Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லாம் ரெடி! வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்.. சென்னை ஐசிஎப் அதிகாரிகள் அப்டேட்.. எந்த ரூட்டில் ஓடும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலுக்கான 180 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நம் நாட்டில் ரயில் சேவை என்பது பயணிகள் போக்குவரத்து சேவையில் முக்கிய பங்கு வகிக்கிறது. ரயில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய வசதிகள் ரயில்களில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அதி நவீன சொகுசு வசதிகள் கொண்ட ரயிலாக வந்தே பாரத் ரயில் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

as-the-final-test-is-completed-vande-bharat-sleeper-train-ready-to-hit-tracks-says-chennai-icf-offi

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்

டெல்லியில் இருந்து வாரணாசிக்கு முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாடு முழுவதும் முக்கியமான வழித்தடங்களில் 136 வந்தே பாரத் ரயில்கள் மூலம் சேவை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மைசூர், கோவை, விஜயவாடாவுக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல, எழும்பூரில் இருந்து நெல்லை, நாகர்கோவில் உள்பட 8 ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஸ்லீப்பர் ரயில் பெட்டிகள் தயார்

வந்தே பாரத் ரயிலை பொறுத்தவரை தற்போது அனைத்துமே இருக்கை வசதி கொண்டதாக உள்ளது. இதனால், தொலை தூர பயணத்திற்கும் இரவு நேரத்திற்கும் இயக்க முடியவில்லை. எனவே ஸ்லீப்பர் வசதி கொண்ட புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை அறிமுகம் செய்ய ரயில்வே திட்டமிட்டது. இதற்கான நடவடிக்கைகளில் ரயில்வே ஈடுபட்டது. இதன்படி, சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரெயில் பெட்டித் தொழிற்சாலையில் ( ICF) படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலை தயாரிக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டது.

இதையடுத்து ஐசிஎப் தொழிற்சாலையில் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டு உள்ளது. 800 முதல் 1,200 கிலோ மீட்டர் தொலைவு வரை செல்லும் பயணிகளுக்காக இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 16 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் ஏசி மூன்றடுக்கு படுக்கைகள் கொண்ட 11 பெட்டிகள், இரண்டு அடுக்கு படுக்கை வசதி கொண்ட நான்கு பெட்டிகள், ஒரு முதல் வகுப்பு பெட்டி என மொத்தம் 823 பேர் பயணிக்க முடியும்.

180 கிமீ வேகத்தில் சோதனை ஓட்டம் வெற்றி

மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறனுடன் இந்த ரயில் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. எமெர்ஜென்சி காலங்களில் பயணிகள் ரயில் மேலாளர், லோகோ பைலட் இடையேயான தகவல் தொடர்புக்கான அவசரமாக பேசுவதற்கான வசதிகள், தீ பாதுகாப்பு கருவிகள், அனைத்து பெட்டிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. செல்போன் சார்ஜ் செய்யும் வசதி, செக்யூரிட்டி கேமரா, பயோ டாய்லட் ஆகிய வசதிக்ளும் உள்ளன.

பர்ஸ்ட் கிளாஸ் ஏசி பெட்டியில் பயணிகள் குளிப்பதற்காக ஹீட்டர் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு படுக்கைகள் மற்றும் டாய்லட்கள், சென்சார் வசதி கொண்ட கதவுகள், தானியங்கி வெளிப்புற கதவுகள் என பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயிலில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்து உள்ளது. தொடர்ந்து, வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயிலை மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

as-the-final-test-is-completed-vande-bharat-sleeper-train-ready-to-hit-tracks-says-chennai-icf-offi

எந்த ரூட்டில் இயக்கப்படும்

நாடு முழுவதும் உள்ள ரெயில் பயணிகளுக்கு நீண்ட தூர பயணத்திற்கான உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில் வழங்கும். இந்த ரயில் பெட்டிகள் சோதனை ஓட்டம் முடிந்து தற்போது தயார் நிலையில், உள்ளன. ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்து அனுமதி கொடுத்ததும் இந்த ரயில்கள் இயக்கப்பட உள்ளன. எந்த வழித்தடத்தில் முதலில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலை இயக்குவது என்பது பற்றி ரயில்வே அறிவிக்கும்.

அகமதாபாத் - மும்பை வழித்தடத்தில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதனால், முதல் வந்தே பாரத் ஸ்லிப்பர் ரயில் அந்த ரூட்டில் இயக்கப்பட வாய்ப்புள்ளதா? என்ற எதிர்பார்பும் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை- கன்னியாகுமரி, சென்னை - திருவனந்தபுரம் போன்ற தொலை தூர ரூட்களுக்கு இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இயக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ரயில் பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.

Take a Poll

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+