இது வேற லெவல் அரசியல்.. தமிழ்நாட்டின் விஸ்வரூப அரசியல்.. முழுசாக டி.ஆராக மாறிய அர்ஜுனமூர்த்தி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிதாக கட்சி தொடங்கிய அர்ஜுனமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ரைமிங்காக பேசியுள்ளார். புலி பட விழாவில் டி ராஜேந்திரன் பேசியது போன்று இருந்தது.

அர்ஜுனமூர்த்தி.. இவரை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. பாஜக அறிவுசார் பிரிவில் இருந்தவர். ரஜினி அரசியல் கட்சியைத் தொடங்குகிறார் என்றவுடன் பாஜகவுக்கு முழுக்கு போட்டுவிட்டு ரஜினியை நோக்கி வந்தார்.

ரஜினியின் அறிவிக்கப்படாத கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டார். அந்த பொறுப்பில் களபணி ஆற்றி வந்தார்.

யோசனை

யோசனை

இந்த நிலையில் ரஜினி உடல்நிலை பாதிப்பால் ஹைதராபாத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்லக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி அனுப்பியிருந்தனர். இதனால் பல கட்ட யோசனைக்கு பிறகு அரசியல் கட்சியை இப்போது தொடங்க இயலாது என ரஜினி கூறிவிட்டார்.

தமிழருவியார்

தமிழருவியார்

இதனால் ரசிகர்கள், அர்ஜுனமூர்த்தி, தமிழருவியார் உள்பட அனைவருமே ஷாக்காகினர். இந்த நிலையில் ரஜினியை வலுக்கட்டாயமாக அரசியலுக்கு இழுக்கும் எண்ணம் தகர்த்தெறியப்பட்டது. இதையடுத்து அர்ஜுனமூர்த்தி புதிய கட்சியை தொடங்கவுள்ளதாக அறிவித்தார்.

விரும்பும் ரஜினி ரசிகர்கள்

விரும்பும் ரஜினி ரசிகர்கள்

அத்துடன் மாற்றத்தை விரும்பும் ரஜினி ரசிகர்கள் தமக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என விரும்பினார். ஆனால் ரசிகர்களோ அர்ஜுனமூர்த்தியை கண்டு கொள்ளவேயில்லை. மாறாக திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இணைந்தார்கள். இந்த நிலையில் இன்றைய தினம் புதிய கட்சியை அவர் தொடங்குவதாக அறிவித்து ட்வீட் போட்டிருந்தார்.

அடுக்குமொழி

அதில் பிரஸ் மீட்டுக்கான இடமாற்றத்தை குறிப்பிட்டிருந்த அர்ஜுனமூர்த்தி தனது ட்வீட்டில் அடுக்குமொழியில் பேசியிருந்தார்.
இது வேற லெவல் அரசியல்,
இது தமிழ்நாட்டின் விஸ்வரூப அரசியல்,
உண்மையான மாற்றத்தின் அரசியல்,
தமிழ் மக்கள் முன்னேற்றத்திற்கு பயன்படும் அரசியல்,
இந்த கட்சிக்கு ஜாதி, மதம் இல்லை...
ஆணவத்தால் வரும் மதமும் இல்லை...

அசுர புலி

அசுர புலி

இவரது இந்த ட்வீட் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் பலர் புலி பட இசை வெளியீட்டு விழாவில் டி. ஆர் ராஜேந்திரன், அட்மையர் பண்ற புலி, அட்டாக் பண்ற புலி, அட்டகாசமான புலி, அசத்தலான புலி, அசுர புலி, அற்புத புலி , அபூர்வ புலி என அடுக்கிக் கொண்டே போனதை அர்ஜுனமூர்த்தி ட்வீட்டுடன் நெட்டிசன்கள் ஒப்பிடத் தொடங்கிவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+