மேகமா இது? தமிழ்நாட்டில் விடாத மழைக்கு இடையில்.. அர்ஜென்டினாவில் நடந்த சம்பவம்.. வைரல் போட்டோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் ஒரு பக்கம் மழை பெய்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் அர்ஜென்டினா நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து கொண்டு இருக்கிறது. இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் காரணமாக தமிழ்நாட்டில் ஏற்கனவே தீவிர கனமழை பெய்து உள்ளது.

இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்கு அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அர்ஜென்டினா

அர்ஜென்டினா

தமிழ்நாட்டில் ஒரு பக்கம் மழை பெய்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் அர்ஜென்டினா நாட்டிலும் கடந்த இரண்டு வாரமாக தீவிர மழை பெய்து வருகிறது. அங்கும் இது பருவமழை காலம் என்பதால் பல பகுதிகளில் தீவிர கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் அர்ஜென்டினாவில் ஏற்பட்ட வித்தியாசமான மழை மேகம் வைரலாகி வருகிறது.

பந்துகள்

பந்துகள்

அங்கு பல்வேறு பகுதிகளில் வானத்தில் பந்துகள் போன்ற மேகங்கள் தோன்றி இருக்கின்றன. வித்தியாசமான தோற்றத்தில் வானத்தில் பந்துகள் மிதப்பது போன்று இந்த மேகங்கள் காட்சி அளிக்கின்றன. பந்துகளை கொக்கிகள் போட்டு தொங்க வைத்தது போல இவை காட்சி அளிக்கின்றன. இதை தாய் மேகம் என்று அழைப்பார்கள். அதாவது Mammatus மேகங்கள் என்று இதை அழைப்பார்கள். இது முழுக்க மழை மேகங்கள் ஆகும்.

Mammatus மேகங்கள்

Mammatus மேகங்கள்

Mammatus மேகங்கள் தாங்கள் உருவாக்கிய தாய் மேகங்களோடு இணைந்து இது போல பந்துகளாக காட்சி அளிக்கும். மிக கனமழை பெய்ய போகிறது என்பதை இந்த Mammatus மேகங்கள் உணர்த்தும். கடந்த நவம்பர் 13ம் தேதி முதலில் அர்ஜென்டினாவில் சில பகுதிகளில் இந்த மேகங்கள் தோன்றின. இதையடுத்து மீண்டும் அங்கு இதே போன்ற மேகங்கள் தோன்றி உள்ளன.

Recommended Video

    இன்னும் இரண்டு நாட்களில் சென்னையில் அதிக மழை இருக்கும் | Oneindia Tamil
    வைரல்

    வைரல்

    இணையத்தில் அர்ஜென்டினாவில் இந்த Mammatus மேக புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேகங்கள் இவ்வளவு அழகாகவும், பயமுறுத்தும் வகையிலும் இருக்குமா என்று நெட்டிசன்கள் பலர் இந்த புகைப்படங்களை பகிர்ந்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+