விஜய்யின் வாக்கு சதவீதம் கூடக்கூட, அது யாருக்குப் பாதிப்பு... திமுகவுக்கு வாழ்வா? சாவா?
சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் குறித்துப் பல்வேறு கணிப்புகள் வெளியாகி வருகிறது. இந்த கணிப்புகள் எல்லாமே திமுக ஆட்சியை அமைக்கும் என்ற கூறியுள்ளன. அந்த வகையில் நியூஸ் 18, தி நியூமெட்ரிக்ஸ் கணிப்பை ஒப்பிட்டிருக்கிறது. அந்த ஒப்பீடு தமிழக அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (பிரிக்கும் வாக்குகள், திமுக மற்றும் அதிமுகவின் வெற்றி வாய்ப்பை எப்படித் தலைகீழாக மாற்றும் என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் விவரிக்கின்றன.
வாக்குப்பகிர்வு சூத்திரம் (30:50:20)
விஜய் பெறும் வாக்குகளில் 30% திமுகவிடமிருந்தும், 50% அதிமுகவிடமிருந்தும், 20% இதர கட்சிகளிடமிருந்தும் வருவதாக இந்தக் கணக்கீடு எடுத்துக்கொள்கிறது. இதன்படி பார்த்தால் முடிவுகள் அதிமுக, திமுகவிற்கு ஷாக் தரும் வகையில் இருக்கிறது.

1. விஜய் 25% வாக்குகள் வரை பெற்றால்: திமுகவுக்கு 'மெகா' லாபம்
இந்தக் கணிப்பின்படி, விஜய்யின் வாக்கு சதவீதம் 5% முதல் 25% வரை இருக்கும் வரை, அது அதிமுகவின் வாக்குகளைத்தான் பெருமளவில் சிதைக்கிறது.
விஜய் 20% - 25% எடுக்கும்போது: அதிமுகவின் பலம் வெறும் 51 இடங்களாகச் சுருங்கிவிடும். ஆனால், இதே சூழலில் திமுக கூட்டணி 183 இடங்கள் வரை பெற்று அசுர பலத்துடன் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. அதாவது, எதிர்ப்பு வாக்குகளை விஜய் பிரிப்பது திமுகவுக்குச் சாதகமாக முடிகிறது.
2. அந்த 'மேஜிக்' புள்ளி: 30% வாக்குகள்
விஜய்யின் வாக்கு சதவீதம் 30%-ஐத் தொடும்போதுதான் ஆட்டம் மாறுகிறது. இந்த நிலையில், விஜய் முதன்முறையாக 23 இடங்களைக் கைப்பற்றித் தனது பலத்தை நிரூபிக்க வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் திமுகவின் பலம் 183-லிருந்து 166-ஆகக் குறையத் தொடங்குகிறது.
3. 35% வாக்குகள்: தமிழக அரசியலில் ஒரு 'சுனாமி'
விஜய்யின் வாக்கு சதவீதம் 35%-ஐ எட்டினால், அது தமிழக அரசியல் வரலாற்றையே மாற்றி எழுதும் என்கிறது இந்தத் தரவுகள். யாரும் எதிர்பார்க்காத வகையில் 145 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார். வெறும் 47 இடங்களுக்குத் தள்ளப்பட்டு படுதோல்வியைச் சந்திக்கும். அதிமுக 42 இடங்களுடன் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
முடிவு என்ன?
இந்த ஆய்வின்படி பார்த்தால், விஜய்யின் வாக்கு சதவீதம் 25%-க்குள் இருக்கும் வரை அது திமுக ஆட்சியைக் காப்பாற்றும் ஒரு 'கேடயமாக' இருக்கும். ஆனால், அதுவே 30%-ஐத் தாண்டினால் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் அது 'எமனாக' மாறும் வாய்ப்பு உள்ளது. விஜய் அந்த 35% என்ற இமாலய இலக்கை எட்டுவாரா அல்லது திமுகவுக்குச் சாதகமான 'வாக்கு பிரிப்பவராக' மட்டும் நின்றுவிடுவாரா என்பதை அறிய மே 4ம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.
-
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
எடப்பாடி – ஸ்டாலினுடன் பணி! டிகே சிவக்குமாரின் ஆலோசகரானார் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோல் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் விஜய்யின் தவெகவுக்கு அழைப்பு இல்லையா? பின்னணி தகவல் -
தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்புக்கு திமுக ஆதரவு மின் அதிகாரிகளே காரணம்.. அமைச்சர் ரஞ்சித்குமார் -
இடைத்தேர்தலில் அதிமுகவை காப்பாற்ற வேறு வழியில்லை.. எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள்












Click it and Unblock the Notifications