ஸ்ருதிக்கு அர்ஜூன் செக்ஸ் டார்ச்சர் கொடுத்தாரா?.. அவர் பக்கா ஜென்டில்மேன்.. இயக்குநர் பரபர தகவல்
Recommended Video

சென்னை: அர்ஜூன் மீது ஸ்ருதி ஹரிஹரன் கூறிய புகார் முற்றிலும் தவறானது, அதுபோல் ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. அர்ஜூன் பக்கா ஜென்டில்மேன் என்று இயக்குநர் அருண் வைத்தியநாதன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
நிபுணன் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன், ஸ்ருதி ஹரிஹரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை அருண் வைத்தியநாதன் இயக்கினார். இந்நிலையில் படப்பிடிப்பின் போது அர்ஜூன் என் முதுகில் கை வைத்து தடவினார், செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார், காதல் காட்சிகளில் இறுக்கமாக கட்டி அணைத்தார் என்றெல்லாம் அவர் மீது புகார் கூறியுள்ளார்.
எனினும் இந்த புகாரை அர்ஜூன் மறுத்து ஸ்ருதி மீது மானநஷ்ட வழக்கு போடவுள்ளதாகவும் நேற்று தெரிவித்துவிட்டார். இந்நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்று அருண் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

ஷாக்காகிவிட்டேன்
இதுகுறித்து அருண் வைத்தியநாதன் கூறுகையில் அர்ஜூன் மற்றும் சுருதி ஆகிய இருவரும் எனது நண்பர்கள். அவர்களது குடும்பத்தினரை எனக்கு நன்கு தெரியும். அர்ஜூனை பொருத்தவரை அவர் பக்கா ஜென்டில்மேன். அதேதான் ஸ்ருதியும். மீ டூ இயக்கத்தில் அர்ஜூன் மீது ஸ்ருதி புகார் கூறியதை நான் அறிவேன். ஸ்ருதி ஒரு சீனில் அர்ஜூன் இப்படி நடித்தார் என்று கூறியதை கேட்டவுடன் நான் ஷாக்காகிவிட்டேன்.

நினைக்கவில்லை
அவர் கூறிய சீன் மிகவும் நெருக்கமாக நடித்தே ஆக வேண்டியதாகும். நடிப்பதற்கு முன்னர் பலகட்ட ஆலோசனைகளை நடித்திவிட்டுதான் அந்த சீனை எடுத்தோம். இந்த சம்பவம் நடந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே ஸ்ருதி கூறுவது போல் எப்போது எந்த நிமிஷம் நடந்தது என்பது எனக்கு நினைவில்லை.

குறைத்து கொள்ளுங்கள்
மற்றொரு விஷயம் என்னவென்றால் ஸ்ருதி சொல்லும் சீன் திரையில் பார்ப்பதை காட்டிலும் இன்னும் ரொமான்டிக்காக எடுக்கவே திட்டமிட்டேன். அப்போதுதான் நன்றாக இருக்கும். ஆனால் அர்ஜூன்தான் என்னிடம் எனக்கும் வயதுக்கு வந்த இரு பெண்கள் இருக்கிறார்கள். அதுபோன்ற நெருக்கமான காட்சிகளில் என்னால் நடிக்க முடியாது. எனவே நெருக்கமான காட்சிகளை கொஞ்சம் குறைத்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

கருத்து பரிமாற்றம்
அவரின் மனநிலையை புரிந்து கொண்டு அந்த சீனை முற்றிலும் மாறுப்பட்ட விதத்தில் எடுத்தேன். நான் கூறியுள்ள கருத்துகள் அனைத்தும் உண்மையே. இது தவிர்த்து மேஜரான இருவருக்குள் என்ன கருத்து பரிமாறப்பட்டது, இருவருக்கிடையே தனிப்பட்ட முறையில் என்ன நடந்தது, இவையெல்லாம் என்னுடைய கவனத்துக்கு கொண்டு வரப்படாத வரை அது குறித்து நான் கருத்து கூற கூடாது. அது உரிமையும் அல்ல. ஒரு நல்ல படத்தை இயக்க நாங்கள் ஒரு டீமாக வேலை பார்த்த நிலையில் இது போல் ஸ்ருதியின் கருத்துகள் மனவேதனையை தருகின்றன என்றார் அருண் வைத்தியநாதன்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications