நடக்க கூட முடியாது.. எல்லா பக்கமும் உறக்கம்.. சத்திரம் போல மாறிய கோயம்பேடு பேருந்து நிலையம்.. ஷாக்
சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் மக்கள் பயன்பாடு இல்லாமல்.. வீடு இல்லாதவர்கள் தூங்கும் சத்திரம் போல மாறி உள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையம் இந்த பொங்கலுக்கு கடைசியாக ஒருமுறை மக்களை தங்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்ப உள்ளது. அடுத்த சில மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக கோயம்பேடு பேருந்து நிலைய பயன்பாடு நிறுத்தப்படும். இங்கே பல்வேறு திட்டங்கள் வர உள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட்டில் குடியிருப்புகள், சில ஐடி நிறுவனங்கள், விளையாட்டு தொடர்பான திட்டங்கள் வர உள்ளன. அங்கே விளையாட்டு அரங்கம், ஹை ரைஸ் கட்டிடம் ஒன்றும் வர உள்ளது.

தற்போதே அங்கு மக்கள் பயன்பாடு குறைந்துவிட்டது. இதனால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் மக்கள் பயன்பாடு இல்லாமல்.. வீடு இல்லாதவர்கள் தூங்கும் சத்திரம் போல மாறி உள்ளது. வெளியூர் செல்பவர்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்கின்றனர்.
இதனால் இங்கே கோயம்பேட்டில் மக்கள் பலரும் தூங்க பயன்படுத்த தொடங்கி உள்ளனர். பெரும்பாலும் வீடு இல்லாதவர்கள் தூங்குவதற்காக கோயம்பேடு பேருந்து நிலையம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வீடு இல்லாதவர்கள் கும்பல் கும்பலாக இங்கே வந்து தூங்க தொடங்கி உள்ளனர். நடக்க கூட முடியாத அளவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் இங்கே மக்கள் படுத்து உறங்கி வருகின்றனர்.
கிளாம்பாக்கம்: கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய பேருந்து முனையமாக இந்த பேருந்து முனையம் அனைத்து வசதிகளுடன் சிஎம்டிஏ-வால் அமைக்கப்பட்டிருக்கிறது.
எனவே, சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயங்கிய பேருந்துகள் இனி எந்தந்த வகையில் இங்கிருந்து இயங்கும் என்பது பற்றிய கேள்வி எழுந்துள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை இன்றைக்கு கோயம்பேட்டிலிருந்து இயங்குகின்ற பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து தெற்கு பகுதிக்கு செல்லும்.
எங்கே செல்லும்?: பெங்களூர், கிழக்கு கடற்கரை சாலைகளுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயங்கும். அதேபோல தென் தமிழ்நாட்டிலிருந்து வருகின்ற பேருந்துகள் அத்தனையும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் முதல் பேருந்து நாளை காலை 4 மணி அளவிலே கோயம்பேட்டிற்கு வரும். அதற்குப் பிறகு வருகின்ற அத்தனை பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு தான் வரும்.
எப்படி இயங்கும்: கோயம்பேட்டிற்கு செல்லாது. எனவே, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை முழுமையாக நாளையிலிருந்து கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து இயங்கும். சாதாரண நாட்களில் 300 புறப்பாடுகளும், வார இறுதி நாட்களில் 360 புறப்பாடுகள் கொண்ட அரசு விரைவு போக்குவரத்து கழகத்தினுடைய பேருந்துகள் அத்தனையும் கிளாம்பாக்கத்திலிருந்து இயங்கும்.
அதேபோல, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் டிசம்பர் 31-ஆம் தேதி காலையிலிருந்து சென்னையின் எல்லா பகுதிகளுக்கும் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படும். ஏற்கனவே உள்ள வழித்தடத்தில் இயங்கிக் கொண்டு இருக்கிற பேருந்துகளை தாண்டி, கூடுதலாகவும் பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.
மாநகர போக்குவரத்துக் கழகம்: மாநகர போக்குவரத்துக் கழகத்தை பொறுத்தவரை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இங்கிருந்து (கிளாம்பாக்கம்) 270 நடைகள் இயக்கப்படும். ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து இங்கிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்லும்.
அதேபோல தாம்பரம் செல்கின்ற பேருந்துகள் 2 நிமிடத்திற்கு ஒரு பேருந்து கிளாம்பாக்கத்திலிருந்து தாம்பரத்திற்கு புறப்படும். இங்கிருந்து (கிளாம்பாக்கம்) கிண்டிக்கு செல்லும் மாநகர போக்குவரத்து பேருந்துகள் மூன்று நிமிடத்திற்கு ஒரு பேருந்து என்று இயக்கப்படும். ஏற்கனவே இந்த வழித்தடத்தில் 2386 நடை பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது கூடுதலாக 1691 நடை பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. எனவே, மொத்தம் 4077 நடைகள் கிளாம்பாக்கத்தின் இந்த வழித்தடத்திலே இயக்கப்படும்.
அதேபோல, இந்த அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அல்லாத மற்ற ஆறு போக்குவரத்து கழகங்கள் - விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய ஆறு அரசு போக்குவரத்து கழகங்களுடைய பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கம் வந்து அந்தந்த வழித்தடத்தில் இயங்கும். பொங்கல் வரை இந்த நிலை நீடிக்கும்.
பொங்கலுக்கு பிறகு அந்த அத்தனை பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கு இயக்கப்படும். 1140 புறப்பாடுகள் பொங்கல் வரை கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கம் வழியாக இயக்கப்படும்.
அதேபோல ஆம்னி பேருந்துகள் இன்றைக்கு கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து தங்களுடைய செயல்பாட்டினை தொடங்கிவிட்டார்கள். ஏற்கனவே அவர்களுக்கு டிக்கெட் புக்கிங் ஆகியுள்ளதன் காரணத்தால், பொங்கல் வரை சென்னை நகரத்திலிருந்து இயக்கப்படும். பொங்கலுக்கு பிறகு முழுமையாக கிளாம்பாக்கத்திலிருந்து அந்த ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications