உரிமைக்காக போராடும் ஆசிரியர்கள்.. பொங்கல் நாளில் கைது செய்வதா? சண்டைக்கு வந்த அன்புமணி ராமதாஸ்!
சென்னை: உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? என கேள்வி எழுப்பியுள்ள பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுகவின் துரோகத்திற்கு மன்னிப்பே கிடையாது என விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகம் அருகில் இன்று போராட்டம் நடத்திய பகுதிநேர சிறப்பாசிரியர்களை காவல்துறையினர் கைது செய்து தனி இடங்களில் அடைத்து வைத்துள்ளனர்.
உரிமைகளை வென்றெடுப்பதற்காக போராடிய ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கூட கைது செய்து அடைத்து வைப்பது கண்டிக்கத்தக்கது. பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை.

மாதம் ரூ. 5000 என்ற மிகக்குறைந்த ஊதியத்தில் பணியில் சேர்ந்த அவர்களுக்கு 13 ஆண்டுகளாகியும் பணிநிலைப்பு வழங்கப்படவில்லை. ஆண்டுக்கு சராசரியாக ரூ.576 என்ற அளவில் 13 ஆண்டுகளில் ரூ.7500 மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பணி நிலைப்புக் கோரி பல ஆண்டுகளாக போராடியும் பயன் இல்லாததால் தான் அவர்கள் மீண்டும் போராட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
பகுதி நேர ஆசிரியர்களை அழைத்துப் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், அவர்களின் கோரிக்கையை ஏற்று பணி நிலைப்பு வழங்குவதற்கு பதிலாக ரூ.2500 ஊதிய உயர்வு வழங்குவதாக பேரம் பேசுகிறார். அதை ஏற்க மறுத்து ஆசிரியர்கள் போராட்டம் நட்த்தினால் அவர்களை கைது செய்து அடைத்து வைக்கிறார்கள். இதன் மூலம் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறைகளையும், துரோகங்களையும் திமுக அரசு கட்டவிழ்த்து விட்டு வருகிறது. இதற்கு மன்னிப்பே கிடையாது.
திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி ( எண் 181) அளித்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் அனைவரையும் பணி நிலைப்பு செய்ய திமுக அரசு முன்வர வேண்டும். ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்." என கூறியுள்ளார்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications