குறைந்த விலையில் தங்கம்.. ஏமாந்துடாதீங்க.. போலி நகைகளை கண்டுபிடிக்க இதுதான் வழி
சென்னை: தங்கத்தில் போலி நகைகளை உருவாக்குவது நீண்ட காலமாக இருப்பதாகவும், தங்கம் விலை தற்போது அதிகமாக உள்ள நிலையில், குறைவான விலையில் தங்கம் கொடுத்தால் நம்பி ஏமாற வேண்டாம் என்றும், தங்கம் போலியானது என்பதை கண்டுபிடிக்கவே முடியாத அளவிற்கு ஏமாற்று வேலை நடப்பதாகவும் சொல்கிறார்கள்.
தங்கம் விலை கடந்த மார்ச் 4-ந்தேதியில் இருந்து தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருக்கிறது. கடந்த 5-ந்தேதி ஒரு பவுன் ரூ.48 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை சந்தித்தது. அதன் பின்னரும் தொடர்ச்சியாக விலை அதிகரித்து வந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு பிறகு, தங்கம் விலை நேற்று குறைந்தது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 150-க்கும், ஒரு பவுன் ரூ.49 ஆயிரத்து 200-க்கும் சென்னையில் விற்பனை ஆகியது நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 110-க்கும், ஒரு பவுன் ரூ.48 ஆயிரத்து 880-க்கும் விற்பனையானது. இதன் மூலம் தங்கம் விலை ரூ.49 ஆயிரத்துக்கு கீழ் நேற்று வந்தது. ஆனால் தங்கம் விலை இன்று அதிரடியாக மீண்டும் உயர்ந்து 49,080 ஆக அதிகரித்துள்ளது.. ஒரு கிராம் தங்கம் விலை 6135 ரூபாய்க்கு விற்கிறது.
தங்கம் விலை கடுமையாக உயர்ந்த 50 ஆயிரத்தை நெருங்கும் நிலையில், தங்கத்தை குறைந்த விலைக்கு தருவதாக யாராவது சொன்னால் நம்பி ஏமாந்துவிடாதீங்கள்.. தங்கத்தில் போலி நகைகளை உருவாக்குவது நீண்ட காலமாக இருப்பதாகவும், தங்கம் போலியானது என்பதை கண்டுபிடிக்கவே முடியாத அளவிற்கு ஏமாற்று வேலை நடப்பதாகவும் அந்த துறையில் இருப்பவர்கள் கூறுகிறார்கள்.. தங்கம் விலை அதிகரித்துள்ளதால் போலி நகை உருவாகுவதும் அதிகரித்துள்ளதாம்..
போலி நகை எப்படி உருவாக்கப்படுகிறது: கவரிங்கில் முதலில் நகையை செய்துவிடுவார்கள்.. பின்னர் அதில் கோட்டிங் போல் தகட்டில் தங்கத்தை ஏற்றுகிறார்களாம்.. இப்படி உருவாக்கினால் யாருமே கண்டுபிடிக்க முடியாது என்கிறார்கள்.. நீங்கள் நகையை போலி நகையா இல்லையா என்பதை கண்டுபிடிக்க பெரிய கடைகள் மற்றும் அனுபவம் உள்ள ஆசாரிகளிடம் அணுகலாம்.. அவர்கள் கண்டுபிடித்து சொல்வார்கள்.. அவர்களுமே உரசி பார்த்து கண்டுபிடித்துவிட முடியாது.. அவர்களுமே அதற்கு நிறைய மெனக்கிடல் செய்ய வேண்டும்..
போலி நகை எப்படி விற்கப்படுகிறது: பழைய தங்கம் தன்னிடம் இருப்பதாகவும், அந்த நகையை ஒரு கிராம் 4 ஆயிரம் என்கிற அளவில் விற்க தயாராக இருப்பதாகவும் சிலர் ஆசையை தூண்டுவார்கள். ஆனால் நகை தற்போது கிராம் 6 ஆயிரத்திற்கு மேல் விற்பதால் ஆசைப்பட்டும், அவசரப்பட்டும் வாங்குவார்கள்.. அந்த வகையில் ஹால்மார்க் என முத்திரை எல்லாம் போட்டிருக்கும்.. எனவே எந்த சந்தேகமும் வாங்கியவர்களுக்கு வராது..
போலி நகையை எப்படி கண்டுபிடிப்பது: எனவே போலி நகையை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் ஹார்மார்க் சென்ட்டருக்கு போக வேண்டும். அங்கு நகையின் ஒரு பகுதியை வெட்டி, உருக்கி , எவ்வளவு தங்கம், எவ்வளவு காப்பர், எவ்வளவு வெள்ளி என்பதை சொல்லிவிடுவார்கள்.. அதேநேரம் பழைய நகையை வாங்க போகிறீர்கள் என்றால், உடனே பாராம்பரிய ஆசாரிகளிடம் சென்று இதை வாங்க போவது பற்றி கூறுங்கள். அவர்கள் அதில் எவ்வளவு தங்கம் இருக்கிறது.. என்ன விலை போகும் என்பதை கண்டுபிடித்து உங்களிடம் சொல்லிவிடுவார்கள்..
தங்கத்தில் மச்சம் குறைவு: அதேநேரம் மச்சம் குறைவாகவும் சில இடங்களில் தங்கம் விற்கப்படுகிறது. விலை குறைவாக இருக்கிறது என்று நினைத்து ஹால்மார்க், 916 முத்திரை இல்லாத நகைகளை வாங்கிவிட வேண்டும் என்கிறார்கள். குறிப்பாக 916 முத்திரையுடன் நகைகளை வாங்குவது நல்லது என்கிறார்கள். ஏனெனில் அந்த நகைகள் விற்கும் போதும், அதே விலைக்கு எடுக்கப்படும் என்கிறார்கள் நகை விற்பனையாளர்கள்..












Click it and Unblock the Notifications