சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஐயா ரொம்ப நன்றிங்கய்யா.. எங்க ஓட்டு உங்களுக்குதான்".. ஆஹா.. இதுக்கு பின்னாடி இவ்ளோ மேட்டர் இருக்கா!

முதல்வருக்கு நன்றி தெரிவித்த அரியர் மாணவர்கள் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: "ஐயா ரொம்ப நன்றிங்க ஐயா.. எங்க ஓட்டு உங்களுக்குதான்" என்று காரில் சென்று கொண்டிருந்த முதல்வரை விரட்டி விரட்டி நன்றி தெரிவித்துள்ளனர் கல்லூரி மாணவர்கள்.. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

    ஐயா ரொம்ப நன்றிங்கய்யா, எங்க ஓட்டு உங்களுக்குதான்.. முதல்வரிடம் கல்லூரி மாணவர்கள் - வீடியோ

    இதுவரைக்கும் ஆண்ட முதல்வர்களுக்கு எத்தனையோ பட்டங்களை மக்கள் வழங்கி பார்த்திருக்கோம்.. கேள்விப்பட்டிருக்கோம்.. இந்த அடைமொழியுடன் முதல்வர்களை பாராட்டி போஸ்டர்களும், கட்அவுட்களும் வைத்திருப்பதை பார்த்திருப்போம்.. ஆனால், அரியர்களின் நாயகனே என்று புகழ்ந்து பேனர் வைத்தது நம்ம எடப்பாடியாருக்குதான்!

    இறுதி செமஸ்டர் தேர்வுகளை தவிர மற்ற செமஸ்டர் தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து மார்க் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்ததில் இருந்தே தமிழகம் முழுசும் தேர்ச்சி பெற்ற கல்லூரி மாணவர்கள் முதல்வரை ஓயாமல் புகழ்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

    தமிழக ஆளுநருடன்.... முதல்வர் எடப்பாடி பழனிசாமி... இன்று மாலை சந்திப்பு!! தமிழக ஆளுநருடன்.... முதல்வர் எடப்பாடி பழனிசாமி... இன்று மாலை சந்திப்பு!!

    அரியர் அரசன்

    அரியர் அரசன்

    "காவிரி நாயகன், காவிரி கொண்டான், டெல்டா நாயகன்,எளிமை முதல்வர் " என ஏராளமான பட்டங்களை பெற்ற எடப்பாடி பழனிசாமிக்கு, அரியர் மாணவர்களின் அரசனே... மாணவர்களின் மனித கடவுளே.. என்று தங்கள் மகிழ்ச்சியை "மாணவர்களின் மனிதக் கடவுளே... எங்கள் ஓட்டு உங்களுக்கே"வெளிப்படுத்தும் விதமாக விதவித பேனர்களை வைத்து வருகின்றனர்.

    திருவள்ளூர்

    திருவள்ளூர்

    இந்நிலையில், நேற்றுகூட முதல்வர் நிகழ்ச்சி ஒன்றிற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.. அப்போது அவரது காருக்கு முன்னும், பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.. முதல்வர் அந்த வழியாக வருகிறார் என்ற தகவலை கேள்விப்பட்டதும், மாணவர்கள் சிலர் அங்கு திரண்டு விட்டனர்.. இவர்கள் எல்லாரும் அரியரில் பாஸ் ஆனவர்கள் போலும்.

    ஐயா.. நன்றி ஐயா

    ஐயா.. நன்றி ஐயா

    அதனால், முதல்வரின் கார் அவர்களை கடக்கும்போது, "ஐயா அரியர் பாஸ் பண்ணி வெச்சதுக்கு நன்றி ஐயா" என்று மகிழ்ச்சியுடன் சத்தமாக கூறினர்.. அதை செல்போனிலும் பதிந்து கொண்டு, சோஷியல் மீடியாவிலும் போட்டுவிட்டனர்.. இந்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது.

    பாராட்டுக்கள்

    பாராட்டுக்கள்

    உண்மையிலேயே, இந்த அரசியல் மிக பாராட்டப்பட வேண்டியது... அரியர் அறிவிப்பை வெளியிட்டு, தேர்தலில் ஓட்டுக்களை லட்டு போல பெருக்கவே இப்படிப்பட்ட வியூகங்களை வெளியிட அதிமுக தரப்பு திட்டமிட்டதாகவும் செய்திகள் கசிந்தன. அதுமட்டுமல்ல, மாணவர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்து வைக்கும் பேனர்களும், போஸ்டர்களும் பரபரப்பாக விளம்பரப்படுத்தப்படுத்தப்பட்டன.

    போஸ்டர்கள்

    போஸ்டர்கள்

    குறிப்பாக, "எங்கள் வாக்கு உங்களுக்கே" என்று ஒட்டப்பட்ட போஸ்டர்கள்தான் அதிக அளவில் சோஷியல் மீடியாவில் ஷேர் ஆனதாம்.. ஒருவேளை இதுவும் அதிமுகவின் ஐடி விங்கின் சரியான காய் நகர்த்தலாக இருக்கலாம் என்கிறார்கள்.. போஸ்டருக்கு பின்னாடி இப்படி ஒரு அரசியலா என்று பலர் வியந்தாலும், மாணவர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார் எடப்பாடியார்!

    English summary
    Ariyar students praising CM Edapadi Palanisamy, viral video
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X