39 - 13.. எடப்பாடியின் தோளை தொட்டு..ஆஹா, அமித் ஷா டுவிஸ்டு.. குறுக்கே "அவர்" வேற..பக் பக் பழனிசாமி
சென்னை: தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக சென்னை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. இதனால், தமிழக பாஜக, தெம்பிலும், உற்சாகத்திலும் காணப்படுகிறது.. மற்றொரு பக்கம், அதிமுக தரப்பில் வழக்கம்போல் அனல் அடித்து கொண்டிருக்கிறது.. என்ன காரணம்?
எம்பி தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. ஹாட்ரிக் வெற்றிக்காக பாஜக முயன்று கொண்டிருக்கிறது. இதற்கான வியூகங்களை கையில் எடுத்தும் வருகிறது.
அந்தவகையில் தமிழகத்தில் 10 இடங்களிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இறங்கி உள்ளது.. இதற்காக தாங்கள் பெரிதாக கால்ஊன்ற முடியாத பகுதிகளில், தேர்தல் வியூகங்களை முடுக்கிவிட்டுள்ளது. அத்துடன், தென்மாவட்டங்களை போலவே, வடமாவட்டங்களில் பலத்லும் கூட்ட வேண்டும் என்று பாஜக மேலிடமே உத்தரவு போட்டுள்ளதாக தெரிகிறது..
பொதுக்கூட்டம்: இதை மையப்படுத்தியே, பாஜக உள்துறை செயலாளர் அமித்ஷாவே நேரடியாகவே தமிழகத்துக்கு இன்று வருகை தருவதாக சொல்கிறார்கள். வேலூரில் நடக்க உள்ள மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கிறார்.. இந்த வேலூர் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசுவது மிகுந்த முக்கியத்துவம் பெற்று வருகிறது. அதேபோல, தென்சென்னையில் இந்த முறை கூடுதல் கவனத்தை பாஜக செலுத்த போவதாக தெரிகிறது.
வாக்கு சதவீதம்: காரணம், பாஜகவின் செல்வாக்கு பெற்ற டாப் 10 தொகுதிகளில், தென் சென்னை தொகுதியும் ஒன்று... இந்த பகுதியில், தனித்து போட்டியிட்டே ஒரு லட்சம் வாக்குகளை பாஜக பெற்றிருக்கிறது.. இந்த முறை பாஜகவால் பெரிதும் நம்பப்படும் தொகுதியாகவும் இது இருக்கிறது.. அதனாலேயே, சென்னை வரும் அமித்ஷா, முதல்வேலையாக, தென்சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுடன் ஆலோசனையை நடத்துகிறாராம்.

அந்தவகையில், இந்த தொகுதியை கைப்பற்ற பாஜகவினருக்கு அமித்ஷா வியூகம் அமைத்து கொடுப்பார் என்றே தெரிகிறது.. மேலும், இந்த தொகுதியில் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் ஆலோசனை வழங்கக்கூடும்..
தென்சென்னை: இந்த தென்சென்னை தொகுதியை பொறுத்தவரை, பெரும்பாலும் திமுக, காங்கிரஸ் வசமே அதிக முறை இருந்துள்ளது.. வேளச்சேரி, தியாகராய நகர், மயிலாப்பூர் பகுதிகளில் பிராமணர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இது தவிர, முதலியார், மீனவர்கள், தலித்துகள் எனப் பலதரப்பட்ட மக்களையும் உள்ளடக்கியது தென் சென்னை தொகுதி..
அதேபோல், அரசு ஊழியர்கள், ஐடி ஊழியர்கள் என்று படித்தவர்கள் எண்ணிக்கையும் இந்த தொகுதியில்தான் அதிகம் உள்ளனர்.. அதனால், வாக்குகள் ஒரே இடத்தில் குவியும் என்று எதிர்பார்க்க முடியாது.. மேலும், அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு சமமான வாக்கு வங்கி இந்தத் தொகுதியில் உள்ளது.. இவைகளை எல்லாம் கணக்கு செய்தே, பாஜக வியூகத்தை தட்டி விட்டுள்ளது.
கூட்டணி உறுதி: ஏற்கனவே அதிமுகவுடனான கூட்டணியை முடிவு செய்ததும், இறுதி செய்ததும், அதை பகிரங்கமாக பேட்டியில் தெரிவித்ததும் அமித்ஷாதான்..
கூட்டணி சிக்கல் இனி இருக்க வாய்ப்பில்லை என்றாலும், எடப்பாடி பழனிசாமி + ஓபிஎஸ் இவர்களை அணுகும் போக்கு எப்படி இருக்க போகிறது என்பதே பெரிய ஆர்வமாக எழுந்துள்ளது.. இன்றைய தினம் இரவு, பாஜக தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளார். இதில் பாஜக தலைவர்களான அண்ணாமலை, எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளனர்.
தொடர்ந்து, கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து எம்பி தேர்தல் குறித்து அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளார்.. அப்போது எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. ஏற்கனவே டெல்லியில் கூட்டணி பேசும்போது, பாஜக தரப்பில் நிறைய இடங்களை ஒதுக்க வேண்டும் என்று அதிமுகவிடம் கேட்டதாக தெரிகிறது.. மீண்டும் இதே கோரிக்கை இன்று வலியுறுத்தப்படலாம்.
தொகுதி விவரங்கள்: அநேகமாக பாஜக போட்டியிட நினைத்துள்ள தொகுதிகளின் விவரங்கள் குறித்து இன்றைய தினம் தெரிவிக்கப்படும் என்றும் தெரிகிறது. அதே நேரத்தில் பாஜக போட்டியிட நினைக்கும் தொகுதிகளில் அதிமுகவுக்கு அதிக செல்வாக்கு உள்ள பல தொகுதிகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அதிமுக சம்மதிக்கும் பட்சத்தில் உடனடியாக தேர்தல் வேலைகளை தொடங்க பாஜக முடிவு செய்துள்ளது.
13 தொகுதிகள்: அன்று டெல்லியில் கூட்டணி பேச்சுவார்த்தையின்போதே, சீட் எத்தனை என்பது உட்பட எந்தெந்த இடங்களில் போட்டி என்பது வரை பேசியதாக தகவல்கள் வெளியாகின.. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், மீட்டிங் முடிச்சிட்டு வெளியே வரும்போது, எடப்பாடியின் முதுகில் அமித்ஷா தட்டிக்கொடுத்துள்ளார்.. "Aanewale Chief minister.. Congrats" (வாருங்கள் எதிர்கால முதலமைச்சரே.. வாழ்த்துக்கள்) என்று தெரிவித்ததாக அமித்ஷா சொன்னாராம்.
முன்னதாக நடந்த பேச்சுவார்த்தையில், எடப்பாடி பழனிசாமியிடம், மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளை பாஜக தரப்பில் கேட்டதாகவும், அதற்கு எடப்பாடி பழனிசாமியும் ஒப்புக்கொண்டாராம்.. அந்தவகையில், பாஜக 13 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளது என்றார்கள். ஆனால், இன்றைய தினம் இந்த எண்ணிக்கை கூடுமா? குறையுமா? என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பு.
இதனிடையே, அமித்ஷாவை முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸூம் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. நேரம் கிடைக்கும் பட்சத்தில் அவரும் அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளார்... ஓபிஎஸ்ஸை சந்திக்க அமித்ஷா அப்பாயிண்மென்ட் தருவாரா? அல்லது புறக்கணிப்பாரா தெரியவில்லை.. ஆனால், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினாலும்கூட, 2 பேரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பஞ்சாயத்து செய்வார் என்றே நம்பப்படுகிறது..
ஓபிஎஸ் அப்பாயிண்மென்ட்: ஏற்கனவே, ஓபிஎஸ்சை ஒருபோதும் கட்சியில் சேர்க்க முடியாது என்று எடப்பாடி தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறார்.. ஓபிஎஸ்ஸை சேர்க்க வேண்டாம் என்றும் பாஜக தரப்பில் அழுத்தம் தந்து வருகிறார். இப்படி இருக்கும்போது, இந்த சந்திப்பு என்னாக போகிறது? என்ற எதிர்பார்ப்பும் எகிற வருகிறது.. ஆக மொத்தம், அமித்ஷாவின் வருகையானது, மிகப்பெரிய அதிர்வலையை தமிழக அரசியலில் ஏற்படுத்தும் என்றே கணிக்கப்படுகிறது.. பொறுத்திருந்து பார்க்கலாம்..!!
-
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications