நடிகர் விஜய்யின் பின்னணியில் இவர்கள் தான்.. திமுகவின் திட்டமே வேறு.. அர்ஜூன் சம்பத் பரபரப்பு பேட்டி
சென்னை: "நடிகர் விஜய் திமுகவின் ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார், அதனால் திமுக எதிராக பேச வைத்து அதிமுக மற்றும் பாஜக வாக்குகளை அபகரிக்க முயற்சிக்கும் எண்ணம் உள்ளது. திமுக மற்றும் தவெக ஒன்று சேர்ந்து கள்ள கூட்டணியில் உள்ளன" என்று இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.. மேலும் தவெக தலைவர் விஜய்யின் அரசியலையும் அர்ஜூன் சம்பத் கடுமையாக விமர்சித்துள்ளார்.
விஜய்யின் அரசியலை பல கட்சிகள் விமர்சித்து வருகிறார்கள்.. குறிப்பாக கொள்கை எதிரி என்று சொல்லும் பாஜகவை விஜய் ஏன் விமர்சிப்பதில்லை? விஜய் தான் பாஜகவின் C டீம் என்று திமுக தொடர்ந்து கூறிவருகிறது.

அதேபோல விசிக திருமாவளவன், "விஜய் தனித்து இயங்கவில்லையோ என்கிற ஒரு சந்தேகம் எழுகிறது, நல்லது, கெட்டதை அவர் தான் தீர்மானிக்க வேண்டும். பாஜகவோடு அவர் காட்டுகிற அணுகுமுறை கூட, அவருக்கு பயன் தருவதாக அமையாது" என்று சொல்லி வருகிறார்.
அதேபோல மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி, திமுக தீய சக்தி, தவெக தூய சக்தி என விஜய் பேசுவது அடுக்கு மொழி அல்ல; அது துடுக்கு மொழி. திமுகவை தாக்கி பேசும் அளவுக்கு, பாஜக மீது அவர் எந்த விமர்சனமும் வைக்கவில்லை? அவர் ஏன் பாஜகவை பார்த்து அச்சப்படுகிறார் என தெரியவில்லை என்று கூறி வருகிறார்..
இப்படி பாஜகவுடன் தொடர்புபடுத்தி தலைவர்கள் விமர்சித்து வரும்போது, பாஜகவை விஜய் எதிர்ப்பதாக சிலர் தலைவர்கள் பாஜக ஆதரவாளர்களே குற்றஞ்சாட்டி வருகிறார்கள். அதில் ஒருவர்தான் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்.
சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் அர்ஜூன் சம்பத்பேசும்போது, "நடிகர் விஜய் திமுகவின் ஊதுகுழலாக உள்ளார். திமுகவும் கிறிஸ்துவ அமைப்புகளும் சேர்ந்து விஜய்க்கு எப்படி பேச வேண்டும் என பேச்சை எழுதி தருகிறார்கள்.
மக்கள் நீதி மையத்திற்கு என்ன நிலை ஏற்பட்டதோ அதேதான் தமிழக வெற்றி கழகத்திற்கும் ஏற்பட உள்ளது. ஆர்எஸ்எஸ் குறித்து பேசுவதற்கு விஜய்க்கு வயதோ, அரசியல் அனுபவமோ கிடையாது. தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 3 சதவீத ஓட்டு தான் பெறும்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், மீண்டும் விஜய்யை விமர்சித்துள்ளார் அர்ஜூன் சம்பத்.. காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தவெக விஜய் ஈரோட்டில் நடத்திய கூட்டம் தோல்வி அடைந்தது, திமுகவுக்கும் தவெகவிற்கும் தான் போட்டி என்கிறார்.. திமுக ஒரு தீய சக்தி என எழுதிக் கொடுப்பதே திமுக தான்,
ஒவ்வொரு தேர்தலையும் திமுக நடிகரை கட்சி ஆரம்பிக்க வைக்கிறது.. கடந்த தேர்தலில் நடிகர் கமலை கட்சி ஆரம்பிக்க வைத்தனர், மக்கள் நீதி மையம் ஆரம்பித்து திமுகவை எதிராக பேச வைத்து தேர்தலில் வாக்கை மாற்றினார்கள்.. இப்போது நடிகர் விஜய் திமுகவின் A டீம்மாக செயல்படுகிறார்" எனக் கூறியுள்ளார்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications