ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. போலீசில் சரணடைந்தவர்கள் உண்மையான கொலையாளிகள் இல்லை.. திருமாவளவன் பரபர
சென்னை: பகுஜன் சமாஜ் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் 8 பேர் போலீசாரிடம் சரணடைந்துள்ள நிலையில், அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே போலீசாரிடம் சரணடைந்தவர்கள் உண்மையான கொலையாளிகள் இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டையே உலுக்கும் படுகொலை நேற்றிரவு அரங்கேறியது. சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டின் அருகே வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டின் அருகே இருந்த போது அவரை இரு சக்கர வாகனத்தில் சுற்றி வளைத்த கும்பல், அரிவாளால் வெட்டி சாய்த்தது. இதனால் நிலைகுலைந்த ஆம்ஸ்ட்ராங் ரத்த வெள்ளத்தில் அப்படியே சரிந்தார்.
படுகொலை: இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அருகே உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்த போது சம்பவ இடத்தில் இருந்து கொலையாளிகள் கைகளில் அரிவாள் கத்தியுடன் ஓடிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன. கொலையாளிகளை தீவிரமாக போலீசார் தேடி வந்த நிலையில், 8 பேர் இந்த கொலை தொடர்பாக போலீசாரிடம் சரணடைந்தனர்.
திருமாவளவன்: அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் உண்மையான கொலையாளிகள் இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வந்த திருமாவளவன் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் உண்மையான கொலையாளிகள் இல்லை என்று திருமாவளவன் தெரிவித்தார். மேலும், பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்திலேயே ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
கண்டனம்: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ஆம்ஸ்ட்ராங்கை சமூக விரோத கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது. இதை விசிக வன்மையாக கண்டிக்கிறது. அவர் ஏழை, எளிய மக்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். அம்பேத்கர் கொள்கை வழியில் இயங்கி வந்த அவர், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர். மாயாவதி அம்மையாரின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்து வந்தவர்.. ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த மாயாவதியே நேரில் வருகிறார்.
அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்க உள்ளோம். அவரது உடலை கட்சி அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்ய பகுஜன் சமாஜ் கோரிக்கை விடுத்துள்ளது. விசிகவும் இந்த கோரிக்கையை வலியுறுத்துகிறது. எனவே, தமிழக அரசு இந்த கோரிக்கையை பரீசிலனை செய்ய வேண்டும்.
உண்மையான குற்றவாளிகள்: இந்த கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகளை கண்டறிய தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இப்போது சரணடைந்துள்ளவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை. கொலையாளிகள், அவர்களை தூண்டிவிட்டவர்கள் என அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
எனவே, சரணடைந்துள்ளவர்களை கைது செய்துவிட்டோம் என்று புலன் விசாரணையை நிறுத்திக் கொள்ள கூடாது. உண்மையான குற்றவாளிகள் தூண்டிவிட்டவர்கள் மீது நடவடிக்கை தேவை. அவர்களை கைது செய்ய வேண்டும்.
போலீசார் தவறு: ஆம்ஸ்ட்ராங் பொதுமக்கள் பிரச்சினைகளில் தலையிட்டுள்ளார். பொதுமக்கள் பக்கம் நின்றுள்ளார். இதனால் ஆங்காங்கே பகை, முன்விரோதம் இருக்கிறது. இது போலீசாருக்கு நன்கு தெரியும். எனவே, போலீசார் அவருக்கு தேவையான பாதுகாப்பை வழங்கி இருக்க வேண்டும். குற்றவாளிகளை கைது செய்வதிலாவது அலட்சியம் காட்டாமல் போலீசார் இருக்க வேண்டும்
தமிழ்நாட்டில் தலித் இளைஞர்கள் கொலை செய்வது தொடர்கிறது. இன்று அரசியல் தலைவர் இல்லத்தின் அருகிலேயே கொலை செய்யப்பட்டுள்ளார். இது போலீசாருக்கும் தமிழக அரசுக்கும் விடுக்கப்பட்டுள்ள சவால். கூலிப்படை கும்பலை, சாதியவாத கும்பலை கண்டறிந்து கட்டுப்படுத்த தவறினால்.. தமிழக அரசு களங்கம் ஏற்படும்" என்று அவர் தெரிவித்தார்.
-
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா!












Click it and Unblock the Notifications