திமிங்கிலம் சிக்குது.. "திமுகவை உடனடியா அம்பலப்படுத்துங்க".. பாயிண்ட் எடுத்து தந்த எடப்பாடி பழனிசாமி
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய ஒவ்வொரு பிரச்சாரத்திலும், மிக கவனமாகவே நடந்து கொண்டு வருகிறார். அத்துடன் திமுகவை எப்படியாவது டேமேஜ் செய்ய வேண்டும் என்ற தீவிரத்திலும் இறங்கியிருக்கிறாராம். இதுகுறித்த ஸ்பெஷல் தகவல் ஒன்று நமக்கு கிடைத்திருக்கிறது.
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கிவிட்டன.. அந்தவகையில், தமிழகத்தில் 4 முனைப்போட்டி நிலவுகிறது.. ஆளுக்கு ஒருபக்கம் பிரச்சாரங்களை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

பிரச்சாரம்: நேற்றுகூட எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பிரச்சாரத்தில் பேசும்போது, "தமிழ்நாட்டில் 3 கூட்டணிகள் இருந்தாலும், அதிமுக - திமுக இடையேதான் போட்டி" என்று வெளிப்படையாகவே கூறி திமுகவை திரும்பி பார்க்க வைத்துள்ளதுடன், பாஜகவையும் கடுப்பாக்கி உள்ளார்.
இந்த நேரத்தில் இன்னொரு சம்பவத்தையும் நாம் குறிப்பிட வேண்டியிருக்கிறது.. வழக்கமாக அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சாரம் செய்யும்போது, அந்தந்த பகுதிகளில் பெண்கள் ஆரத்தி எடுப்பது வழக்கம். அப்படி ஆரத்தி எடுக்கும்போது, ஆரத்தி தட்டில் பணம் போடுவதும் சம்பிரதாயம்.. அப்படித்தான், நேற்றைய தினம் சேலத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தனர்..
ஆரத்தி தட்டு: அப்போது அதிமுக வேட்பாளர், அந்த பெண்களுக்கு தருவதற்காக சட்டைப்பையில் பணம் எடுக்க முயன்றார். உடனே எடப்பாடி பழனிசாமி, ஏய், ஏய், எடுக்காதே, எடுக்காதே என்று சத்தம் போட்டார்..
காரணம், ஓட்டுக்குப் பணம் தந்தாலும், அது தேர்தல் விதிமுறையை மீறிவிடுவதாகும்.. இப்படித்தான் ஒருமுறை, 100 ரூபாய் பணத்தை ஆரத்தி தட்டில் போட்டு, நடிகர் வையாபுரி 8 வருடம் தேனியில் கோர்ட் கேஸ் என அலைந்தார். அதனால்தான், எடப்பாடி பழனிசாமி தன்னுடைய அதிமுக வேட்பாளரை ஆரத்தி தட்டில் பணம் போடாமல் தடுத்துவிட்டார்.
அதாவது, தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக வழக்கறிஞர் அணியின் மாநில தலைவர் இன்பதுரை உள்ளிட்ட அதிமுக சீனியர் வழக்கறிஞர்களுடன் நேற்று விவாதித்திருக்கிறார்.
தேர்தல் களம்: அப்போது எடப்பாடி பழனிசாமி சில உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறாராம்.. குறிப்பாக, "தேர்தல் களத்தில் திமுக, பாஜக கட்சியினர் தேர்தல் விதிகளை மீறுவார்கள். அதனை கண்டறிந்து உடனுக்குடன் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் அனுப்ப வேண்டும். அதேபோல, அதிமுகவுக்கு எதிராக நம் எதிரிகளும் துரோகிகளும் சட்டப்பிரச்சனைகளை பெரிதாக்குவார்கள். இதன் மூலம் நம்முடைய வேட்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆராய்ந்து உடனுக்குடன் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications