சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவை ஆர்ய வைத்திய பார்மஸி இயக்குநர் கிருஷ்ணகுமார் கொரோனாவால் மரணம்- பிரதமர் மோடி இரங்கல்

Google Oneindia Tamil News

சென்னை: கோவை ஆர்ய வைத்திய பார்மஸியின் நிர்வாக இயக்குநரும் அவினாசிலிங்கம் பல்கலைக் கழகத்தின் வேந்தருமான பி.ஆர். கிருஷ்ணகுமார் கொரோனாவால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கேரளாவின் சோரனூரில் 1951-ம் ஆண்டு பிறந்தவர் பி.ஆர். கிருஷ்ணகுமார். இந்தியாவின் மிக சிறந்த ஆயுர் வேத நிறுவனமான கோவை ஆர்ய வைத்திய பார்மஸியை உருவாக்கினார்.

Arya Vaidya Pharmacy MD PR Krishna Kumar passes away due to Coronavirus

பி.ஆர். கிருஷ்ணகுமாரின் சேவைக்காக 2009-ல் மத்திய அரசு பத்மஶ்ரீ விருது வழங்கியது. 2011-ல் கர்நாடகா குவேம்பு பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது. 2015-ம் ஆண்டு முதல் கோவை அவினாசிலிங்கம் கல்லூரியின் வேந்தராகவும் பணியாற்றி வந்தார்.

ராமநாதபுரம்- அழகன்குளம் அகழாய்வு பகுதியில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க கடும் எதிர்ப்புராமநாதபுரம்- அழகன்குளம் அகழாய்வு பகுதியில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க கடும் எதிர்ப்பு

கொரோனா தொடர்பாக பிரதமர் மோடி நடத்திய உரையாடல்களில் பங்கேற்று, சித்தா, ஆயுர்வேத சிகிச்சைகளை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார் கிருஷ்ணகுமார். கோவையின் ஆளுமைகளில் ஒருவரான கிருஷ்ணகுமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பி.ஆர். கிருஷ்ணகுமார் காலமானார்.

Arya Vaidya Pharmacy MD PR Krishna Kumar passes away due to Coronavirus

பி.ஆர். கிருஷ்ணகுமார் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

English summary
Arya Vaidya Pharmacy MD PR Krishna Kumar passes away due to Coronavirus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X