அரசியலுக்கு வர்றீங்களா? ஒரே வார்த்தையில் முடித்துக்கொண்ட நடிகர் தனுஷ்.. என்ன சொன்னார் பாருங்க
சென்னை: சென்னை ஓஎம்ஆரில் இன்று மகளிரணி நிர்வாகிகளை சந்தித்த தனுஷ் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அரசியல் ரீதியான கருத்துகளுக்கு பதில் கொடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அதுகுறித்து எதுவும் பேசவில்லை என்றும், 2 நிமிடங்கள் மட்டுமே அவர் பேசியதாகவும் தகவல் வெளியாகின. தொடர்ந்து நிகழ்ச்சி முடிந்து புறப்பட்ட தனுஷிடம் செய்தியாளர்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு ஒரே வார்த்தையில் பதில் அளித்துவிட்ட அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் விரைவில் அரசியல் கட்சி தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக எழுச்சிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்க இருப்பதாகவும், அதற்கு முன்னோட்டமாகவே ரசிகர் மன்ற இயகத்தினை, மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளார் என்றும், அடுத்தடுத்து நிர்வாகிகளை சந்தித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

மகளிரணி நிர்வாகிகளை சந்தித்த தனுஷ்
விரைவில் தனுஷ் அரசியல் கட்சி தொடங்குவார் என தகவல்கள் பரவி வரும் நிலையில், இன்று சென்னை ஓஎம்ஆரில் நற்பணி இயக்கத்தை சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட பெண் நிர்வாகிகள், உறுப்பினர்களை இன்று தனுஷ் நேரில் சந்தித்து பேசியுள்ளார். ஜேப்பியர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு நிகழ்ச்சி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது.
முதலில் காலை 11 மணிக்கு தொடங்குவதாக இருந்ததால் கொட்டும் மழையிலும் பெண் நிர்வாகிகள் காத்திருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது மகளிரணி நிர்வாகிகளை சந்தித்த நடிகர் தனுஷ் அவர்களுடம் புகைப்படம் எடுத்துக்கொண்டதாகவும், காமாட்சி விளக்கு கொடுத்ததாகவும் தகவல் வெளியானது. தனுஷ் நீண்ட நேரம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 நிமிடங்கள் மட்டுமே பேசியதாகவும் தகவல் வெளியானது.
அரசியலுக்கு வருவீங்களா?
இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்து சென்ற தனுஷிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். சார் எப்படி இருக்கீங்க.. என்று கேட்டதும் சிரித்துக்கொண்டே.. எல்லாருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.. என தனுஷ் கூறினார். அப்போது செய்தியாளர்கள் அரசியலுக்கு வருவீங்களா என்று கேட்டதற்கு பதில் எதுவும் அளிக்கவில்லை. இன்றைய நிகழ்ச்சி எப்படி இருந்தது என்ற கேள்விக்கு, "ரொம்ப சந்தோஷம்.. ரொம்ப சந்தோஷம்.." என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.



Click it and Unblock the Notifications
