7வது பாஸ்! எஸ்எஸ்எல்சி ஃபெயில்! இரண்டில் எது பெரியது! செயற்கை நுண்ணறிவு சொன்ன குழப்பமான பதில்
சென்னை: செயற்கை நுண்ணறிவான ஏஐ என்ற டூலிடம் 7ஆவது பாஸ், 10ஆவது ஃபெயில், இதில் எது பெரியது என கேட்ட போது அனைவரையும் வாயடைத்து போக வைக்கும் ஒரு பதிலை கொடுத்துள்ளது.
தற்போது செயற்கை நுண்ணறிவு அனைத்து துறைகளையும் ஆக்கிரமித்துள்ளது. பல்வேறு முன்னி நிறுவனங்களும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டன.

இதனால் பல நிறுவனங்களில் ஆட்குறைப்பும் நடத்தப்பட்டது. 10 ஆள் செய்யும் வேலைகளை கூட ஏஐ செய்வதால் ஆட் குறைப்பு செய்யப்பட்டது. சினிமா துறை, மீடியா துறை, ஐடி துறை என பல்வேறு துறைகளில் பட்டையை கிளப்பி வருகிறது.
ஏஐ மூலம் செயல்படும் செய்தி வாசிப்பாளர்கள் கூட இருக்கிறார்கள். அது போல் பல்வேறு செய்தி நிறுவனங்கள் ஏஐ மூலம் படங்களை உருவாக்கி வருகின்றன. அது போல் இந்த ஏஐ செயலிகள் நல்லதுக்கு மட்டுமில்லாமல் கெட்டதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஐடி செயலி நமது வாட்ஸ் ஆப்பிலும் வந்துவிட்டது. அதில் நாம் எதை பற்றி வேண்டுமானாலும் யாரை பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம். கேட்டால் நமக்கு ரிப்ளை கிடைக்கும். ஒரு படத்தில் கவுண்டமணி செந்தில் காமெடியில் வருவதை போல் 7ஆம் வகுப்பு பாஸ் பெரியதா அல்லது எஸ்எஸ்எல்சி தோல்வி பெரியதா என கேள்வி எழுப்பப்பட்டது.

அதாவது செந்தில் 7ஆம் வகுப்பு பாஸ் என பெருமையாக சொல்லிக் கொள்வார். ஆனால் கவுண்டமணியோ தான் ஃபெயிலானாலும் 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ளதை 10 ஆவது ஃபெயில் என்பார். இருவருக்கும் எது பெரியது என வாக்குவாதமே நடக்கும்.
அந்த கேள்விக்கு இன்னும் விடைத்தெரியாமல் உள்ள ஒரு பயனாளி அதை செயற்கை நுண்ணறிவிடம் கேட்டுள்ளார். அதற்கு அது சொன்ன பதில் டிரெண்டாகி வருகிறது. ஏஐ கூறியது, இரண்டு படிப்பும் முடிவு பெறாமலோ அல்லது பாதியில் தடைபட்டோதான் உள்ளது. ஆனால் 7ஆவது பாஸ்தான் பெரியது. ஏனென்றால் எஸ்எஸ்எல்சி ஃபெயில் என்றால் 10ஆம் வகுப்பு முடிக்காமல் இருப்பது.
7ஆவது பாஸ் என்பதை விடவும் 10ஆம் வகுப்பு ஃபெயில் என்பது குறைவான தகுதிதான். எனவே 7ஆவது பாஸ் என்பது பெரிய தகுதி என பதிலளித்துள்ளது. இது போன்ற எளிய மற்றும் குழப்பமான கேள்விகளுக்கு ஏஐ எனப்படும் செயற்கை தொழில்நுட்பமே தடுமாறுகிறது.












Click it and Unblock the Notifications