Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிறப்பு சான்றிதழில் இனிஷியல் தவறுகளை சரி செய்வது எப்படி? ஆதார் எடுப்போர் உடனே பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்கள் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வாங்க போறீங்களா? நிச்சயம் அதில் கவனமாக இருங்கள்.. ஏனெனில் சில தவறுகள் உங்கள் குழந்தைகளுக்கு பின்னாளில் சிக்கலை ஏற்படுத்தலாம். ஏனெனில் நீங்கள் வாங்கும் பிறப்பு சான்றிதழ் அடிப்படை ஆவணமாக இருப்பதால், அதில் எப்படி இருக்கிறதோ, அதன்படி தான் பிறப்பு சான்றிதழ் தருவார்கள். எனவே பிறப்பு சான்றிதழில் இனிஷியல் சேர்த்தே வாங்குங்கள். உங்கள் இனிஷியல், மனைவி இனிஷயலும் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள். என்ன சிக்கல் வருகிறது என்பதை பார்ப்போம்.

ஒரு மனிதனின் முதல் அடிப்படை உரிமை என்றால் அது பிறப்பு சான்றிதழ் தான். பிறப்பு பதிவு குழந்தைக்கு சட்டபூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சி என்றால் அது பிறப்பு சான்றிதழ் மட்டுமே. ஒருவருக்கு என்ன ஆவணங்கள் இருந்தாலும், பிறப்பு சான்றிதழ் இல்லை என்றால் சிக்கல் தான். அந்த காலத்தில் பிறந்தவர்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் 2000க்கு பிறகு நிலைமை அடியோடு மாறிவிட்டது. பிறப்பு சான்றிதழ் இல்லாமல் பள்ளியில் சேர்ந்தாலும், ஆதார் வாங்க, ஆதாரில் திருத்தம் செய்ய பிறப்பு சான்றிதழ் அவசியமாகும்.

Are you going to buy a birth certificate for your child Making this mistake can lead to big problems

பிறப்பு சான்றிதழ் பதிவு

பொதுவாக குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் பெற முடியும். பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றிதழ் ஆகிறது. பிறப்பு சான்றிதழ் குழந்தை பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் பெற பாஸ்போர்ட், விசா உரிமம், அயல் நாட்டில் குடியுரிமை பெற ஆகியவற்றிற்கு முக்கியமான ஆவணம் ஆகும்.


திருத்தம் செய்ய கட்டணம் எவ்வளவு

ஒரு குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவில் உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணம் இன்றி பதிவு செய்ய முடியும். 12 மாதங்களுக்கு பிறகு 15 வருடங்களுக்குள் ரூ.200 தாமதக் கட்டணம் செலுத்தி குழந்தையின் பெயரை பதிவு செய்யலாம். 15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரை பதிவு செய்ய முடியாது. பிறப்பு, இறப்பை 21 நாட்களுக்கு கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்பது விதியாகும்.

பிறப்பு சான்றிதழில் ஸ்பெல்லிங்

உங்கள் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வாங்க போகிறீர்கள்.. அல்லது சமீபத்தில் தான் வாங்கினீர்கள் என்றால் அல்லது ஓராண்டிற்குள் தான் என்றால், உடனே எடுத்து சில விஷயங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். முதலில் பார்க்க வேண்டியது பெயர். பெயரில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் அல்லது எழுத்தில் தவறு இருந்தால் உடனே பாருங்கள். அடுத்ததாக பெயரில் இனிஷியல் இல்லாமல் பிறப்பு சான்றிதழ் பலரும் வாங்கிவிடுகிறார்கள். அதுவும் குழந்தைக்கு சிக்கலை ஏற்படுத்தும்.

ஆதார் வாங்குவது எப்படி

ஏனெனில் ஆதார் என்பது பிறப்பு சான்றிதழ் எப்படி உள்ளதோ, அதுபோலவே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு இனிஷியல், உங்கள் மனைவிக்கு இனிஷியல் எல்லாம் சரியாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், அதுவும் சிக்கலை ஏற்படுத்தும். ஏனெனில் ஆதார் வாங்கும் போது, இது பலருக்கும் சிக்கலாகி உள்ளது. மறுபடியும் பிறப்பு சான்றிதழில் திருத்தம் செய்து தருமாறு போய் விண்ணப்பிக்க வேண்டியது வரும்.

பிறப்பு சான்றிதழில் தவறுகளை சரி செய்வது எப்படி

அதேபோல் குழந்தையின் தந்தை அல்லது தாயின் பெயரில் தவறு இருந்தாலும் ஆதாரில் பிரச்சனை வரும். எனவே பிறப்பு சான்றிதழில் உங்கள் குழந்தையின் பெயர் மற்றும் இனிஷியல், உங்கள் பெயர் மற்றும் இனிஷியல், உங்கள் மனைவியின் பெயர் மற்றும் இனிஷியல் எல்லாம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரியாக உள்ளதா என்பதை பாருங்கள். இல்லாவிட்டால் குழந்தைக்கு ஆதார் வாங்குவதில் சிக்கல் வரும். ஆதாரில் தவறுகளுடன் தான் வரும்.. அப்படி ஒருவேளை தவறுகள் வந்தால், மீண்டும் பிறப்பு சான்றிதழ் வாங்கிய அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் தவறுகளை சரி செய்து தந்தால் தான் மாற்ற முடியும். அதற்கு ஆவணங்களை வழங்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+