Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"குரு பார்வை".. இப்ப நீங்க ஆரம்பியுங்க.. எகிறிய மெசேஜ்.. "உள்ளே வெளியே" ஆடும் பிஜேபி.. அப்ப எடப்பாடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமமுக அடுத்தக்கட்ட நகர்வுக்கு நுழைவதாக தெரிகிறது.. இதற்கு பின்னணியில் பாஜக இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.. என்ன நடக்கிறது தமிழக அரசியலில்?

இடைத்தேர்தல் ரில்சல்ட் வெளியானதுமே "ஒருங்கிணைந்த, பலமான அதிமுகவையே பாஜக விரும்புகிறது என்று அதிரடியாக பேட்டி தந்தது, எடப்பாடி டீமுக்கு மேலும் கொதிப்பை தந்துவிட்டதாம்..

அதனால்தான், தங்களை தேடி வந்த பாஜக அதிருப்தியாளர்களை மனமுவந்து அதிமுக ஏற்றுக் கொண்டதாக சொல்கிறார்கள்.. இதை பார்த்து எரிச்சலடைந்த அண்ணாமலை, அன்றைய தினமே சூட்டோடு சூட்டாக ஓபிஎஸ்ஸை தேனியில் தேடிப்போய் சந்தித்த காரணமும் இதனால்தானாம்.

 பஞ்ச் பஞ்ச்

பஞ்ச் பஞ்ச்

ஓபிஎஸ்ஸூக்கு ஆறுதல் சொன்னதோடு நிற்காமல், "ஓபிஎஸ் மீண்டும் வருவார் - மீண்டு வருவார்" என்று பஞ்ச் பேசி, மேலும் டென்ஷனை ஏற்றவும், எடப்பாடி டீம் தகிக்க துவங்கிவிட்டது.. எல்லாவற்றிற்கும் மேலாக, ஜெயலலிதாவைவிட என்னுடைய தாயார் 100 மடங்கும், எனது மனைவி 1000 மடங்கும் பவர்புல் லேடி என்று அண்ணாமலை சொல்லவும், கோபத்தின் உச்சிக்கே போய்விட்டதாம் எடப்பாடி டீம்.. அதனால், அதிமுக தலைவர்களே சமாதானம் ஆனாலும் தொண்டர்களை சமாதானம் செய்வது கஷ்டம் என்கிறார்கள்.. ஜெயலலிதாவையே சீண்டிவிட்டதால், தொண்டர்கள் தேர்தல் சமயத்தில் இறங்கி வேலைபார்ப்பார்களா? கூட்டணி உறவை அண்ணாமலையின் பேச்சு நிச்சயம் பாதிக்கும் என்ற கருத்துக்கள் இன்னமும் அரசியல் களத்தில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.

 நோ வம்பு

நோ வம்பு

அதுமட்டுமல்ல, தன்னை கருணாநிதி, ஜெயலலிதா அளவுக்கு தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் ஆளுமையாக அண்ணாமலை கருதுவது அதிமுகவுக்கு மட்டுமல்ல, பாஜகவில் உள்ள சீனியர்கள் பலருக்கும் பிடிக்கவில்லை என்ற தகவல்களும் வலுவாகவே சுற்றிக் கொண்டிருக்கின்றன. பாஜக தேசிய தலைவர் நட்டா வந்திருந்தபோதுகூட, "அதிமுகவுடன் சுமூகமாக செல்ல வேண்டும். அதிமுக தொண்டர்களுடன், தலைவர்களுடன் வம்பு வளர்க்க வேண்டாம். அதிமுக தலைமை குறித்து எந்த குறையையும் சொல்லக்கூடாது. இதை தமிழக பாஜக தலைவரும், நிர்வாகிகளும், தொண்டர்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்" என்று அறிவுறுத்தியிருந்த நிலையிலும்கூட, அதிமுகவுடன் கூட்டணியே வேண்டாம் என்று அண்ணாமலை கூறியிருந்தது, குழப்பத்தை அதிகப்படுத்தியதாகவே பார்க்கப்பட்டது..

 தலையில் குட்டு

தலையில் குட்டு

இதனிடையே, டெல்லியில் உள்துறை அமைச்சரை சந்தித்துவிட்டு திரும்பிய நிலையில், மதுரை ஏர்போர்ட்டில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது, அதிமுக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு அண்ணாமலை "கூட்டணியை பொருத்தவரை எங்களுக்குள் எந்த குழப்பமும் இல்லை.. பாஜக மூத்த தலைவர்கள் இடம் பெற்றுள்ள பார்லிமெண்டரி குழு அதுகுறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அந்த குழுவே கூட்டணி தொடர்பான விஷயங்கள் குறித்து முடிவெடுக்கும். பாஜக கட்சிக்கோ, எனக்கோ தனிப்பட்ட முறையில் எந்த ஒரு கட்சியின் மீதும், எந்த ஒரு தலைவரின் மீது கோபமோ, ஆதங்கமோ எதுவும் இல்லை" என்றார்.. ஆக, பாஜக தலைமையை சந்தித்தபிறகு, அண்ணாமலையின் பேச்சில் நடவடிக்கை தென்படுவதை காண முடிந்தது..

 காய் நகர்த்தல்

காய் நகர்த்தல்

இந்நிலையில், 2 விதமான முடிவுகளை அண்ணாமலை தரப்பு எடுத்துள்ளதாம்.. அதன்படி, எடப்பாடி பழனிசாமியுடன் நேரடியாக மோத வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.. அதேநேரம், ஓபிஎஸ்ஸை நம்பி இனியும் பலனில்லை என்ற முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது.. அதனால், டிடிவி தினகரன் மீது குறி பாய்ந்துள்ளதாம்.. அதாவது, டிடிவியை வைத்து எடப்பாடிக்கு குடைச்சல் கொடுக்க முடிவெடுத்திருக்கிறதாம்... இது தொடர்பாக, தஞ்சையில் தங்கிருந்த டிடிவி தினகரனை, அண்ணாமலையின் ஆலோசகர்கள் சமீபத்தில் சந்தித்து பேசியதாகவும் சொல்கிறார்கள். ஓபிஎஸ்ஸுக்கு பக்க பலமாய் ஒரு ஆடிட்டர் உள்ளதாக சொல்லப்பட்டு வரும்நிலையில், அவரது யோசனைப்படியே இந்த சந்திப்புகள் நடந்துள்ளதாக தெரிகிறது..

 பிரஷர் எகிறுதே

பிரஷர் எகிறுதே

இந்த சந்திப்பின்போது, "எடப்பாடி பழனிசாமியின் கூடாரத்தை கலைக்க ஓபிஎஸ்ஸால் முடியவில்லை. அதனால், நீங்கள் களத்தில் இறங்குங்கள், நாங்கள் துணையாக இருக்கிறோம் என்று தினகரனிடம் சொல்லப்பட்டதாம்.. இதற்கு தினகரனும் பச்சைக்கொடி காட்டி உள்ளார்.. அந்தவகையில், ஏப்ரல் 11-ம் தேதி தென் மாவட்டங்களுக்கு விசிட் அடிக்கவும் தயாராகி வருகிறாராம்.. தென்மண்டலமே திரும்பி பார்க்கும் அளவுக்கு பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் ஒன்றுக்கும் ஏற்பாட்டு செய்யப்படுகிறதாம்... இந்த கூட்டத்தில், எடப்பாடி டீமை சேர்ந்த முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் அதிமுகவினரை ஆயிரக்கணக்கில் அமமுகவில் இணைத்து எடப்பாடிக்கு ஷாக் தர போகிறார்களாம்.

 10,85,985

10,85,985

தென்மண்டலங்களை பொறுத்தவரை டிடிவி தினகரன் வலுவாக உள்ளார்.. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 160 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக, 10,85,985 வாக்குகளை பெற்றிருந்தது.. இப்போதுகூட, தென்மாவட்டங்களில் 15 சதவீதம் டிடிவிக்கு வாக்கு வங்கி உள்ள நிலையில், இவைகளை எடப்பாடி பழனிசாமியால் எட்ட முடியுமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.. அதனால்தான், டிடிவி தினகரனை, கூட்டணிக்குள் இணைத்து கொள்வதில், பாஜக அதிக ஆர்வத்தை தொடர்ந்து காட்டி வருகிறது.. தினகரன் கூட்டணியில் இருக்கும் போது, தென்மண்டலங்களிலும் காலூன்ற முடியும் என்றும் பாஜக கணக்கு போடுகிறது.

 நடுங்கும் கூடாரம்

நடுங்கும் கூடாரம்

ஆனால், பெரும் விசுவாசியான ஓபிஎஸ்ஸையே இன்று பாஜக கண்டுகொள்ளாத நிலையில், தனக்கும் அந்த நிலை வரக்கூடும் என்பதை தினகரன் யோசிக்காமல் இல்லையாம்.. இடைத்தேர்தல் சமயத்தில், ஓபிஎஸ்ஸை கழட்டிவிட்ட பாஜகவையும் அமமுக தரப்பு கவனிக்காமல் இல்லை.. "பக்குவம் வாய்ந்த தலைவர்" என்று தமிழக அரசியல் களத்தில் பெயரெடுத்துள்ள டிடிவி தினகரன், அனைத்தையும் கணக்குபோட்டுதான் பொறுமையுடன் அணுகிவருகிறாராம்.. எனினும், இப்போதைக்கு, எடப்பாடிக்கு எதிரான தென்மண்டல ஆபரேஷனை கையில் எடுக்க போவதாக தகவல்கள் கூறுகின்றன.. இதை எப்படி எடப்பாடி கூடாரம் முறியடிக்க போகிறது? என்பது தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

கலர் மாறுதே

கலர் மாறுதே

இப்படி ஒரு ரூட்டை மறைமுகமாக அண்ணாமலை தரப்பு மேற்கொள்ள போவதாக சொல்லப்பட்டு வரும்நிலையில், "பாஜக கூட்டணியில் தான் அதிமுக உள்ளது" என்பதை பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா நேற்றைய தினம் தெரிவித்திருத்துள்ளார்.. அதைவிட முக்கியமாக, இதே கருத்தை இன்றைய தினம் எடப்பாடியும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கூட்டணி குறித்து அமித்ஷா இவ்வாறு சொல்லியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதைதானே ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறோம், நாடாளுமன்ற தேர்தலுக்கும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்.. அதிமுக கூட்டணியில் தான் பாஜக இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+