சென்னையில் இருந்து சொந்த ஊர் போறீங்களா? ஆம்னி பஸ்களில் டிக்கெட் பார்க்க போறீங்களா? இதை பாருங்க
சென்னை: கோடை விடுமுறை மற்றும் லோக்சபா தேர்தலையொட்டி பலரும் ஊருக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள். தேர்தலுக்கு இரண்டு நாள் முன்பாக அதாவது ஏப்ரல் 17ம் தேதி சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள் செல்ல 5000 ரூபாய் வரை கட்டணங்களை ஆம்னி பேருந்துகள் நிர்ணயம் செய்திருக்கின்றன.. சரசாரியாக 1500 முதல் 2500 வரை பல பேருந்துகளில் கட்டணம் இருக்கிறது.
பல பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வு ஏப்ரல் 12ம் தேதியுடன் முடிகிறது. அதேநேரம் மாநில கல்வி பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு அதாவது அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன்படி தேர்தல் முடிந்த பின்னரே தேர்வுகள் நடைபெற போகிறது. அவர்களுக்குமே ஏப்ரல் 12 முதல் ஏப்ரல்21 வரை விடுமுறையாகும்..

பள்ளி இறுதித்தேர்வு விடுமுறை ஒருபுறம் எனில், தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ம் தேதி வருகிறது.. அதேபோல் ஏப்ரல் 19ம் தேதி வாக்குபதிவு நடைபெற போகிறது. இதுதவிர மதுரையை பொறுத்தவரை சித்திரை திருவிழாவும் வருகிறது. இப்படிமொத்தமாக வருவதால் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 5000 ரூபாய் வரை இருக்கிறது. சர்வ சாதாரணமாக 1500 முதல் 2500 ரூபாய் வரை கட்டணம் இருக்கிறது. கோடை விடுமுறை காலங்களில் பொதுவாக ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் வழக்கத்தை விட இருமடங்காக இருக்கும். இந்நிலையில் தேர்தல் வருவதால் கட்டணம் மிக அதிகமாக இருக்கிறது.

உதாரணத்திற்கு ஏப்ரல் 17ம் தேதி சென்னையில் இருந்து தேனி செல்ல ஆம்னி பேருந்துகளில் கட்டணம் குறைந்த கட்டணம் 1000 ரூபாயில் இருந்து 5000 வரை கட்டணமாக காட்டுகிறது பிரபல தனியார் டிராவல் ஏஜென்சி ஆப்பில்... மதுரை நிலவரத்தை அப்படியே செக் செய்து பார்த்தால் ஏப்ரல் 17ம் தேதி அன்று மதுரை 1500 முதல் 2000 ரூபாய் வரை கட்டணம் இருக்கிறது. கோவையிலும் 1000 முதல் 2000 வரை கட்டணம் இருக்கிறது.
ஆம்னி பேருந்துகளில் இந்த நிலை என்றால் ரயில்களில் காத்திருப்பு பட்டியல் கண்ணை கட்டும் அளவிற்கு இருக்கிறது. ரயில்களில் டிக்கெட்டலாம் முடிந்துவிட்டது. அடுத்த இரண்டு மாதங்கள் பலரும் சொந்த ஊர் செல்வதும், சென்னை செல்வதுமாக இருப்பார்கள் என்பதால் டிக்கெட் கட்டணம் அதிக அளவில் இருக்கும். வார இறுதிகளில் கூட்டம் மிக அதிமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதேபோல் கோடைவாசல் தளங்களை ஓட்டிய நகரங்களுக்கு டிக்கெட் கட்டணம் ஆம்னி பேருந்துகளில் கண்டிப்பாக அடுத்த 2மாதங்களுக்கு குறைய வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.
நான்கு பேர் கொண்ட குடும்பத்தினர் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல வேண்டும் என்றால் குறைந்தது 6000 ரூபாய் 8000 வரை செலவு செய்ய வேண்டிய நிலை வரும். ஊருக்கு போய் திரும்பவே கிட்டத்தட்ட 10 ஆயிரம் முதல் 16000 வரை செலவு செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. அதேநேரம் அரசு பேருந்துகளில் சென்றால் இவ்வளவு செலவு ஆகாது. தற்போதைய நிலையில் மக்களுக்கு அரசு பேருந்துகள் ஒன்று தான் தீர்வாக உள்ளது.












Click it and Unblock the Notifications