Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐடி ஊழியர்களுக்கு எதிராக.. சத்தமே இன்றி ஏஐ நடத்தும் போர்.. கொத்தாக பறிபோகும் வேலைகள்.. போச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏஐ தொழில்நுட்பம் காரணமாக இந்தியாவில் கடுமையான பணி இழப்புகள் ஏற்படும் என்று ஐடி துறையினர் தெரிவித்து உள்ளனர். அமெரிக்காவுடனான உறவுகளில் ஏற்பட்ட சிக்கல்களும், செயற்கை நுண்ணறிவுத் துறையின் விரைவான வளர்ச்சியும் இந்தியாவின் $280 பில்லியன் தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையை மாற்றியமைத்து வருகின்றன.

இந்த சூழலில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (TCS) தனது வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக அதிகமான ஆட்குறைப்பை மேற்கொண்டுள்ளது. நிறுவனம் வெளியிட்ட காலாண்டு வருவாய் அறிக்கையின்படி, செப்டம்பர் 30 உடன் முடிவடைந்த காலாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை நிறுவனமான TCS, 19,755 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது.

artificial intelligence Wipro Microsoft jobs

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (TCS) எடுத்த முடிவு

இதில், நிறுவனத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களும், தானாகவே வெளியேறியவர்களும் அடங்குவர். ஆசியாவின் மிகப்பெரிய ஐடி அவுட்சோர்சிங் நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை முந்தைய காலாண்டை விட 3.2% குறைந்து, மார்ச் 2022க்குப் பிறகு முதல்முறையாக 6 லட்சத்திற்குக் கீழ் சரிந்தது.

இந்தக் காலாண்டில், பணிநீக்கச் செலவுகளுக்காக TCS நிறுவனம் ரூ. 11.35 பில்லியன் (சுமார் $128 மில்லியன்) ஒதுக்கியுள்ளது. TCS நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி சுதீப் குண்ணும்மல், திறன் மற்றும் தகுதிப் பொருத்தமின்மை காரணமாக இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் நடுத்தர மற்றும் மூத்த நிலைகளில் உள்ளவர்களைப் பாதிக்கும் என்று ஆய்வாளர்களிடம் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் தனது ஊழியர்களில் 2% பேரைக் குறைக்கும் இலக்கில் பாதி தூரத்தை அடைந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஜெனரேட்டிவ் AI

ஜெனரேட்டிவ் AI போன்ற புதிய தொழில்நுட்பங்களுக்கு தகவல் தொழில்நுட்ப சேவைத் துறை மாறிவருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்குறைப்பு, பலவீனமான வணிகச் சூழ்நிலையையே சுட்டிக்காட்டுவதாக Citi ஆய்வாளர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்தனர்.

ஆட்குறைப்பு தொடர்பான ஒருமுறை செலவினங்களால், இந்தக் காலாண்டில் TCS-ன் லாபம் எதிர்பார்த்ததை விடக் குறைந்துள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் H-1B விசாக்களைக் குறைத்ததும், இந்தியா மீது அதிக வரி விதித்ததும் நாட்டின் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு புதிய சவால்களை உருவாக்கியுள்ளன. புதிய தொழில்நுட்பங்களுக்கு மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிறுவனங்களுக்கு இது மேலும் சுமையாக அமைந்துள்ளது.

இந்த வரிகளின் நேரடித் தாக்கம் குறைவாக இருந்தாலும், தகவல் தொழில்நுட்பச் செலவினக் குறைப்புகளும், புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகளும் TCS போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கும். 1990களில் இருந்து உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட பொருளாதாரத்திற்கு உயர் திறன் கொண்ட வேலைகளை உருவாக்க TCS முக்கியப் பங்காற்றி வருகிறது.

பணி நீக்கும் டிசிஎஸ்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,00,000 ஊழியர்களுக்கு மறுபயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது. இது அவர்களின் உலகளாவிய ஊழியர்களில் ஆறில் ஒரு பங்கு ஆகும்.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வளர்ந்து வருவதால் சூழ்நிலையை சமாளிக்கும் விதமாக 1 லட்சம் ஊழியர்களுக்கு இந்த வருடம் பயிற்சி அளிக்கப்படும் என்று அந்த நிறுவனம் சார்பாக மெயில் அனுப்பப்பட்டு உள்ளது.

நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஹாரிக் வின் அளித்த பேட்டியில், ஜெனரேட்டிவ் AI-யின் வளர்ச்சி பிற தொழில்நுட்ப அலைகளைப் போலன்றி, மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. சுயமாகக் கற்றுக்கொண்டு வளரும் AI கருவிகளுக்கு புதிய வகையான சோதனை மற்றும் தரக் கட்டுப்பாடு தேவை. இவை கோடிங் செய்யும் முறையை மாற்ற போகிறது.

இந்த மாற்றங்களுக்குத் தயாராகும் வகையில், டிசிஎஸ் தனது திட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும் சுமார் 1,00,000 ஊழியர்களுக்கு மறுபயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. ஊழியர்கள் AI கருவிகளுடன் பரிசோதனை செய்யவும், ஹேக்கத்தான்களில் பங்கேற்று செயல்முறை அனுபவம் பெறவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+