உதயநிதி என்ற பெயரே சமஸ்கிருத பெயர்தான்.. சனாதனத்தை தப்பா பேசும் திமுக.. அர்ஜுன் சம்பத் பாய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உதயநிதி என்ற பெயரே சமஸ்கிருத பெயர்தான் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்த போது பேசுகையில், உதயநிதி அவர்களுக்கு நான் சுட்டிக் காட்டுவது என்னவென்றால் உங்களுடைய பிளஸ் 2 பாடப்புத்தகத்தில் சனாதனம், இந்து தர்மம் என்றால் என நீங்களே விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.

Arjun Sampath criticises Udhayanidhi Stalin

அதைத்தான் குழந்தைகள் படிக்கிறார்கள். உதயநிதி பிளஸ் 2 பாஸ் செய்திருக்கிறார் என நினைக்கிறேன். இல்ல படித்திருக்கிறாரா இல்லையா என எனக்கு தெரியாது. சினிமாவில் பிரபலமடைந்தார். ஸ்டாலின் மகன் என்பதால் பிரபலமடைந்தார். அனேமாக அவர் பிளஸ் 2 பாஸ் செய்திருப்பார். லயோலா கல்லூரிக்கெல்லாம் போயிருக்கிறார்.

கடல் வாழ் பழங்குடியினர்களாக நம்முடைய மீனவ மக்கள் இருக்கிறார்கள். மலைவாழ் மக்களை ஆதிவாசிகள் என்றும் பழங்குடியினர் என்றும் நம் அரசாங்கம் பாதுகாத்து அவர்களுக்கு உரிய மரியாதையை கொடுத்து வருகிறது. இன்று பழங்குடியின சமூகம் சார்ந்த திரௌபதி முர்மு, ஜனாதிபதியாக இருக்கிறார்.

மீனவர்கள், பர்வதக் குலத்தினரை கடல் வாழ் பழங்குடியினராக அறிவிக்க வேண்டும். மீனவ மக்கள் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து சிதறி கிடக்கிறார்கள். அவர்களை ஒன்றுப்படுத்த வேண்டும். அவர்களுடைய பண்பாட்டு அடையாளங்கள் மீட்கப்பட வேண்டும். இதற்காக அவர்கள் கடல் வாழ் பழங்குடியினராக அறிவிக்க வேண்டும்.

இந்த நாட்டில் பரதவர்கள் (மீனவர்கள்) அதிகமாக இருந்ததால்தான் பாரத நாடு என்ற பெயர் வந்தது. தசாவதாரத்தில் முதல் அவதாரமே மச்ச அவதாரம்தான். வேதங்களை தொகுத்தவர் யாரு, வியாசர் அவர் ஒரு மீனவர். இதுகுறித்து மத்திய அரசுக்கு கோரிக்கைகள் அனுப்பப்படும்.

உதயநிதி என்பதே சமஸ்கிருத பெயர்தான். கருணாநிதி, தயாநிதி, இன்பநிதி- இவையெல்லாமே சமஸ்கிருத பெயர்தான். சனாதனத்தை அவர்கள் தவறாக பிரச்சாரம் செய்கிறார்கள். சனாதனம் என்பது மதத்தோடு தொடர்புடையதும் ஜாதியோடு தொடர்புடையதும் அல்ல. அது தர்மத்துடன் தொடர்புடையது.

திருக்குறளில் அறம், பொருள் , இன்பம்... சனாதனத்தின் அடிப்படையே தர்மம்தான். சனாதன தர்மம் பழமையானது, எந்த அளவுக்கு பழமையானதோ அந்த அளவிற்கு புதுமையானது என அர்த்தம். யாரையும் துன்புறுத்தாமல் எல்லோரையும் அரவணைப்பது சனாதனம். ஒன்றே குலம் ஒருவனே தேவன் இதுதான் சனாதனம். இது குறித்து யார் வேண்டுமானாலும் பேசலாம், கருத்துரிமை இருக்கிறது. ஆனால் இழிவுப்படுத்த கூடாது.

சனாதனத்தை இழிவுப்படுத்துவதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். சனாதனம் தொற்று, எச்ஐவி என்றெல்லாம் பேசி மக்கள் மனதை புண்படுத்துகிறார்கள். சனாதனம் என்றால் என்ன என்ற ஒரு முடிவுக்கு வாங்க .அதன் பிறகு அது பற்றி பேசுவோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+