அரியலூரில் அதிசயம்.. திருச்சியில் விஜயின் திகைப்பு.. மைக்கை விடுங்க, தவெகவுக்கு இது மைனஸ்: பிரபலம்
சென்னை: மின் கம்பத்தில் ஏறக்கூடாது என்ற புரிதல்கூட விஜய் தொண்டர்களுக்கு கிடையாதா? கரண்ட் கம்பத்தில் ஏறி ஒருவருக்கு ஏதாகி விட்டால் அதனால் விஜய்க்கு கெட்ட பெயர் என்பதைவிட, ஆளும் கட்சிக்குதான் கெட்ட பெயர் வரும்.. விமர்சனங்கள் வரும்.. எனவே அரசு தரப்பில் 23 நிபந்தனைகள் விதித்தது சரியானதுதான்" என்று தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கருத்து தெரிவித்துள்ளார்.
Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "திருச்சியை திமுகவின் கோட்டை என்பார்கள்..
அங்கு விஜய்யின் பிரச்சாரத்துக்கு பயங்கரமான கூட்டம் வந்துள்ளது.. பல மாவட்டங்களிலிருந்து 10 லட்சம்பேருக்கு மேல் திரண்டிருக்காங்க.. சம்பந்தப்பட்ட இடத்துக்கு 6 கி.மீ வருவதற்கு 5 மணி நேரம் பயணம் செய்து வந்துள்ளார்.. 10.30 மணிக்கு போலீஸ் யாருமே அங்கில்லை.. கூட்டம் அதிகமாகிவிடும்தான் போலீஸ் வந்து இறங்கியிருக்கிறது.. இந்தளவுக்கு கூட்டம் வரும் என்று யாருமே எதிர்பார்க்கல.. விஜய்யும் எதிர்பார்க்கல..

2ம் கட்ட தலைவர்கள்
2ம் கட்டத்தலைவர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தக்கூட வழியில்லை.. 2ம் கட்ட தலைவர்கள் தவெகவில் இல்லை.. விஜய் மட்டுமே இப்போதைக்கு ஒரே தலைவராக உள்ளார்..
இவர்கள் எல்லாம் முழுக்க முழுக்க ரசிகர்களா? தொண்டர்களா தெரியாது.. ஆனால், வெறும் ரசிகர்கள் மட்டுமேயில்லை என்று மட்டும் தெரிகிறது.. விஜய்யின் அரசியல் செல்வாக்கு பெற்றிருக்கிறது என்பதைத்தான் இந்த கூட்டம் நிரூபிக்கிறது.. இதை விஜய்யும் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்..
எடுத்ததுமே மைக் ரிப்பேர்
அன்றைய தினம் மீடியாவின் கவரேஜ் அதிகமாகிவிட்டது.. காரணம் அரசியல் மாற்றம் வருமா? என்ற எதிர்பார்ப்பு ஊடகங்களிலும் தென்பட துவங்கிவிட்டது. இது விஜய்யின் கன்னிப்பேச்சு.. ஆனால், பேச்சு துவங்கியதுமே மைக் வேலை செய்யவில்லை.. ஆடிய கிளியராக இல்லை என்பதால் விஜய் பேசுவது யாருக்குமே கேட்கவில்லை..
மைக் ரிப்பேர் என்பது சாதாரண விஷயம்தான்.. முதல் பிரச்சாரத்துக்கு வருவதற்காக 6 மணி நேரம் காத்துக்கிடக்கிறார்கள்.. நாட்டை ஆள வேண்டும் என்று நினைப்பவர்கள், ஒரு மைக் ரிப்பேர் ஆகிவிட்டால், அதற்கு மாற்று என்ன ஏன் வைக்கவில்லை? என்று தெரியவில்லை..
20 நிமிடம் அவர் பேசினாலும், யாருக்கும் அந்த பேச்சு போய் சேரவில்லை.. 18 முதல் 40 வயது வரையுள்ளவர்கள் கூட்டம் விஜய்க்கு அதிகம்.. இதில் பெண்களும் அதிகம்.. மைக்கை சரி செய்யக்கூடிய 2ம் கட்ட தலைவர்கள் யாரும் விஜய்யிடம் இல்லையா? விஜய் கட்சியை வழிநடத்த செல்லக்கூடிய சீனியர்கள் யாரும் இல்லையா? என்ற கேள்விகள் எழுகின்றன.
23 கண்டிஷன் சரியா
அரசியல் கட்சிகள் நடத்தினாலே, சட்டம் ஒழுங்கு பிரச்சனை வந்துவிடக்கூடாது என்பதற்காக அரசு தரப்பில் நிபந்தனைகள் விதிப்பது இயல்பானது.. எல்லா கட்சிகளுக்கும் அரசு தரப்பில் நிபந்தனைகள் விதிக்கத்தான் செய்யும்..
ஆனால், ஆளும் கட்சி தங்களை முடக்க நினைக்கிறார்கள் என்று விஜய் சித்தரிப்பதை ஏற்க முடியாது.. காரணம், 10 லட்சம் பேர் கூடியிருக்கும் என்ன வேண்டுமானாலும் ஆபத்து நடக்கலாம்.. மின் கம்பத்தில் ஏறக்கூடாது என்ற புரிதல்கூட விஜய் தொண்டர்களுக்கு கிடையாதா? கரண்ட் கம்பத்தில் ஏறி ஒருவருக்கு ஏதாகி விட்டால் அதனால் விஜய்க்கு கெட்ட பெயர் என்பதைவிட, ஆளும் கட்சிக்குதான் கெட்ட பெயர் வரும்.. விமர்சனங்கள் வரும்.. எனவே அரசு தரப்பில் 23 நிபந்தனைகள் விதித்தது சரியானதுதான்..
விஜய் கட்சியில் ஒரே மைனஸ்
அதேபோல விஜய் கட்சியில் ஒரே மைனஸ், விஜய் மட்டும்தான் அந்த கட்சியில் உள்ளார்.. மக்களுக்கு தெரிந்த தலைவர்கள் அந்த கட்சியில் இல்லாதது, மிகவும் பலவீனமாகும்..
கூட்டணி என்று விஜய் சொன்னாலும், அரசியலில் உதயநிதிக்கு பிறகு வயது குறைவானவர் விஜய் மட்டுமே.. அப்படியிருக்கும்போது, விஜய்யை பின்பற்றி ராமதாஸ் வருவாரா? சீமான் வருவாரா? திருமாவளவன் வருவாரா? இதெல்லாம் கேள்விக்குறிகளே..
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications