Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டாட்டூக்கள் குத்த போகிறீர்களா? ஒரு நிமிஷம் இந்த வீடியோவை பாருங்கள்! தீயாய் பரவும் காணொலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பச்சைக் குத்துதல் எனப்படும் டாட்டூக்களை குத்துவதற்கு ஆசையாக இருந்தால் தற்போது வைரலாகும் வீடியோவை பார்த்துவிட்டு பிறகு முடிவு செய்யுங்கள்.

பழமையான கலைகளில் ஒன்று பச்சைக் குத்துதல் எனப்படும் டாட்டூக்கள். இந்த டாட்டூக்கள் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சிறிய அளவில் தொடங்கி தற்போது உடல் முழுவதும் டாட்டூக்களை குத்தும் பழக்கம் தொடங்கியுள்ளது.

Are you going to get tattoo in your skin

நரிக்குறவர்கள் மட்டுமே பச்சை குத்தும் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது நிறைய நவீன கருவிகள் மூலம் டாட்டூ குத்தப்பட்டு வருகிறது. இந்த டாட்டுக்களுக்கு பயன்படுத்தும் நிறமிகள் நம் தோலில் ஊடுருவி செல்வதால் இதை கைதேர்ந்த கலைஞர்களிடம் மட்டுமே குத்தி கொள்ள வேண்டும்.

விலை குறைவாக இருக்கிறது என்பதற்காக பயிற்சி இல்லாத நபர்களிடம் குத்தும் போது அதன் மூலம் ஆபத்துகள் அதிகம் உள்ளது. உயிரிழப்பு ஏற்படும் அளவுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். டாட்டூக்களை குத்துவதற்கு என பயிற்சிகள் உள்ளன. அவற்றை பலர் படித்துவிட்டு அந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அது போல் அவர்கள் டாட்டூ குத்த வருவோரிடம் உடனே இழுத்து பிடித்து குத்தி விட மாட்டார்கள். அவர்களிடம் டாட்டூக்கள் எப்படி குத்தப்படும் என்பது தொடர்பான வீடியோவை வாடிக்கையாளருக்கு போட்டு காண்பித்துவிட்டு அவர்கள் சரி என சொன்னதும்தான் போடுகிறார்களாம். அவர்களிடம் இருக்கும் மைகளும் தரமானவை. அது போல் ஒரு முறை மட்டுமே அந்த மையை பயன்படுத்துவார்கள்.

இந்த நிலையில் டாட்டுக்கள் குத்துவது குறித்த ஒரு விழிப்புணர்வு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் செய்முறை விளக்கத்துடன் கூறியிருப்பதாவது: டாட்டுக்களை குத்துவதற்கு பயன்படுத்தப்படும் ஊசியானது குத்தும் இடத்தில் ஒரு வினாடிக்கு 200 முறை வைப்ரேட் ஆகிறது.

Are you going to get tattoo in your skin

ஒரு டாட்டு போடுவதற்கு சிறிய அளவிலான ஏராளமான ஊசிகள் உங்கள் தோலில் குத்தப்படுகிறது. ஒரு வினாடிக்கு 200 முறை அந்த ஊசிகள் குத்தப்படுகின்றன. டாட்டுக்கள் போட்ட பிறகு உங்கள் தோல் பயங்கரமாக இருக்கும். உங்களுக்கு டாட்டுக்களை போட்டுக் கொள் ஆசை இருந்தால் இந்த வீடியோவை பாருங்கள்.

இந்த வீடியோவை பார்த்த பிறகு டாட்டுக்களை போடுவதா வேண்டாமா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். முதலில் டாட்டு போடும் இடம் ஷேவிங் செய்யப்படுகிறது. அதன் பிறகு தோலில் நீங்கள் விரும்பும் டிசைன் பிரின்ட் எடுத்து ஒட்டப்படுகிறது. பிறகு ஒரு கருவி மூலம் அந்த டிசைனின் அவுட்லைன் வரையப்படுகிறது.

இவையெல்லாம் செய்து முடித்தவுடன் உங்கள் தோலில் மெல்லிய ஊசிகள் துளைக்கின்றன. ஒரு சிறிய டிசைன் வரைய வேண்டுமானாலும் கூட நிறைய முறை ஊசியை குத்தி குத்தி எடுக்க வேண்டியது இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிரானவை டாட்டுக்கள். இங்கில் உள்ள பிக்மென்ட்கள் தோலின் லேயரை துளைக்கின்றன. இந்த நேரத்தில்தான் நோய் எதிர்ப்பு மண்டலமானது இந்த நிறமிகளின் மூலக்கூறுகளை அடையாளம் காணத் தொடங்குகின்றன.

அவை "ஊடுருவல்காரர்கள் (கிருமிகள்)" என கண்டறிகிறது. அந்த இங்கின் மீது தாக்குதல் நடத்த நோய் எதிர்ப்பு செல்கள் தொடங்குகின்றன. நோய் எதிர்ப்பு செல்கள் அதிகமாக இருக்கும் போதிலும் அவரை மிகவும் சிறியதாக இருப்பதால் நிறமியின் மூலக்கூறுகளை எதிர்த்து செயல்பட முடியாமல் போகிறது.

இதனால்தான் டாட்டுக்களை முழுவதுமாக நீக்குவது என்பது மிகவும் கடினமானது. உங்கள் வாழ்நாள் முழுவதும் அந்த டிசைன் உங்களுடனேயே பயணிக்கிறது. இவ்வாறு வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+