்கும், புதுமுகங்களுக்கும் வாய்ப்பு தர போகிறதாம் தமிழக பாஜக. எனவே, இதற்கான நிர்வாகிகள் தேர்வுகளும் நடக்கலாம் என்கிறார்கள்.
இதில், மாவட்ட அளவில் தொடங்கி, மாநில பொறுப்புகள் வரை பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.. இதில் சில சீனியர்கள், டெல்லி, நாக்பூரின் கருணை பார்வையை பெறும் நோக்கோடு, தங்களுக்கு தெரிந்த வழிகளிலெல்லாம் முயற்சி செய்கிறார்களாம்.
பரபரப்பு: அதேபோல, தொகுதிகளின் நிலவரங்கள், செலவு கணக்கு விவரங்கள் உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் பற்றி விவாதிக்கப்படலாம் என்கிறார்கள்.
எனினும், புதியவர்களில் யாருக்கு வாய்ப்பு கிடைக்க போகிறது என்பதைவிட, முக்கிய நபர்களில் யாருக்கு பொறுப்பு பறிபோக போகிறது என்பதிலேயே அதிக கவனம் குவிந்துள்ளது.. மொத்தத்தில், தேர்தலுக்கு பிறகு நடைபெற உள்ள முதல் பாஜக நிர்வாகிகள் கூட்டம் என்பதால், தமிழக அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பும், பரபரப்பும் தொற்றிக் கொண்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? 26 தொகுதிகளுக்கு வெளியான உத்தேச பட்டியல்! குஷ்பு, அண்ணாமலை மிஸ்ஸிங்! -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
கொஞ்ச நஞ்சம் பேச்சா? சொந்த ஊருக்கே போங்க! அண்ணாமலைக்கு 2 தரப்பும் அழுத்தம்? களத்தில் கோவை கொதிக்குதே -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
அண்ணாமலைக்குப் போகிறதா கோவை வடக்கு.. சட்டென வானதி சீனிவாசன் கொடுத்த ரியாக்ஷன் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications