"நிஜம்" நிழலாகிறது..அமித்ஷா சொன்ன அந்த பிரதமர் வேட்பாளர் "இவர்"தானாமே.. படக்குனு பார்த்த "அறிவாலயம்"
சென்னை: தமிழகத்திலிருந்து யார் அந்த பிரதமர் ? என்பதுதான் தமிழக அரசியல் கட்சிகள் மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டிருக்கின்றன. அமித்ஷா ஏன் அப்படி சொன்னார்? யாரை மனதில் வைத்து சொன்னார்? என்ற கேள்விகளும் கிளம்பி உள்ளன.
ஒவ்வொருமுறை அமித்ஷா தமிழகம் வரும்போதும், சொந்த கட்சியின் நலன் குறித்தும், திட்டங்கள் குறித்தும், வியூகங்களை வகுத்து தந்துவிட்டு செல்வார்.. அல்லது முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி, சில திட்டங்களையும், அறிவுரைகளையும் தந்துவிட்டு செல்வார்.
அமித்ஷா சொன்னது யாரை: ஆனால், இந்த முறை அமித்ஷாவின் தமிழகம் வருகையானது, முழுக்க முழுக்க தேசிய அரசியலை மையப்படுத்தியும், எதிர்க்கட்சிகளுக்கு கலக்கத்தையும் குழப்பத்தையும் உண்டுபண்ணக்கூடிய வகையிலும் அவரது, ராஜதந்திர பேச்சுக்கள் அமைந்திருந்தன.
முக்கியமாக அமித்ஷா பேசியபோது, "தமிழகத்தில் முதல்வர் ஆகவேண்டும் என்று மட்டும் நினைக்காமல், தமிழகத்தில் இருந்து ஒருவர் இந்த நாட்டின் பிரதமராக வரவேண்டும் என நினைக்க வேண்டும்.. ஏழை குடும்பத்தில் பிறந்த ஒருவரை பிரதமராக்க வேண்டும். இதை பாஜகவால்தான் செய்ய முடியும்" என்று அழுத்தமாக வலியுறுத்திவிட்டு சென்றுள்ளார் அமித்ஷா...

யார் அவர்: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியின் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியபோது, இந்த வார்த்தைகளை அமித்ஷா தெரிவித்துள்ளார். "தமிழகத்திலிருந்து ஒருவர் பிரதமர் ஆகும் வாய்ப்பு இரண்டு முறை வந்தது. அதனை கெடுத்தது திமுகதான்.. ஆனால், தமிழகத்திலிருந்து ஒரு பிரதமரை பாஜக உருவாக்கும்" என்று சொல்லியிருக்கிறார் அமித்ஷா.
அமித்ஷாவின் இந்த பேச்சுதான் தமிழக அரசியலை உலுக்கி எடுத்து வருகிறது.. ஆனால், அமித்ஷா சொன்னதுபோல, தமிழகத்துக்கு 2 முறை பிரதமர் வாய்ப்பு வரவில்லை.. மொத்தம் 4 முறை வந்துள்ளது என்பதே உண்மை..
இதில் காமராஜருக்கு மட்டும் 3 முறை, பிரதமர் சான்ஸ் வந்திருக்கிறது.. மூப்பனாருக்கும் பிரதமர் பதவி தேடி வந்தது.. ஆனால், காமராஜரும் சரி, மூப்பனாரும் சரி, பிரதமர் பதவியை விரும்பவில்லை.
4 முறை சான்ஸ்: காமராஜருக்கு வாய்ப்பு வந்தபோது அதனை தடுப்பதற்கான வலிமை திமுகவிடம் அப்போது இல்லை என்பதே உண்மை.. அதேபோல மூப்பனாருக்கு வாய்ப்பு வந்தபோது, கலைஞர் அதை விரும்பவில்லை என்றும், மூப்பனாரே வேண்டாம் என மறுத்தார் என்றும் இரு வேறு செய்திகளும் உண்டு. அதனால், இந்த விஷயத்தில் திமுக மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பது வேறு விஷயம்..
எனினும் அமித்ஷாவின் வார்த்தைகளை மட்டுமே எடுத்துக் கொண்டாலும்கூட, அமித்ஷா ஏதோ போறப்போக்கில் இதை சொல்லவில்லை... நிஜமாகவே அழுத்தமாகவே சொல்லி உள்ளதுதான் பலரது கவனத்தையும் திருப்பி வருகிறது.. அமித்ஷா சொல்லும் அந்த பிரதமர் வேட்பாளர் யார்? அப்படியானால் எதற்காக அமித்ஷா அப்படி சொல்ல வேண்டும் ? பிரதமர் வேட்பாளர் மோடி இல்லையா? என்றெல்லாம் விவாதங்கள் பறக்கின்றன.
போட்டி: இது குறித்து நம்முடைய "ஒன் இந்தியா" தமிழ் சார்பாக நாம் விசாரித்தபோது, "தென்சென்னையில் பிரதமர் மோடி அல்லது கவர்னர் தமிழிசை களமிறங்க வைக்க திட்டமிடப்படுகிறதாம்.. மோடி தமிழகத்தில் போட்டியிட்டால், தமிழகத்தில் பாஜக சில இடங்களை கைப்பற்ற முடியும் என்றும், போட்டியிடுவதால் தென்னிந்தியாவில் பாஜகவின் பலம் தேர்தலில் அதிகரிக்கும் என்றும் கூட்டிக்கழித்து கணக்குப் போடுகிறார்களாம். அதனால் தென்சென்னையில் மோடியே நேரடியாக களமிறங்குவார் என்கிறார்கள்.
ஒருவேளை மோடி போட்டியிடாவிட்டால், அமித்ஷாவின் நம்பிக்கைக்குரிய கவர்னர் தமிழிசை போட்டியிட நிறையவே வாய்ப்புள்ளதாம்.. தமிழிசையை களமிறக்குவதன் மூலம் நாடார் சமூக வாக்குகளை பாஜக பக்கம் திருப்ப முடியும் எனவும் நினைக்கின்றனர்.
கால்குலேஷன்: எனினும், தேர்தல் முடிவுகள், பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காமல், தொங்கு பாராளுமன்றம் அமைக்கும் வகையில் அமைந்தால், அப்போது பிரதமராக மோடி இருக்க மாட்டார் என்றும், அந்த சமயத்தில் தமிழகத்திலிருந்து தமிழிசை தேர்வு செய்யலாம் என்றும் கால்குலேசன் பலமாக போடப்படுகிறது.. இதையெல்லாம் மனசில் வைத்தே, அமித்ஷா பேசியிருப்பதாகவும், அவர் பேச்சில் இருக்கும் மர்மம் இதுதான்" என்றும் நம்மிடம் சொல்கிறது விபரமறிந்த வட்டாரம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications