அர்ஜுனரு வில்லு அரிச்சந்திரன் சொல்லு.. விஜய் ஆளுநர் மாளிகை செல்வதை சினிமாவாக பார்க்கும் தவெகவினர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அர்ஜூனரு வில்லு அரிச்சத்திரன் சொல்லு, இவனோட தில்லு பொய்க்காது, எதிரியைக் கொல்லு, இமயத்தை வெல்லு, உனக்கொரு எல்லை கிடையாது, யாரோ யாரிவனோ, ஒரு நீரோ தீயோ யார் அறிவார், ஆழம் வேரிவனோ, அதை அசைத்துப் பார்க்க யார் வருவார், ஓஓ...ஓஓ...ஓஓ...ஓஓ என்று கில்லி படத்தில் திரிஷாவை விஜய் அழைத்து செல்லும் போது பாடல் வரும். இந்த பாடலை அப்படியே ஆளுநரை பார்க்க விஜய் காரில் செல்வதற்கு பேக்ரவுண்டில் ஓடவிட்டுள்ளார்கள் விஜய் ரசிகர்கள். இந்த வீடியோவும் தவெகவினர் பலரால் பகிரப்படுகிறது.

தவெக தலைவர் விஜய் தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்கள் பெற்ற போதிலும் ஆட்சியமைக்க முடியாமல் தடுமாறி வந்தார். ஏனெனில் திமுக, அதிமுக கூட்டணியில் மீதமுள்ள இடங்கள் இருந்தன. விஜய்க்கு இரண்டு வாய்ப்பு இருந்தது. ஒன்று அதிமுக கூட்டணி பக்கம் போவது. அங்கு பாஜகவை ஆதரித்து எளிதாக முதல்வராகலாம் என்ற வாய்ப்பு இருந்தது. ஆனால் அவர் அந்த பக்கம் போவதற்கு யோசித்தாரா இல்லையா என்பது கூட முழுமையாக தெரியும் முன்பே, ஜெயித்த உடனே காங்கிரஸ் முதல் ஆளாக வந்து கூட்டணியில் இணைந்துவிட்டது. இதனை அதிமுக, அதிமுக, பாஜக என யாருமே எதிர்பார்க்கவில்லை..

Arjunar Villu Vijay fans erupt as TVK Chief s convoy races towards Raj Bhavan in a cinematic thriller

இந்த சூழலில் விஜய் மதசார்பற்ற அணிகளின் பக்கம் சாய்ந்தது. கடுமையான போராட்டத்திற்கு நேற்று இடதுசாரிகள் ஆதரவு தந்தார்கள். ஆனால் திருமாவளவன் உடனே ஆதரவு தரவில்லை..அவர் திமுக தலைவர் ஸ்டாலினை நேற்று மாலை நேரில் சந்தித்து நீண்ட நேரம் விவாதித்தார். அதன்பின்னர் இன்று காலை அறிவிப்பதாக கூறியிருந்தார். அதன்பிறகு மாலை அறிவிப்பதாக கூறினார். மாலையில் தான் தவெகவிற்கு ஆதரவு தந்தார். அதேபோல் நேற்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் ஆதரவு தரவில்லை என மறுத்தது.

ஆனால் இன்று திருமாவளவன் ஆதரவு தந்த சிறிது நேரத்திலேயே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் ஆதரவு தந்தார்.இந்த முறை விஜய்க்கு ஆதரவு என்றே கடிதம் வழங்கினார். இதனால் விஜய்க்கு இருந்த சட்ட சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்துள்ளது.விஜய் ஏற்கனவே மூன்று முறை ஆளுநரை சந்தித்தபோது, போதிய எண்ணிக்கை இல்லை என்று திருப்பி அனுப்பினார். இன்று முழுமையாக ஆதரவு வந்ததால், அவரை பதவியேற்க அழைப்பு விடுக்க உள்ளார்.

இதனிடையே நான்காவது முறையாக ஆளுநரை பார்க்க விஜய் சென்ற போது பாதியிலேயே திரும்ப வேண்டியதிருந்தது. ஏனெனில் ஆளுநர் கேரளா செல்ல வேண்டியதிருந்தது. ஆனால் ஆளுநர் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு விஜய்க்கு நேரம் கொடுத்துள்ளார். விஜய் ஆளுநரை பார்க்க பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டார். இதனை கண்டு மகிழ்ச்சி அடைந்த தவெகவினர், கில்லி பாட்டை ஓடவிட்டு, லைவ் வீடியோவை கட் செய்து பரப்புகிறார்கள்.

அர்ஜூனரு வில்லு அரிச்சந்திரன் சொல்லு, இவனோட தில்லு பொய்க்காது, எதிரியைக் கொல்லு, இமயத்தை வெல்லு, உனக்கொரு எல்லை கிடையாது, யாரோ யாரிவனோ, ஒரு நீரோ தீயோ யார் அறிவார், ஆழம் வேரிவனோ, அதை அசைத்துப் பார்க்க யார் வருவார், ஓஓ...ஓஓ...ஓஓ...ஓஓ என்று கில்லி படத்தில் திரிஷாவை விஜய் அழைத்த செல்லும் போது பாடலை போட்டு வெளியிட்டு வருகிறார்கள். விஜய் காரில் ஆளுநர் மாளிகை நோக்கி செல்வதையும் சினிமா போல் பரபரப்பு காட்சியாக விஜய் ரசிகர்கள் பார்க்கிறார்கள்.இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+