கோடை விடுமுறை முடிந்து.. பள்ளி திறப்பு தேதி இதுதான்? பள்ளிக்கல்வித்துறை போட்ட திட்டம்!
சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கும் தேதிகள் தொடர்பான முக்கியமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. விரைவில் இதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.
நாடு முழுக்க 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் மூன்று கட்டத் தேர்தலில் முறையே 66.1, 66.7 மற்றும் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2019 தேர்தலை விட இதுவரை வாக்குப்பதிவு குறைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் 4ம் கட்ட தேர்தல் 9 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் நடந்தது. ஆந்திரப் பிரதேசத்தில் 25 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 67.25 சதவிகித வாக்குகள் பதிவானது.

நேற்று 6 மாநிலங்களில் 5ம் கட்ட தேர்தல் நடந்தது. இதில் காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இதில் 60.48% வாக்குகள் பதிவாகி உள்ளது.
இனி 6ம் மற்றும் 7ம் கட்ட தேர்தல்கள் நடக்க உள்ளன. மே 25ம் தேதி 6ம் கட்ட தேர்தல் நடக்க உள்ளது. 7ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதி நடக்க உள்ளது. ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வர உள்ளன.
தேர்தல் + வானிலை: மேற்கண்ட தேர்தல் மற்றும் வானிலையை மனதில் வைத்து பள்ளி திறப்பு தேதிகள் மாற உள்ளதாம். அதன்படி தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கும் தேதிகள் தொடர்பான முக்கியமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. விரைவில் இதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டது. அதேபோல் 1 முதல் 3ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 5ம் தேதி வரையும், 4 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 23ம் தேதி வரையும் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. அதன்பிறகு ஏப்ரல் 24ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.
திறப்பு தேதி என்ன?: ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வருகின்றன. இதனால் அன்று பள்ளிகளை திறக்க முடியாது. பாதுகாப்பு கருதி மறுநாளும் திறக்க வாய்ப்பு குறைவு.
அதோடு இல்லாமல் இப்போது கடுமையான வெயில் இல்லை. வெயில் குறைந்து மழை பெய்கிறது. அதோடு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. புயல் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் இனி வெயில் வேகமாக குறையும்.
இதன் காரணமாக வெயிலும் இல்லை. எனவே ஜூன் 2ம் வாரம் பள்ளிகளை திறக்காமல் ஜூன் 6-ம் தேதி புதன் கிழமை திறக்கும் திட்டத்தில் பள்ளி கல்வித்துறை உள்ளதாம். மே 27ம் தேதி இதற்கான முடிவு எடுக்கப்பட்டு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.
இந்த வருடம் வடகிழக்கு பருவமழை காரணமாக நவம்பர் , டிசம்பரில் விடுமுறை அதிகமாகலாம். இதை ஈடுகட்ட இந்த முறை முன்கூட்டியே பள்ளிகளை திறக்கும் முடிவை எடுக்க உள்ளனராம். இதனால் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications