சென்னை எழும்பூரில் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட எஸ்.ஐ சிகிச்சை பலனின்றி பலி! நண்பர்கள் 2 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனை அருகே கடந்த 18 ஆம் தேதி ஆயுதப்படை உதவி ஆய்வாளர் ராஜாராமன்(53) மீது கொலை வெறி தாக்குதல் நடந்த சம்பவத்தில், உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ராஜாராமன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ராஜாராமன் (54). இவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கைதிகள் வார்டில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ராஜாராமன் வார விடுமுறை அன்று நண்பர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

Chennai Police Crime

இந்த நிலையில் ராஜாராமன் கடந்த 18 ஆம் தேதி இரவு 8 மணியளவில் எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் 'வீடியோ கேம்' விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவரும், அவருடன் வந்திருந்த ராக்கி, அய்யப்பன் ஆகியோரும் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது.

'வீடியோ கேம்' விளையாடி விட்டு ராஜாராமன் கிளம்ப தயாரான நேரத்தில் அவருடன் ராக்கி, அய்யப்பன் ஆகியோர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவரை கடுமையாக தாக்கி கீழே தள்ளி விட்டுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்து ராஜாராமன் மயங்கினார்.

சுய நினைவு இல்லாமல் கிடந்த அவர் மீட்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனைக்கு முதலில் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவரது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து ராஜாராமன் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து எழும்பூர் போலீசார் இதனை கொலை வழக்காக மாற்றம் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, உயிரிழந்த எஸ்.ஐ ராஜாராமனின் நண்பர்கள் ராக்கி என்கிற ராகேஷ், அய்யப்பன் என்கிற சரத்குமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+