"துண்டு" போட்டாச்சு போல.. 2 கட்சிகள் ரெடி?.. பற்ற வைத்த "தம்பி".. டக்கென திரும்பிய திமுக.. அப்ப பாஜக
தம்பிதுரை, விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து கருத்து கூறியுள்ளார்
சென்னை: அதிமுக மற்றும் திமுக கூட்டணிக்குள் சலசலப்புகள் எழ ஆரம்பித்துவிட்டன.. இந்த சலசலப்புகளை வைத்து, அந்தந்த கட்சி சீனியர்கள், "அரசியல் கணக்கு" போடவும் துவங்கி உள்ளனர்.
திமுகவின் அரசியல், அதன் கூட்டணி கட்சிகளுக்கே தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது.. முதன்முதலில் பதவியேற்றபோது இருந்த, "ஒன்றியம்" பிரச்சனையாக இருந்தாலும் சரி, "திராவிட மாடல்" விவகாரமாக இருந்தாலும், சமீபகாலமாகவே அடக்கி வாசித்து வருகிறது.
இதற்கு காரணம், மாநில நலன் மீதான அக்கறை, அல்லது மக்கள் நல திட்டங்கள் சீராக நடக்க வேண்டும் என்ற பொறுப்பாகவும் இருக்கலாம்.. எனவே, மத்திய அரசை முற்றிலுமாக பகைத்து கொள்ள முடியாத போக்கில் திமுக அரசு உள்ளது.

விசிக - திருமாவளவன்
பட்டினப்பிரவேச விவகாரம் முதல் ஆதீனங்கள் விவகாரங்கள் வரை கூட்டணி கட்சிகள் கொந்தளித்து கொண்டிருக்கின்றன.. ஆனால், "இது எல்லாருக்குமான அரசு" என்று திமுகவின் தன்னுடைய அணுகுமுறையை மேற்கொண்டு வருகிறது.. அந்த நெருடல், திருமாவளவனுக்கும், கி.வீரமணிக்கும் இல்லாமல் இருக்காது என்றாலும், "அரசியல் வேறு, ஆட்சி வேறு" என்ற தங்கள் தரப்பு விளக்கங்களை வேறு வழியில்லாமல் அவர்கள் தந்து வருகிறார்கள் என்றே தெரிகிறது.

உரசல்
இப்படிப்பட்ட சூழலில்தான், யதேச்சையாக, அதிமுக - தமிழக பாஜக இடையே லேசான உரசல் தொடங்கியிருக்கிறது.. இந்த உரசலை, பாமகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் பயன்படுத்தி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.. "பாஜகவை கழட்டிவிடுங்கள்" என்று அன்புமணி ராமதாஸ், எடப்பாடி பழனிசாமியை நேரிலேயே சந்தித்து வலியுறுத்தியதாக ஏற்கனவே செய்திகள் பரபரத்தன..

பொன்னையன்
அதேபோல, கம்யூனிஸ்ட் கட்சிகளும் இது தொடர்பாக அதிமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. "பொன்னையன் பேசியது சரியே.. இப்போதைக்கு பாஜகவுடனான உங்கள் எதிர்ப்பில் உறுதியாக இருங்க.. இப்படியே இருந்தால், அதாவது பாஜகவை தவிர்த்துவிட்டு நாம் அனைவரும் ஒன்றிணைந்தால், அது மிகப்பெரிய வலிமை மிக்க கூட்டணியாக இருக்கும்.. பாஜக அல்லாத அணிக்கு தயாராவோம்" என்று சொன்னதாக தெரிகிறது..

ரியாக்ஷன்
அதற்கு இதற்கு என்ன ரியாக்ட் செய்தது என்று தெரியாவிட்டாலும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க, கடந்த முறை சட்டசபை தேர்தலின்போதே, கம்யூனிஸ்ட் கட்சி முயன்றதாகவும், சில பேச்சுவார்த்தைகளும் மறைமுகமாகவும் அப்போது நடந்ததாக தகவல்கள் கசிந்தன.. ஒருவேளை திமுக, வரப்போகும் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தாலோ, அல்லது பெரிதளவிலான எதிர்ப்புகளை பாஜகவுக்கு காட்டாவிட்டாலோ, நிச்சயம் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த முறை கூட்டணியை மாற்றலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

தம்பிதுரை
இப்படிப்பட்ட சூழலில்தான் அதிமுகவின் தம்பிதுரை கிருஷ்ணகிரியில் ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில், "தமிழகத்தில் ஆளும் கட்சியை தவிர அனைத்து கட்சிகளுமே எதிர்க்கட்சிகள் தான். பாஜக, காங்கிரஸ், பாமக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் என அனைவருமே எதிர்க்கட்சிகள் தான்... ஏன் என்றால் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிற காங்கிரஸ் கட்சிக்கோ, விடுதலை சிறுத்தைகளுக்கோ அவர்கள் அமைச்சர் பதவி வழங்கவில்லை... அதனால் அவர்களும் எதிர்க்கட்சிகள் தான்" என்று கூறியுள்ளார்.

திருமாவளவன்
இத்தனை காலமும் திமுக கூட்டணியில்தான், விசிகவும், காங்கிரசும் இடம் பெற்று வந்திருக்கின்றன என்றாலும், இப்போது திடீரென தம்பிதுரையின் கரிசனம் அந்த பக்கம் வீச ஆரம்பித்துள்ளது, சந்தேகத்தை கூட்டி வருகிறது.. அமைச்சர் பதவியை திமுக வழங்கவில்லை என்பதை முன்வைத்து, அந்த கட்சிகளிடம் துண்டு போடப்படுகிறதா? அல்லது திமுகவின் அப்பட்டமான எதிர்ப்பு பேச்சா இது? என்று தெரியவில்லை..

பாஜக - திமுக
அதிமுக கூட்டணியில், பாஜக இடம்பெற்றிருக்கும்வரை, விசிகவும், காங்கிரசும் நிச்சயம் இந்த முயற்சிக்கு ஓகே சொல்ல போவதில்லை என்றாலும், திமுக கூட்டணிக்குள் விரிசலையோ, அதிருப்தியையோ, மேலும் ஏற்படுத்த இது உதவும்.. அதேசமயம், அதிமுக பாஜகவை கழட்டிவிட்டு, கூட்டணி வைக்கும் பட்சத்தில், வரப்போகும் எம்பி தேர்தலில், திமுகவுக்கு சவால் விடும் வகையில் பலமான எதிர்க்கட்சி கூட்டணி தயாராகும் என்றே தெரிகிறது.. பார்ப்போம்..!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications