Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பர்சனல் லோன் வாங்க போறீங்களா? கேட்ட பணம் கிடைக்குமா? எல்லாமே சிபில் ஸ்கோர் கையில்! அதென்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பர்சனல் லோன், வீட்டு லோன் வாங்க போறீங்களா? நீங்கள் கேட்ட லோன் கிடைக்குமா கிடைக்காதா என்பதை அறிய சிபில் ஸ்கோர் என்பதை அறிந்து கொண்டால் போதும்!.

சாப்பிடும் சாப்பாடு முதல் வீடு வரை அனைத்தும் இஎம்ஐ எனப்படும் மாத தவணையில் செலுத்திவிடலாம். ஒரு ரூபாயை செலுத்தி பிரிட்ஜ், ஏசி, செல்போன், வாஷிங்மெஷின் உள்ளிட்டவைகளை எடுத்து வரலாம். மீதி பணத்தை எளிய தவணை முறையில் செலுத்திக் கொள்ளலாம். அது சில நேரங்களில் வட்டியில்லா தவணை வசதியும் கூட கிடைக்கும்.

உங்கள் பணத்தேவைக்கு பர்சனல் லோன் தேவைப்படுகிறது என வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு பலர் வங்கிகளையே நாடுவர். சிலர் ஆத்திர அவசரத்துக்கு என அதிக வட்டிக்கு கடனை வாங்கி அவதிப்படுவர்.

Are you applying for loan? the must points you have to know

வங்கியில் லோன் வேண்டுமென்றால் அந்த வங்கியில் உங்களுக்கு கணக்கு இருந்தாலும் பரவாயில்லை, இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பொதுவாக வங்கிக் கணக்கு இருக்கும் வங்கிகளை அணுகுவதே நல்லது. அவ்வாறு அணுகும்போது நீங்கள் பணியாற்றும் நிறுவனங்களை கேட்பார்கள். அந்த நிறுவனங்கள் இவர்களுடைய லிஸ்டில் ஏ, பி, சி, என கேட்டகரியில் இருக்கிறது என பார்ப்பார்கள்.

கேட்டகரிக்கேற்ப வட்டி மாறும். மேலும் இத்தனை லட்சங்கள் கேட்கிறீர்கள். உங்களுடைய மாத சம்பளம் என்ன என கேட்பார்கள். அதில் இருந்து வேறு என்னவெல்லாம் இஎம்ஐ போகிறது என கேட்பார்கள். பிறகு நீங்கள் சொன்ன ஊதியம் உண்மைதானா என்பதை அறிய உங்களுடைய 3 மாத சம்பள ரசீதை கேட்பார்கள். பான் கார்டு, ஆதார் கார்டு, நீங்கள் பராமரிக்கும் வங்கியில் உள்ள கணக்கின் 3 மாத ஸ்டேட்மென்ட் ஆகியவற்றை கேட்பார்கள்.

Are you applying for loan? the must points you have to know

ஒரு வேளை நீங்கள் இரு மூன்று இஎம்ஐகளை கட்டி வருகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். ஆனால் அதை சொன்னால் வங்கியில் நீங்கள் கேட்கும் தொகைக்கு லோன் கிடைக்காது என்பதால் அந்த இரு இஎம்ஐக்களை மறைத்துவிட்டு கிரெடிட் கார்டு டியூவை மட்டும் சொல்லிவிட்டு விட்டுவிடுவார்கள். அது போல் ஏற்கெனவே வங்கியில் இஎம்ஐ வாங்கி எப்போதாவது பணம் செலுத்தாமல் விடுபட்டுள்ளதா என கேட்டாலும் அதற்கும் ஆம் என சொல்லாமல் இல்லை என்றே சொல்லிவிடுவீர்கள்.

நாம் சொல்லாட்டி வங்கி லோன் செக்ஷனில் எப்படி தெரியும். நாம் சொன்னதை வைத்து அவங்க லோன் கொடுத்துவிடுவாங்கன்னு நீங்கள் நினைச்சா அது உங்களோட அறியாமை. உங்கள் பெயரில் ஏற்கெனவே ஏதேனும் கடன் இருக்கிறதா அல்லது வாங்கிய கடனை சரியாக கட்டாமல் ஏதேனும் சிக்கலில் இருக்கிறீர்களா, கடந்த காலங்களில் கடனை எந்த அளவுக்கு ஒழுங்காக திருப்பிச் செலுத்தியுள்ளீர்கள் போன்றவைதான் வங்கிக்கு முக்கியம்.

Are you applying for loan? the must points you have to know

இதை நீங்கள் சொல்லாவிட்டாலும் உங்கள் பான் எண்ணை போட்டாலே போதும் உங்கள் ஜாதகமே வந்துவிடும். அதுதான் சிபில் ஸ்கோர். இதில் உங்கள் பெயர், பான்கார்டு எண் உள்ளிட்ட விவரங்களை கொடுத்தாலே போதும். இந்த சிபில் ஸ்கோர் உங்களுக்கு கொடுத்திருக்கும் மார்க்கை வைத்தே உங்கள் நாணயம் வெளிப்படும். இதற்காக சிபில் ஸ்கோரில் 300 முதல் 900 வரையிலான அளவில் 3 இலக்க எண்களைக் கொண்டிருப்பதே சிபில் ஸ்கோர்.

நீங்கள் அதிகமான ஸ்கோரை வைத்திருந்தால் உங்கள் மீதான நல்லெண்ணம் அதிகமாக இருக்கும். உங்களுக்கு எளிதாக லோன் கிடைக்கும். பொதுவாக 750 க்கு மேற்பட்ட ஸ்கோர் கொண்டிருப்பவர்களுக்கு கடன் திட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் கிடைப்பதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது. உங்கள் சிபில் ஸ்கோரை ஒராண்டுக்கு ஒரு முறை கட்டணமின்றி இலவசமாக நீங்கள் சிபில் ஸ்கோரை செக் செய்து கொள்ளலாம். அதன் விவரங்களையும் பெறலாம்.

இதை ஆன்லைன் மூலமாகவே செய்ய முடியும். சிபில் ஸ்கோர் செக் செய்ய https://www.cibil.com/ என்ற இணையதளத்தில் செல்ல வேண்டும். அதில கெட் யுவர் சிபில் ஸ்கோர் என்பதை கிளிக் செய்யவும். இப்போது click here என்பதை கிளிக் செய்தால் கட்டணமின்றி செக் செய்ய ஒரு வாய்ப்பை பெற முடியும். உங்கள் பெயர், இமெயில் முகவரி, பாஸ்வேர்டு, அடையாள அட்டை போன்றவற்றை குறிப்பிடவும்.

அதன் பின்னர் பின்கோடு மற்றும் போன் நம்பரை கொடுத்துவிட்டு அக்சப்ட் மற்றும் கன்டினியூ கொடுக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். அந்த எண்ணை கொடுக்க வேண்டும். இப்போது டாஷ்போர்டு பகுதிக்குச்சென்று உங்கள் ஸ்கோரை செக் செய்யவும. இந்த சிபில் ஸ்கோரை நல்ல மதிப்பெண்ணில் வைத்திருக்க வாங்கும் கடனை உரிய முறையில் செலுத்த வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+