Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நுங்கு" மார்பகம்.. அந்த நொடிதான் நொறுங்கிடுச்சு.. ரகசியம் இதான்.. டாக்டர் ஷர்மி பற்றி பூரித்த டெய்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: "என் மகள் டாக்டர் ஷர்மி எல்லாருக்கும் பிடித்தமான டாக்டராகத்தான் இருந்து வந்தார், ஆனால், எங்கு, எப்போது, இதில் பிரச்சனை ஏற்பட்டது தெரியுமா?" என்று பாஜகவின் டெய்ஸி விளக்கம் ஒன்றை தந்துள்ளார்.

தமிழ்நாடு பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவு தலைவர் டெய்சி சரணின் மகள் டாக்டர் ஷர்மிகா. ஆயுர்வேதா மருத்துவம் படித்துள்ளார்.. இவர் சொல்லும் சித்த மருத்துவ குறிப்புகள் சோஷியல் மீடியாக்களில் மிகவும் பிரபலம்.. இதனால், ரசிகர்களும் அதிகம்.

சித்த மருத்துவராக ஷர்மிகா ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் அதே சமயம், சில தனியார் ஊடகங்களுக்கும் பேட்டி அளித்து வருகிறார்.. அந்தவகையில் சமீபத்தில் இவரது பேட்டிகள் சர்ச்சையை கிளப்பின.

 Are these the reasons why trouble erupted against Dr Sharmika and what did Dr.Daisy say

நுங்கு நுங்கு: தினமும் நான்கு ஸ்பூன் நெய் சாப்பிட்டால் முகம் பொலிவாகும், பெண்கள் கவிழ்ந்து படுத்தால் மார்பக புற்றுநோய் உண்டாகும்.. ஒரே ஒரு குலாப் ஜாமுன் சாப்பிட்டால் 3 கிலோ எடை கூடிவிடும்..பெண்களின் மார்பகங்களை போலவே இருக்கும் நுங்குவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மார்பகங்கள் பெரிதாக மாறும்... அவரவர் செய்யும் நன்மைகள், தீமைகளை வைத்துதான் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றெல்லாம் ஷர்மிகா பேசியது பரபரப்பை கிளப்பியது..

இதையடுத்து, ஹோமியோபதி மருத்துவத்துறை இதுகுறித்த பகீர்களை விசாரிக்க முடிவு செய்து நோட்டீஸ் அனுப்பியது... சித்த மருத்துவ கவுன்சில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப, ஷர்மிகாவும் நேரில் ஆஜராகி விளக்கம் தந்தார்.. இதைதவிர, ஷர்மிகாவின் வீடியோக்களில் சொன்ன மருத்துவக் குறிப்புகளை பின்பற்றியதால் பாதிப்பு ஏற்பட்டதாககூறி, 2 பேர் ஷர்மிகா மீது இந்திய மருத்துவ ஆணையரகத்தில் புகார் சொல்லி உள்ளனர்.. இப்படியான சர்ச்சைகள் வெடித்து கிளம்பிய நிலையில், டெய்சி சரண் ஒரு சேனலுக்கு பேட்டி தந்துள்ளார். அதில், தன்னுடைய மகளை பற்றி சில கருத்துக்களை தெரியப்படுத்தி உள்ளார்..

 Are these the reasons why trouble erupted against Dr Sharmika and what did Dr.Daisy say

வால்நட்: டெய்சி சொல்லும்போது, " ஷர்மி மீது நிறைய சர்ச்சை வந்ததால், அதை பத்தி நான் சொல்லிடறேன்.. அவள் எல்லாருக்குமே பிடிச்ச டாக்டராகத்தான் இருந்தாள்.. உதாரணமாக, நான் சொல்ற இந்த சிகிச்சையை எடுத்துக்குங்க.. தினமும் காலையில், 10 பாதாம், 3 பேரிச்சம் பழம், 20 உலர் திராட்சை, 2 வால்நட்.. இது எல்லாத்தையும் நைட் ஊற வைத்து, காலையில் அரைத்து குடித்துவிட வேண்டும்.. காலையில் சாப்பாடு சாப்பிடலேன்னாலும் பரவாயில்லை..

ஒரு மாசம் கழித்து பார்த்தால், உங்களுக்குள் வந்து கொண்டிருந்த தலைவலி உட்பட சிறு சிறு பிரச்சனைகள் நீங்கியிருக்கும்.. நிறைய வியாதிகள் குணமாகும்.. காரணம், இது dry fruit juice என்பது அந்த அளவுக்கு நிறைய மாற்றத்தை தரும்.. இதைதான் என் மகள் ஷர்மி சொன்னாள்.. ஷர்மி சொன்னதா, நிறைய பேர் ட்ரை செய்து பார்த்துள்ளனர்.. நல்ல ரிசல்ட்டை தந்துள்ளதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

சீக்ரெட்: ஆனால், ஷர்மிக்கும், எனக்கும் ஒரு ஒப்பந்தம் இருந்தது.. அந்த ரகசியத்தை இப்போது நான் சொல்கிறேன்.. ஆரம்பத்தில், நீ என்னுடைய மகள் என்பதை யாரிடமும் நீ சொல்லக்கூடாது என்று சொல்லியருந்தேன்.. அதனால், அவளாகவே சொந்தக்காலில் நின்று சம்பாதிக்க ஆரம்பித்தாள்.. முதல் சம்பளம் ரூ. 14 ஆயிரம் வாங்கினாள்... ஆஸ்பத்திரி நிர்வாகத்தையும் தெரிந்து கொள்ள ஆரம்பித்தாள்.. சாதிக்க வேண்டும் என்று அவளுக்குள் ஒரு வெறி வந்தது.. நிறைய புத்தகங்களை படிப்பாள்.. இதன்மூலம் தன்னை தானே மெருகேற்றி கொண்டாள்.
நாளடைவில், என்னை சந்திக்க வரும் நோயாளிகளைவிட, ஷர்மியை சந்திக்க வரும் நோயாளிகளின் எண்ணிக்கைஅதிகமானது.. அதற்கு பிறகுதான், என்னுடைய மகள் என்பதை, அவளது 26வது வயது பிறந்தநாளின்போது, ஒருபெரிய யூடியூப் சேனலை வரவழைத்து, வெளிப்படுத்தினோம்.. ஆனால், அந்த நாளில் இருந்துதான் பிரச்சனை ஆரம்பானது.. நடுநிலை ஊடகங்கள், ஷர்மியை கலாய்ப்பதில்லை, காயப்படுத்தியதில்லை.. கலாய்த்து, விமர்சித்த மீடியாக்கள் என்னென்னவென்று உங்களுக்கே தெரியும். இதனால் ஷர்மி நிறைய மன அழுத்தத்துக்கு ஆளானார்" என்று டெய்சி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+