எய்தவர்கள் சொன்னதை விட அம்பு கொஞ்சம் அதிகமாக குதிக்கிறது. அரசினர் தீர்மானத்தில் ஈஸ்வரன் பேச்சு
சென்னை: தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் முன்மொழிந்த அரசினர் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் ஈஸ்வரன் வரவேற்று பேசினார்.
தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் முன்மொழிந்த அரசினர் தீர்மானத்திற்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் ஈஸ்வரன் ஆதரவு தெரிவித்து வரவேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- முதல்வர் கொண்டு வந்து இருக்கும் தீர்மானத்தை கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக மனமாற வரவேற்கிறோம். ஏறக்குறைய 4 ஆண்டுகள் கழித்து ஆளுநர் அவர்கள் மசோதாக்களை காரணம் எதுவும் சொல்லாமல், திருப்பி அனுப்பியுள்ளார்.

தமிழ்நாடு அரசை உச்ச நீதிமன்றத்தை நாட வைத்து இருப்பது வருத்தத்திற்கு உரியது. நமது மாநிலத்தில் உள்ள ஆளுநருக்கு எதிராக நாம் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. உச்ச நீதிமன்றம் பலமுறை சொல்லியிருக்கிறது. ஆளுநர் மக்களால் தேர்ந்து எடுக்கபட்டவர் அல்ல. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு கட்டுப்பட்டவர். அமைச்சரவை என்ன சொல்கிறதோ. அதை செய்ய வேண்டும் என்று பலமுறை சொல்லியும் கூட இதை மறுபடியும் மறுபடியும் செய்து கொண்டே இருக்கிறார்கள்.
எய்தவர்கள் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள். அம்பு எய்தவர்கள் சொன்னதை விட கொஞ்சம் அதிகமாக குதிக்கிறது. கண்டிப்பாக தற்போது பல மாநிலங்களில் ஆளுநரின் செயல்பாடுகள் டெல்லியில் இருக்கும் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கக் கூடியதாக இது அமைந்துவிடும் என்று மகக்ள் மத்தியில் இன்று பேசுகிறார்கள். என்றைக்காவது நம்முடைய ஆளுநர் அதிகாரிகளை அழைத்து வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசியது உண்டா. என்னால் தமிழகத்திற்கு இந்த நல்லதை செய்து இருக்கிறேன். ஒன்றிய அரசில் இருந்து இதை கொண்டு வந்து இருக்கிறேன்.
உங்களால் முடியாததை நான் செய்து இருக்கிறேன் என்று எதாவது உண்டா. தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை முடக்கும் செயல்பாடுகளைத்தான் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறார். இது இன்றைக்குள்ள போராட்டம் இல்லை. 60 ஆண்டுகால போராட்டம். இவ்வாறு அவர் பேசினார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications