ஆம்ஸ்ட்ராங் முகத்தை பார்த்ததுமே! திருமாவளவனின் கைகளை பிடித்து கதறிய பா.ரஞ்சித்! பின்னணி என்ன?
சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனின் கைகளை பிடித்துக் கொண்டு இயக்குநர் பா.ரஞ்சித் கதறி அழுத காட்சிகள் காண்போரை கலங்கச் செய்தது.
சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாத் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டருகே ஆதரவாளர்களுடன் இருந்த போது அவரை இரு சக்கர வாகனத்தில் சுற்றி வளைத்த கும்பல், அரிவாளால் வெட்டி சாய்த்தது. இதில் நிலை குலைந்து ஆம்ஸ்ட்ராங் கீழே விழுந்தார்.

இதையடுத்து அந்த கும்பல் தப்பியோடிவிட்டனர். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆம்ஸ்ட்ராங்கின் மரண செய்தி கேட்டு அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார் பா.ரஞ்சித்.
அவரை பார்த்ததும் ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் கதறி கொண்டே ஓடி வந்தனர். அப்போது துக்கம் தாங்காமல் பா.ரஞ்சித், தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதார். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு நள்ளிரவு முழுவதும் உடல் இருந்த நிலையில் காலையில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வருகை தந்தார். அப்போது பா.ரஞ்சித்தும் அங்கு வந்தார். திருமாவளவனுடன் சென்று ஆம்ஸ்ட்ராங் முகத்தை காண சென்ற பா.ரஞ்சித் துக்கம் தாங்காமல் திருமாவின் கைகளை பிடித்துக் கொண்டு கதறி அழுதார்.
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக ஆம்ஸ்ட்ராங் பொறுப்பேற்றது முதல் பல இளைஞர்களின் கல்விக்கு உதவி செய்து வந்துள்ளார். அந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களில் ஒருவர்தான் இயக்குநர் பா.ரஞ்சித். இவர் சிறுவயது முதலே பகுஜன் சமாத் கட்சியுடன் இணைந்து பணியாற்றியவர்.
அம்பேத்கர் குறித்து பா.ரஞ்சித்திற்கு விளக்கியவர் ஆம்ஸ்ட்ராங்தான். தனது சினிமாக்களில் பெரியார், அம்பேத்கரின் தத்துவங்களையும் கொள்கைகளையும் பா.ரஞ்சித் தைரியமாக பேசுவதற்கு காரணமே ஆம்ஸ்ட்ராங்தான். ரஞ்சித்துக்கு புரட்சி இயக்குநர் என்ற பட்டத்தை வழங்கியவர் ஆம்ஸ்ட்ராங். இயக்குநர் பா. ரஞ்சித் தனது பலமாக கருதியது ஆம்ஸ்ட்ராங்கைத்தான். அதனால்தான் இன்று ஆம்ஸ்ட்ராங் கொலையுண்டதை அறிந்து ரஞ்சித் நிலைக்குலைந்து போயுள்ளார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications