டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து- அரிட்டாபட்டியில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி மக்கள் கொண்டாட்டம்!
சென்னை: மதுரை அரிட்டாபட்டியில் வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்த அறிவிப்பை வரவேற்று அப்பகுதி மக்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் தொடர்ந்து அரிட்டாபட்டி பகுதியை பல்லுயிர் பெருக்கமண்டலமாக கருதி டங்ஸ்டன் சுரங்க ஏல அனுமதியை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாயக்கர்பட்டியில் 2,015.51 ஹெக்டேர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கத்தை குத்தகைக்கு விடும் ஏல அறிவிப்பு வெளியானது. இந்த ஏலமானது சர்ச்சைக்குரிய, தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனமான வேதாந்தாவின் துணை குழுமமான ஹிந்துஸ்தான் ஜிங் லிமிடெட்டுக்கு வழங்கப்பட்டது.

இதனால் நாயக்கர்பட்டியை சுற்றிய அரிட்டாபட்டி உள்ளிட்ட பல கிராம மக்கள் பெரும் கொந்தளிப்புக்குள்ளாகினர். டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றி தொடர் போராட்டங்களை நடத்தினர். இந்தப் போராட்டங்களுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. நடைபயணம் உள்ளிட்ட பல்வேறு வகையிலான போராட்டங்களும் நடத்தப்பட்டன.
தமிழ்நாடு சட்டசபையிலும் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தில், இன்றியமையாத கனிமங்களின் உரிமையை மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசு ஏலம் விடக் கூடாது என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3-ந் தேதி தமிழக அரசு வலியுறுத்தியது. இதையும் மீறி ஏல நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது. டங்ஸ்டன் சுரங்க உரிமம் வழங்கப்பட்ட பகுதியானது, குடைவரைக் கோவில்கள், சமண சிற்பங்கள், தமிழ்ப் பிராமி வட்டெழுத்துகள், பஞ்ச பாண்டவர் படுகைகள் ஆகிய வரலாற்றுச் சின்னங்களையும் அரியவகை உயிரினங்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் டங்கஸ்டன் சுரங்கம் வந்தால் நான் முதல்வராக பொறுப்பில் இருக்கமாட்டேன் எனவும் முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார். தமிழ்நாடு சட்டசபையின் தீர்மானமும் மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் மத்திய அரசு தற்போது, ஹிந்துஸ்தான் ஜிங்க் குழுமத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க ஏல அனுமதியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அரிட்டாபட்டி பகுதியை பல்லுயிர் பெருக்கமண்டலமாக கருதி இந்த சுரங்க அனுமதி ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார மக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடுகின்றனர். மேலும் டங்ஸ்டன் சுரங்கம் அமைவதைத் தடுத்த தமிழ்நாடு அரசு மற்றும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அப்பகுதி மக்கள் நன்றியும் தெரிவித்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications