சின்ன வெங்காயம் சர்னு போயிடுச்சு.. கோயம்பேட்டையே மலைத்து பார்த்த சென்னை வியாபாரிகள்.. இதென்ன புதுஸா?
சென்னை: ஓரளவு குறைந்து காணப்பட்ட சின்ன வெங்காயத்தின் விலை, திடீரென விலை அதிகரித்து காணப்படுகிறது.. இது இல்லத்தரசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
கடந்த சில மாதங்களாகவே, இந்தியா முழுவதிலுமே வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது.. தமிழகத்திலும் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 150 ரூபாய் வரையிலும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 80 ரூபாய் வரையிலும் விற்பனையானது.

மத்திய அரசு: இந்நிலையில்தான், 2 மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு தரப்பில் திடீரென ஒரு உத்தரவு சமீபத்தில் வெளியாகியிருந்தது. அதாவது, விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், மக்களுக்கு வெங்காயம் கிடைப்பதை அதிகரிக்கவும், சாமானிய மக்கள் வெங்காய விலை உயர்வால் பாதிக்கப்படாமல் தடுக்கும் நடவடிக்கையாக 2024 மார்ச் மாதம் வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்து உத்தரவிட்டது.
வெங்காயத்தின் விலை கணிசமாக அதிகரித்ததன் காரணமாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்து இருப்பதாக விளக்கமும் தரப்பட்டிருந்தது.. அதுமட்டுமல்ல, மேலும் பிற நாடுகளிடமிருந்து வரும் கோரிக்கையின் அடிப்படையில் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என்றும் மத்திய அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, வெங்காய ஏற்றுமதியை மீண்டும் துவங்க விவசாயிகள் வலியுறுத்தியிருந்ததுடன், அரியலூர், பெரம்பலுார், திருச்சி, ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், சிறிய வெங்காயம் சாகுபடியும் ஆரம்பமானது.. இந்த மாவட்டங்களிலிருந்துதான், பல்வேறு மாநிலங்களுக்கு மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது..
எனினும், வட மாநிலங்களில் பெரிய வெங்காயம் சாகுபடி, கடந்த வருடம் பாதிப்பை தந்ததால், இந்த விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக, வெளிநாடுகளுக்கு அதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.. இதனால், பெரிய வெங்காயம் விலையும் கட்டுக்குள்ளேயே இருக்கிறது.. அந்தவகையில், கோயம்பேடு மார்க்கெட்டில், பெரிய வெங்காயத்தின் விலை 15 ரூபாயாக சரிந்தது. ஏற்றுமதியை கட்டுப்படுத்தாவிட்டால், கிலோ 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்திருக்கும்.
மத்திய அரசு: அதேபோல, சின்ன வெங்காயம் 1 கிலோ 20 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்தது.. இது தடை விதிப்பதற்கு முன்பு, 100 முதல் 150 ரூபாய்க்கு விற்பனையானது. அதனால்தான், ஏற்றுமதிக்கான அனுமதியை மத்திய அரசு மறுபடியும் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்... இது தொடர்பாக, பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுத வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தபடியே உள்ளனர்.
இதனிடையே, வட மாநிலங்களில் வெங்காயம் உற்பத்தி அதிகரித்து அறுவடைக்கு வந்ததாலும், வெங்காயத்தின் விலை குறைய ஆரம்பித்தது. சின்ன வெங்காயத்தின் விலை 20 ரூபாய் அளவுக்கு விற்பனையாகி வந்தது. சின்ன வெங்காயம் விலை குறைந்ததால், மக்களும் ஓரளவு நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
சின்ன வெங்காயம்: ஆனால், மீண்டும் சின்ன வெங்காயம் விலை எகிறி வருகிறது.. இன்றைய தினம் கிலோ 30 ரூபாயாக உயர்ந்துள்ளது.. சின்ன வெங்காயம் சில்லறை விற்பனையில் 40 முதல் 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுபோலவே, தக்காளி விலையும் 18 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ பீன்ஸ் 60 ரூபாய்க்கும், ஒரு கிலோ கேரட் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பீட்ரூட் 20 ரூபாய், பாகற்காய் 15 ரூபாய், சுரைக்காய், கத்திரிக்காய், முட்டைக்கோஸ், முருங்கைக்காய் ஆகியவை கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையாகின்றன.
காய்கறி விலை: காலிபிளவர் 15 ரூபாய்க்கும், சௌசௌ 18 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளரிக்காய் 17 ரூபாய்க்கும், கருணைக்கிழங்கு 15 ரூபாய்க்கும், இஞ்சி 110 ரூபாய்க்கும், மிளகாய் 30 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 20 ரூபாய்க்கும், கோவைக்காய் 25 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications