Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கைது செய்து பார்...சவால் விட்ட மீரா மிதுன் கைது..வீடியோ வெளியிட்டு ஆர்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:தாழ்த்தப்பட்ட மக்கள் ஏமாற்றுகிறார்கள் என பட்டியலின சமூகத்தை குறிப்பிட்டு இழிவாக விமர்சித்து பேட்டி அளித்த நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில் தலைமறைவாக இருந்த அவரை திருவனந்தபுரத்தில் வைத்து சென்னை சைபர் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

சர்ச்சை நாயகி மீரா மிதுன்

நடிகை மீரா மிதுன் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் பிரபலம் ஆவார். மாடலிங் துறையில் உள்ள சக போட்டியாளருடன் ஏற்பட்ட பிரச்சினையில் புகார் அளிக்க வந்ததன் மூலம் மீரா மிதுன் முதன் முதலில் வெளிச்சத்துக்கு வந்தார். அவரை மிரட்டி ஆள் வைத்து அடிக்க பேசிய வாய்ஸ் மெசேஜ் மூலம் பிரபலம் ஆனார்.

பின்னர் பிக்பாஸில் சேரன் மீது அடுக்கடுக்காக புகார் தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். வெளியில் வந்தப்பின் தொகுப்பாளர் கமல்ஹாசன் மீது விமர்சனம் வைத்தார். தொடர்ந்து அஜித், விஜய் மீது விமர்சனம் வைத்து ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்டார். இடையில் தனியார் விஜிலென்ஸ் அமைப்பு ஒன்றில் தமிழகத்துக்கு பொறுப்பு வாங்கிவிட்டு தமிழகத்தில் லஞ்சம் இல்லாமல் ஆக்குவேன் என விவரம் தெரியாமல் லஞ்ச ஒழிப்பு டிஜிபி ரேஞ்சுக்கு பேட்டி அளித்தார்.
சட்டம் தெரியாமல் பேசி சர்ச்சையில் சிக்கினார்

Arrest and see ... Meera Mithun who challenged ... Arrested

தொடர்ந்து சர்ச்சையில் ஈடுபட்டாலும் அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தாலும் பெரிய அளவில் அவரை அது பாதிக்கவில்லை. இதனால் அவர் தான் என்ன பேசுகிறோம் என்பது அறியாமல் சமூக வலைதளங்களில் வரும் லைக்குகளை வைத்து கண்டபடி பேச ஆரம்பித்தார். அப்படி பேசித்தான் மிகப்பெரிய சிக்கலில் சிக்கினார் மீரா மிதுன்.

மிகப்பெரிய அரசியல் தலைவர்களே அஞ்சும் பிரிவு வன்கொடுமைச் சட்டம், ஆனால் விவரம் புரியாத மீரா மிதுன் சமீபத்தில் பட்டியலின மக்களை அவதூறாக பேசியதன் மூலம் வன்கொடுமைச் சட்டத்தில் சிக்கினார். சமீபத்தில் ஒரு யூடியூப் தளத்துக்கு பேட்டி அளித்த அவர் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கிறேன் என்று , "பொதுவாக நான் தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றி பேசுவது இல்லை. ஏன் அவர்களைப் பற்றி தவறாகப் பேசுகிற மாதிரி வருகிறது என்றால், எல்லா தாழ்த்தப்பட்ட மக்களும் தப்பான, மோசமான குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

அதனால்தான் அவர்களுக்கு நிறைய பிரச்னைகள் வருகிறது. திரையுலகில் இருக்கும் தாழ்த்தப்பட்ட இயக்குனர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள்தான் எல்லா வேலையும் செய்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள். அவர்களுக்கு, தாழ்த்தப்பட்ட இயக்குனர்களுக்கு மற்றவர்கள் ஏன் உதவி செய்கிறார்கள் என்று தெரியவில்லை" என்று பேட்டி அளித்தார்.

