ஏனாம் அருகே கரையைக் கடந்த அர்னாப் புயல்.. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல் ஏனாம் - காக்கிநாடா இடையே கரையைக் கடந்தது. மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று முன் தினம் நிலவிய அர்னாப் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று நேற்று முன் தினம் மாலை 5.30 அளவில் தீவிர புயலாக மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று நேற்று முன் தினம் இரவு 11.30 மணி அளவில் மிக தீவிர புயலாக அதே பகுதிகளில் நிலவியது.

Cyclone Tamilnadu Weather

அர்னாப் புயல்

அர்னாப் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 8.30 மணி அளவில் மிக தீவிர புயலாக மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது நேற்று மாலை வரை மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்தது. மிகக் கடுமையான சூறாவளி புயல் "அர்னாப்" மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் ஆந்திர கடற்கரையை அடுத்துள்ள பகுதியில் இருந்து கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு சுமார் 22 கிமீ வேகத்தில் கிட்டத்தட்ட மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று இரவு 11:30 மணிக்கு அதே பகுதியில் மையப்படுத்தப்பட்டிருந்தது.

அதன் பிறகு, அர்னாப் புயல் மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள் ஆந்திராவின் காக்கி நாடா மற்றும் புதுச்சேரியின் ஏனாம் கடற்கரை பகுதிகளில், பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே ஏனாம் பகுதிகளுக்கு அருகில் மிக தீவிர புயலாக கரையை கடந்தது. அர்னாப் புயல் கரையை கடந்தபோது புதுச்சேரி, ஆந்திரா, மேற்கு வங்காளத்தில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை

புயல் கரையைக் கடந்த நிலையில், இன்று மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அருகே உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியிலிருந்து, 'அா்னாப்' மிக தீவிர புயலின் மையம் வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக புதன்கிழமை, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

மேற்கு தொடா்சசி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வியாழன், வெள்ளி (அக்டோபர் 29, 30) ஆகிய 2 நாள்கள் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சனிக்கிழமை (அக்டோபர் 31) வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

சென்னை வானிலை

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் புதன்கிழமை (அக்டோபர் 28) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வட தமிழக கடலோரப் பகுதிகளில் புதன்கிழமை சூறாவளிக் காற்று 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று மாலை முதல் காற்றின் வேகம் குறைந்து 80 கி.மீ. வேகத்திலும், வியாழக்கிழமை (அக்.29), காற்றின் வேகம் குறைந்து 60 கி.மீ. வேகத்திலும் அதன்பிறகு படிப்படியாக குறையக்கூடும்.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+