Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் விரைவில் உயரும் ஆட்டோ கட்டணம்? காரணம் இது தானாம்! புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏற்கனவே விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், விரைவில் தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணமும் உயரக் கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு முழுக்க ஆட்டோ கட்டணங்கள் முறையாக வசூலிக்கப்படுவதில்லை என்ற புகார் நீண்ட காலமாகவே உள்ளது. அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தைக் காட்டிலும் அதிக தொகை வசூலிக்கப்படுவதாக்கப் புகார்கள் எழுந்தன.

தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு, தீர்வு காண வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

 ஆட்டோ கட்டணம்

ஆட்டோ கட்டணம்

இதற்கிடையே ஆட்டோக்களில் மீட்டர் கட்டணம் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு இருந்தது. அந்த வழக்கு விசாரணையில், பெட்ரோல் , டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ மீட்டர் கட்டணம் மாற்றியமைக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம் நீதிபதிகள், சரியான ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்து, அவை முறையாக வசூலிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க அரசுக்கு அறிவுறுத்தினர்.

 2013ஆம் ஆண்டு

2013ஆம் ஆண்டு

தமிழ்நாட்டில் கடைசியாகக் கடந்த 2013ஆம் ஆண்டு ஆட்டோ கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. ஆனால், அதன் பின்னர் பெட்ரோல்-டீசல் விலை பெரியளவு உயர்ந்துவிட்டது. இப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. எனவே, அதன் அடிப்படையில் ஆட்டோ கட்டணங்கள் மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.

கோரிக்கை

கோரிக்கை

2013இல் மாற்றி நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணங்கள்படி, ஆட்டோக்களின் அடிப்படை கட்டணம் 25 ரூபாயும், அடுத்து ஒவ்வொரு கிலோமீட்டருக்கு தலா 12 என்று நிர்ணயிக்கப்பட்டது. தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு, ஆட்டோ கட்டணங்களை முதல் 1.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.50 மற்றும் அதன் பின்னர் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.25 என்று மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. மேலும், காத்திருப்பு கட்டணமாக ஒரு நிமிடத்திற்கு ரூ.1 வசூலிக்க வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

 பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

இது தொடர்பாக 12 ஆட்டோ தொழிற்சங்க பிரதிநிதிகள் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் அரசு தனியாக ஒரு செயலியை உருவாக்க வேண்டும், ஜிபிஎஸ் டிஜிட்டல் மீட்டர் இலவசமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த விவகாரத்தில் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 விரைவில் உயரும் கட்டணம்

விரைவில் உயரும் கட்டணம்

அரசால் எளிதாக நிறைவேற்றக் கூடிய கோரிக்கைகள் மட்டுமே முன்வைத்துள்ளதாகவும் இதை அரசு விரைந்து செயல்படுத்தும் என்று நம்புவதாகவும் அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். எனவே, தற்போதைய பெட்ரோல்- டீசல் விலையைக் கருத்தில் கொண்டு விரைவில் ஆட்டோ கட்டணங்களும் உயரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+