சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"234 தொகுதிகளிலும்.. இந்துக்கள் அனாதையாக நிற்கிறோம்".. அர்ஜுன் சம்பத் ஷாக் முடிவு!

இந்து மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என்று அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினியைவிட ஒரு பெரிய ஷாக் தந்துள்ளார் அர்ஜுன் சம்பத்.. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று அறிவித்துள்ளார்.. இந்த தில் அறிவிப்பு பரபரப்பாக பேசப்பட்டும் வருகிறது.
ரஜினிதான் அடுத்த முதல்வர் என்று சொன்னவர்களில் மிக முக்கியமானவர் அர்ஜுன் சம்பத்.. ரஜினியே சும்மா இருந்தாலும், அடிக்கடி பேட்டிகளை தந்து அரசியலுக்கு அவரை வரும்படி அழைத்து கொண்டே இருந்தவர்.

"பற்றற்ற தன்மைதான் ஆன்மீக அரசியல்.. ரஜினியின் ஆன்மீக அரசியல் எனக்கு ரொம்பவும் பிடித்து போய்விட்டது.. நிச்சயமா.. ஆன்மீக அரசியலை சேர்ந்து செய்வோம்... அவருக்கு பக்கபலமா இந்து மக்கள் கட்சி துணை இருக்கும்... ஒரு மாற்றத்தை தமிழகத்தில் உண்டு பண்ணுவோம்" என்று நமக்கு அளித்த ஒரு பேட்டியில் அர்ஜுன் சம்பத் ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்.

பாத்ரூமுக்கு போன புவனேஸ்வரி.. பகீரை கிளப்பிய குரங்கு.. உண்மையிலேயே பாத்ரூமுக்கு போன புவனேஸ்வரி.. பகீரை கிளப்பிய குரங்கு.. உண்மையிலேயே "அது"தான் காரணமா!

ரஜினி

ரஜினி

இந்த சமயத்தில்தான் ரஜினி கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்ற அறிவிப்பு வெளியானது.. இது அர்ஜுன்சம்பத்துக்கு பெருத்த அதிர்ச்சியையே தந்தது.. அறிவித்தார்.. ஆனாலும் திமுகவை சரமாரியாக தொடர்ந்து விமர்சித்தபடியே இருக்கிறார்.. ஒருமுறை செய்தியாளர்களிடம் பேசும்போதுகூட ஸ்டாலினை கடுமையாக தாக்கி கூறியிருந்தார்.

அரசியல்

அரசியல்

"கிராம சபை என்பது கட்சி சார்பற்றது... அங்கு எதுக்காக அரசியல் செய்ய வேண்டும்... கிராமசபை, கூட்டுறவு சங்கங்கள் கட்சி சார்பற்று இருக்க வேண்டும் என அனைவரும் நினைக்கிறார்கள். திமுகவின் இந்த அரசியல் நடவடிக்கை ஜனநாயக அமைப்புகளையும் நாற்றங்கால்களையும் சிதைக்கும் வேலை" என்று கூறியிருந்தார்.. அதாவது, ரஜினியே அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கிவிட்ட நிலையில், அவரது கொள்கையை வைத்து, திமுகவையே காலி செய்வோம் என்று அர்ஜுன் சம்பத் பேசியது அப்போது பெரும் பரபரப்பை தந்தது.

3வது அணி

3வது அணி

இப்போது தனியாகவே தேர்தலை சந்திக்க தயார் என்று அறிவித்துள்ளார் அர்ஜுன் சம்பத்.. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த முடிச்சூரில் இந்து மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது.. இதில் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டார்.. பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது, "தமிழகத்தில் மூன்றாவது அணி அமையுமா என்று கேட்டால், அமைய வேண்டும் என்பதே எங்களது விருப்பம்.. ஏனென்றால், திமுக, அதிமுகவுக்கு மாற்றாக நல்ல சக்தி வர வேண்டும்..

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

இப்போதைய சூழ்நிலைக்கு ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்காத காரணத்தால் 3வது அணி எந்த அளவிற்கு மாற்றாகவும், வலிமையாகவும் இருக்கும் என்பதை கணிக்கமுடியாது.. எங்களை பொறுத்தவரையில் நாங்கள் 234 தொகுதியிலும் தனித்து நிற்க போகிறோம்.. வரும் தேர்தலில் இந்துக்கள் அனாதையாக நிற்கிறோம்.. மூன்றாவது அணி அமைந்தாலும் சரி, இந்து மக்கள் கட்சியின் வழி தனி வழி... ரஜினி வருவார் என்று எதிர்பார்த்தோம், .. ஆனால் அவர் வரவில்லை... அதனால், நாங்கள் ஆன்மீக அரசியலை முன்னெடுத்து செல்கிறோம்" என்றார்.

English summary
Arjun Sampath contest in in 234 constituencies in TN Assembly Election 2021
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X