அலுங்காம குலுங்காம..சென்னைய விடுங்க! மற்ற மாவட்டங்களுக்கும் இயக்கப்படும் தீபாவளி சிறப்பு பேருந்துகள்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று தீபாவளி பண்டிகை விடுமுறை நிறைவடையும் நிலையில் சென்னை மட்டுமின்றி பிற மாவட்டங்களுக்கு திரும்பி செல்லவும் இன்று அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
படிப்பு, பணி நிமித்தமாக சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பெருநகரங்களில் தங்கி இருக்கும் மக்கள், பள்ளி கல்லூரிகளில் படித்து வரும் மாணவ மாணவிகள் தீபாவளி, பொங்கல், ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற விடுமுறை காலங்களில் சொந்த ஊர்களுக்கு அதிகளவில் செல்வது வழக்கம். கடுமையான நெரிசலுக்கு மத்தியில் அடித்து பிடித்துக் கொண்டு அதிக கட்டணம் செலுத்தி பேருந்துகள், ரயில்களில் பொதுமக்கள் ஏறி செல்வார்கள். போக்குவரத்து நெரிசலும் இந்த நாட்களில் அதிகமாக இருக்கும்.

இதனை தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு பண்டிகை கால சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. தெற்கு ரயில்வேயும் சிறப்பு ரயில்களை இயக்குவது வழக்கம். அந்த வகையில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், சுமார் 4 மாதங்களுக்கு முன் ஜூலை மாதமே தெற்கு ரயில்வே முன்பதிவை தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து ரயில் டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. அதேபோல், தமிழ்நாடு அரசு சார்பில் தீபாவளி பண்டிகை கால அரசு விரைவு பேருந்துகளின் முன்பதிவு கடந்த மாதம் தொடங்கப்படுகிறது.
இந்த தீபாவளி சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் இயக்கப்பட இருக்கின்றன. பண்டிகைக்கு 30 நாட்களுக்கு முன்பாக இந்த சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு நடைபெற்ற நிலையில் நவம்பர் 10 ஆம் தேதி பயணம் செய்ய விரும்பும் பயணிகள், நவம்பர் 11 ஆம் தேதி பயணம் செய்ய இருப்போருக்கான முன் பதிவுகள் தனித்தனியாக நடைபெற்றன. அதன்படி பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட அரசு சிறப்பு பேருந்துகளில் புறப்பட்டு சென்றார்கள்.
சென்னையில் இருந்து மட்டுமே சுமார் 12 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்று உள்ளனர். இதற்கிடையே இன்றும் தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்து உள்ளதால், நாளை முதல் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இயங்க உள்ளன. நேற்று இரவே சிறப்பு பேருந்துகளில் ஏராளமான மக்கள் தீபாவளி கொண்டாடி விட்டு புறப்பட்டு சென்றனர். இந்த நிலையில் இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னைக்கு 2,100 வழக்கமான பேருந்துகளும், 3,167 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. பிற மாவட்டங்களுக்கு இடையே 3,825 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications