இந்தா வந்துட்டாங்கள்ல.. “காதலர் தின ஆபாச வெறியாட்டங்களை தடுப்போம்” - போலீசில் அர்ஜுன் சம்பத் மனு!
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் கலாச்சார பண்பாட்டு சீரழிவை ஏற்படுத்தும் காதலர் தின (Valentines day) கொண்டாட்டங்களை தடை செய்ய வேண்டும் என தமிழக காவல்துறை டிஜிபியிடம் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மனு அளித்துள்ளார்.
உலகம் முழுவதும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் வழக்கத்தை விட ஸ்பெஷலாக காதலர்கள் ஒவ்வொருவரும் தங்கள் அன்பை பரிமாறிக் கொள்கின்றனர். காதலர்கள் மட்டுமின்றி பலரும் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு பரிசை வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்துகின்றனர்.

தமிழகத்திலும் காதலர் தின கொண்டாட்டங்கள் நடைபெறுவது வழக்கம். காதல் ஜோடிகள் பல்வேறு இடங்களுக்கும் சென்று கொண்டாடி மகிழ்வார்கள். இந்நிலையில், காதலர் தின சிறப்பு நிகழ்ச்சிகளை தடை செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தமிழக போலீஸ் டிஜிபி-யிடம் மனு அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அர்ஜூன் சம்பத் அளித்துள்ள மனுவில், "தமிழர் பண்பாட்டிற்கும் கலாச்சாரத்திற்கும் தொடர்பில்லாமல் சமீபகாலமாக காதலர் தினம் (வேலண்டைன் டே) எனும் பெயரில் இளைஞர் மற்றும் மாணவர் சமூகத்தை கெடுக்கும் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.
பொது இடங்களில் மது அருந்துதல், ஆபாசமாக நடந்து கொள்ளுதல், பெண்களை கேலி செய்தல் உள்ளிட்ட சட்ட விரோத காரியங்களும் பரவலாக நடைபெறுகின்றன. எனவே தமிழகம் முழுக்க காதலர் தின கொண்டாட்டங்களை தடை செய்வதோடு பின்வரும் கோரிக்கைகளை ஏற்று உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும் படி வேண்டுகிறோம்.
• நட்சத்திர விடுதிகளில் மது அருந்தி ஆபாச நடனம் உள்ளிட்ட பண்பாட்டு சீரழிவு நிகழ்ச்சிகளையும், தனியார் மற்றும் அரசு தொலைக்காட்சிகளில் காதலர் தின சிறப்பு நிகழ்ச்சி எனும் பெயரில் ஆபாச நிகச்சிகளை நடத்துவதையும் தடை செய்ய வேண்டும்.
• தனியார் பண்பலை வானொலி மூலம் காதலை வெளிப்படுத்துகிறோம் எனும் பெயரில் சம்மந்தமில்லாமல் வீடுகளுக்கு போன் செய்து குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படுத்துகிற செயலை தடுக்க வேண்டும்.
• செல்போனில் ஆபாச எஸ்.எம்.எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் ஆபாச செய்தி - படங்கள் பரிமாறுகிறது, ஆபாச வாழ்த்து அட்டை ஆகியவை அனுப்புவது போற்ற அருவறுக்கத்தக்க செயல்களையும், பொது இடங்களில் பெண்களை கேலி செய்து பிரச்சனைகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட காரியங்களை தடை செய்ய வேண்டுகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications