Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்க போகிறீர்களா.. நகைக்கடைகள் தரும் சலுகைகள் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அட்சய திருதியை பண்டிகையின் போது எந்தவொரு முதலீடும் அல்லது வாங்குதலும் தொடர்ந்து வளர்ந்து செழித்து வளரும் என்று இந்துக்களால் நம்பப்படுகிறது. இந்த நாளில் மங்களகரமான பொருட்களை வாங்குவது நல்ல அதிர்ஷ்டம் என்றும் நம்புகிறார்கள். பொதுவாக அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க தமிழ்நாட்டில் உள்ள பலர் ஆர்வம் காட்டுவார்கள். ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்கிவிடுவார்கள். இந்நிலையில் நாளை அட்சய திரிதியைக்கு தங்கம் வாங்க போகிறவர்களுக்கு நகைக்கடைகள் தரும் சலுகைகள் பற்றி பார்ப்போம்.

பொதுவாகவே பௌர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி திருதியை ஆகும். சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சய திருதியை ஆகும். அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள் ஆகும்.

Are you going to buy gold for Akshaya Tritiya 2025 Do you know the offers offered by jewellery Shops

சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை என்று அழைக்கப்படுகிறது. எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் சித்திரையில் வரும் திருதியை நாளைத்தான் சட்சய திருதியை என அழைக்கிறார்கள். அதனால் தான் மக்கள் மிக விலையுயர்ந்த தங்கத்தை அட்ச திருதியை அன்று வாங்க விரும்புகிறார்கள்.

நாளை ஏப்ரல் 30ம் தேதி அன்று அட்சய திருதியை கொண்டாடப்படும் நிலையில், தங்கம் மற்றும் வெள்ளியை வாங்க மக்கள் ஆர்வமாக உள்ளார்கள். தங்கம் வாங்க வருவோருக்காக நகைக்கடைகள் பல சலுகைகளை அள்ளி வழங்கி வருகின்றன. சில நகைக்கடைகளில் கிராமுக்கு 250 கிராம் வரை தள்ளுபடி தந்துள்ளன. இதேபோல் சில நகைக்கடைகள் 30 சதவீதம் செய்கூலி சேதார தள்ளுபடி வழங்குகின்றன.

சில நகைக்கடைகள் 75000க்கு மேல் தங்கம் வாங்குவோருக்கு தங்க நாணயம் பரிசாக வழங்குகின்றன. சில நகைக்கடைகள் வெள்ளிக்கு செய்கூலி சேதாரமே இல்லை என்று அறிவித்துள்ளன. அதேபோல் பல கடைகள் காலை 8 மணிக்கே நாளை திறக்க போவதாகவும் அறிவித்துள்ளன. அதேபோல் சில கடைகள் ஒரு கிராம் தங்கம் வாங்கினால் 3 கிராம் வெள்ளி வழங்குவதாக அறிவித்துள்ளன.

இதுகுறித்து சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி செய்தியாளர்களிடம் கூறும் போது, அட்சயதிருதியை நாளில் பல்வேறு கடைகள், காலை 5 மணிக்கு கடை திறக்கப்பட்டு நள்ளிரவு வரை கடை திறந்திருக்கும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தங்கத்தின் விலை அதிகமாக உள்ளது.

கடந்த ஆண்டு மே 10-ந்தேதி அட்சய திருதியை நாளில் ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 660 அதாவது ஒரு பவுன் ரூ.53 ஆயிரத்து 280-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 5-க்கு அதாவது ஒரு பவுன் ரூ.72 ஆயிரத்து 40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டை விட நடப்பாண்டு ரூ.18 ஆயிரத்து 790 அதிகமாக உள்ளது.

கடந்த ஆண்டை விட நடப்பாண்டு தங்கத்தின் விலை அதிகரித்திருந்தாலும் பொதுமக்களுக்கு தங்கத்தின் மீது நம்பிக்கை அதிகரித்திருப்பதால் அட்சய திருதியை அன்று நகை வாங்குவதற்கு முன்பதிவு அதிகமாக உள்ளது. இதனை வைத்து பார்க்கும் போது கடந்த ஆண்டை விட நடப்பாண்டு 20 சதவீதம் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

பல்வேறு நகைக்கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு செய்கூலி, சேதாரத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அத்துடன் முன்பதிவு செய்த நாளில் இருந்து அட்சயதிருதியை நாளுக்குள் எந்த நாளில் விலை குறைவாக இருக்கிறதோ? அந்த நாள் விலைக்கு அட்சயதிருதியை அன்று நகையை வாங்கி கொள்ளும் சலுகையும் வழங்கப்பட உள்ளது.

வாகன வசதி இல்லாத நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வாகன வசதி செய்து தர நகைக்கடைகள் முடிவு செய்துள்ளன. நள்ளிரவு நேரங்களில் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு கருதி அவர்கள் இடத்திற்கே கொண்டு சேர்க்கவும் வசதி செய்யப்பட்டு உள்ளது" என்றார்.

தங்கத்தை பொறுத்தவரை கடந்த 3 நாட்களில் எந்த நாளில் முன்பதிவு செய்கிறார்களோ, அந்த நாள் விலைக்கு வாங்கி கொள்ளலாம்.. அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை கூடியிருந்தால், முன்பதிவு நாளில் உள்ள விலைக்கு வாங்க முடியும். அதேபோல் அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை குறைந்திருந்தால், அந்த விலைக்கும் வாங்கலாம் என்கிறார்கள் நகைக்கடை உரிமையாளர்கள்.

தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் 8980க்கு விற்பனையானது. ஒரு பவுன் தங்கம் 71520 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று ஒரு கிராம் தங்கம் 40 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் 71840 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விற்பனை கடந்த ஆண்டில் 55000 கோடி அளவிற்கு இருந்தது. இந்த ஆண்டு அதனை விட அதிகமாகவே இருக்கும் என்கிறார்கள் நகைக்கடை உரிமையாளர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+