பெரும் பிரச்சினையை கிளப்பிய பேட்டி

பட்டியலின மக்களைப் பற்றி மீரா மிதுன் பேசியிருக்கும் வெறுப்புப் பேச்சு, சாதி பெயரை குறிப்பிட்டுத் திட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பட்டியலின மக்களை விமர்சித்து மிகப்பெரும் அரசியல்வாதிகள் எல்லாம் பெரும் சிக்கலில் சிக்கிய சூழலில் மீரா மிதுன் அடிப்படி சட்டப்புரிதல் இல்லாமல் பேசியது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

சென்னையில்விசிக வன்னி அரசு புகார் வன்னி அரசு அளித்த புகாரைப்பெற்ற சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் பிரிவு போலீஸார் மீரா மிதுன் மீது ஐபிசி பிரிவுகள் 153 ( இரு பிரிவுகள் இடையே கலவரத்தை தூண்டுதல்) 153(எ)1 (பேட்டி, பேச்சு, எழுத்து மூலம் இரு சமூகங்கள் இடையே மோதலை தூண்டுதல்) 505(1) (பி) (குறிப்பிட்ட சமூகத்திற்கு, அரசுக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுவது) 505(2)(மக்களின் நம்பிக்கை, வழிபாட்டுக்கு எதிராக பேசுவது, நடப்பது) 3(1) r, 3(1)(u), 3(1) (s) of SC/ST prevention act (2வன்கொடுமை தடுப்புச் சட்டம்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

பிரதமர், முதல்வருக்கு வீடியோ

அதன் பின்னர் அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பினர். வன்கொடுமைச் சட்டத்தின் பாதிப்பு புரியாமல் தேசத்தலைவர்கள் ரேஞ்சுக்கு மீரா மிதுன் பில்டப் கொடுத்து வீடியோ வெளியிட்டார். பிரதமருக்கும், முதல்வருக்கும் என்னை கைது செய்தால் என சவால் விட்டால், கனவில் கூட நடக்காது என்றெல்லாம் சவால் விட்டார்.

தலைமறைவு

பின்னர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். சைபர் பிரிவு போலீஸாரை சாதாரணமாக நினைத்து வீடியோக்களை பதிவு செய்து வந்தார். நவீன விஞ்ஞானத்தின் முன் தலைமறைவு சாத்தியமே இல்லை. அதிலும் இதுபோன்ற புரிதல் இல்லாத ஒருவர் எளிதாக தனதி ஐபி அட்ரஸ், செல்போன் எண்கள் மூலம் சிக்குவார் என்பது தற்போது உறுதியானது.

அவரது வீடியோ பதிவு ஐபி அட்ரஸை சைபர் பிரிவு போலீஸார் ஆய்வு செய்தபோது திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது. பின்னர் போலீஸார் அங்குச் சென்று அவரை கைது செய்தனர்.

கைதானார் மீரா மிதுன்

தலைமறைவாக திருவனந்தபுரத்தில் மறைந்திருந்த மீரா மிதுனை போலீஸார் வளைத்துப்பிடித்து கைது செய்த போது அவர் கத்தி, கூச்சலிட்டுள்ளார். ஆனால் போலீஸார் இதற்கெல்லாம் மசிவார்களா என்ன? கைது செய்து அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர்.
வெளிமாநிலம் என்பதால் டிரான்சிட் வாரண்ட் பெற்றப்பின் இன்று இரவு அவரை சென்னை அழைத்து வருகிறார்கள். பின்னர் இங்கு மாஜிஸ்ட்ரேட் வீட்டில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

60 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்கும் நிலை வரலாம்

வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஜாமீன் கிடைக்காத பிரிவு ஆகும். எப்படியும் கீழமை நீதிமன்றத்தில் கிடைக்காத ஜாமீன் செசன்ஸ் நீதிமன்றத்தில் தான் கிடைக்கும். ஒரு பிக்பாஸ் கால அளவுக்கு சுமார் 60 நாட்களுக்கும் மேல் ஆகும் அவருக்கு ஜாமீன் கிடைக்க என்கிறார்கள் போலீஸ் தரப்பில்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+