ஒரே நாளில் இவ்வளவு மழையா! ரெக்கார்ட்தான்! சென்னையில் நேற்று எங்கு அதிக மழை பதிவானது தெரியுமா?
சென்னை: நேற்று திடீரென பெய்த கனமழை காரணமாக சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் 200 மிமீக்கும் அதிகமாக மழை பதிவாகி உள்ளது.
Recommended Video
சென்னையில் நேற்று கிழக்கு காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மிக தீவிர கனமழை பெய்தது. கணிப்புகளை மிஞ்சி 10 மணி நேரத்தில் பல மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. கணிப்புகளை மிஞ்சி இவ்வளவு மழை பெய்தது ஏன் என்று இன்னும் உறுதியாக கண்டுபிடிக்கப்படவில்லை.
நேற்று சென்னையில் பெய்த மழைக்கு மேகவெடிப்பு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதை எந்த வானிலை மாதிரிகளும், ரேடார்களும் கணிக்க முடியாமல் போனதுதான் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மழை
10 மணி நேரம் விடாமல் சென்னையில் மழை கொட்டி தீர்த்து இருக்கிறது. நேற்று சென்னை டிஜிபி அலுவலகத்தில்தான் அதிக மழை பெய்துள்ளது. அங்கு மாட்டு 237.10 மிமீ மழை பெய்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 230.80 மிமீ மழை பெய்துள்ளது. மேற்கு மாம்பலத்தில் 220 மிமீ மழை பெய்து உள்ளது. இதற்கு

சென்னை எம்ஜிஆர் நகர்
அடுத்தபடியாக சென்னை எம்ஜிஆர் நகரில் 197.40 மிமீ மழை பெய்து இருக்கிறது. சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே 196.60 மிமீ மழை பெய்துள்ளது. அம்பத்தூரில் 196 மிமீ மழை பெய்துள்ளது. சென்னை சிடி மருத்துவமனை தண்டையார்பேட்டையில் 190 மிமீ மழை பெய்துள்ளது. சென்னை அண்ணா பல்கலையில் 189.70 மிமீ மழை பெய்துள்ளது.

அயனாவரத்தில் தாலுகா அலுவலகம்
அயனாவரத்தில் தாலுகா அலுவலகம் அருகே 177 மிமீ மழை பெய்துள்ளது. பெரம்பூர் நகராட்சி பார்க் அருகே 155 மிமீ மழை பெய்துள்ளது. ஆலந்தூர் மெட்ரோ பகுதியில் 154 மிமீ மழை பெய்துள்ளது. சோழிங்கநல்லூரில் 124 மிமீ மழை பெய்துள்ளது. திருநல்லூரில் அதிகபட்சமாக ஆவடியில் 230 மிமீ மழை பெய்துள்ளது. பூந்தமல்லியில் 200 மிமீ மழை பெய்துள்ளது.

ரெட்ஹில்ஸ்
கொரட்டூரில் 118 மிமீ மழை பெய்துள்ளது. ரெட்ஹில்ஸ் பகுதியில் 103.33 மிமீ மழை பெய்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி அமைந்துள்ள பகுதியில் 190 மிமீ அளவுக்கு மழை பெய்துள்ளது. விநாடிக்கு 2,200 கன அடி நீர் வரும் நிலையில் ஏரியிலிருந்து 2,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications