ஸ்டாலினால் முன்புபோல ஊழல் செய்ய முடியாதுன்னு கவலையா?அண்ணாமலை குபீர் கேள்வி.. 100 நாள் வேலை
சென்னை: மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம்-2005 க்குப் பதிலாக விக்சித் பாரத்-ரோஸ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) விபி-ஜி ராம் ஜி மசோதா-2025 எனும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. 100 நாள் வேலைத் திட்டம் தொடர்பான புதிய மசோதா குறித்து அதிமுகவின் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் இந்த கேள்விக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் 2005க்குப் பதிலாக 'விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்டம்' என மாற்றப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை, பூஜ்ய பாபு சட்டம் என மாற்ற ஒன்றிய அரசு முடிவெடுத்திருக்கிறது. இதன் மூலமாக 100 நாட்கள் வேலையானது 125 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கான மத்திய அரசின் நிதிப் பங்களிப்பு 60 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு மசோதாவை பார்லியில் தாக்கல் செய்துள்ளது. மகாத்மா காந்தி பெயர் நீக்கமும், அந்தச் சட்டத்தை மாற்றி, அதை 'பூஜ்ய பாபு சட்டம்' என்று பெயரிட முடிவெடுத்திருப்பது, மகாத்மா காந்தி மீது ஒன்றிய அரசுக்கு உள்ள வெறுப்பை வெளிப்படுத்துகிறது என்று பல்வேறு கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
100 வேலைத் திட்டம் தொடர்பான இந்த விவகாரம் தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த புதிய சட்டம் குறித்து அதிமுகவின் நிலைப்பாடு என்ன? என்று முதல்வர் ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி எழுப்பியிருந்தார். முதல்வர் ஸ்டாலினின் இந்த கேள்விக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுக்கும் வகையில், 100 நாள் வேலை திட்டம் குறித்து அளித்த விளக்கத்தை வீடியோவாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: இந்தத் திட்டம் குறித்து நேற்றே தெளிவான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறோம். நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், ஒரு தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்களின் பெயரையும் சமஸ்கிருத மொழியில் வைத்துக் கொண்டு, ஹிந்தி எதிர்ப்பு என்று இன்னும் நாடகமாடிக் கொண்டிருப்பது நகைமுரண்.
100 நாள் வேலைத் திட்டத்தை, 150 நாட்களாக உயர்த்துவோம் என்று அளித்த வாக்குறுதி நினைவிருக்கிறதா? முதல்வர் ஸ்டாலினால் முன்பு போல 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல் செய்ய முடியாது என்ற கவலையா? இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் அண்ணாமலை.. அவருக்கு வாழ்த்துக்கள்.. திருமாவளவன்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா












Click it and Unblock the Notifications