Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிஸ் பண்ணிட்டாரா ஓவைசி.. வெறும் 2% தானா.. அடிச்சு தூக்கிய பாஜக.. கெத்து காங்கிரஸ்.. பரபர தெலுங்கானா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தெலுங்கானாவின் செல்வாக்கு பெற்ற கட்சியான ஓவைசிக்கே, ஷாக் தந்துள்ளது காங்கிரஸ் கட்சியும், பாஜகவும்..!!!

ஆந்திரா, தெலங்கானாவில் பிரபலமானவர் ஓவைசி.. அந்தந்த தொகுதி மக்களால் செல்வாக்கு மிக்கவராக நன்கு அறியப்பட்டவரும்கூட.. அதேநேரத்தில் ஓவைசி பாஜகவின் B டீம் என்றும் விமர்சிக்கப்படுகிறார். அதற்கேற்றவாறு, ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸின் ஓட்டுக்களை பிரிப்பதே ஓவைசி கட்சியின் முழுமூச்சாக இருந்து வருகிறது.

Asaduddin Owaisis AIMIM and Congress won minority votes in Telangana

பாஜக: எனவே, இவரது மஜ்லிஸ் கட்சியானது, முஸ்லிம் ஓட்டுகளை மட்டுமே குறி வைத்து இயங்குகிறது. பெரும்பாலும் சிறுபான்மையினர் ஓட்டுக்கள் காங்கிரசுக்கு அதிகம் என்பதால், காங்கிரஸின் ஓட்டுக்களை பிரிப்பதையே முழுமூச்சாக கொண்டுள்ளது..

அதுமட்டுமல்ல, தெலுங்கானாவில் மூன்றாவது அணி அமைந்துவிட்டால், அதற்கு தலைமையேற்குமாறு முதல்வர் கேசிஆரிடம் சொல்லிவருவதாகவும், கேசிஆர் இதற்கு தலைமை ஏற்றால், நிறைய வேலைகளை தன்னால் செய்ய முடியும்" என்று உறுதி கூறி கொண்டேயிருந்தார்.

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலத்தை பொறுத்தவரையில் முஸ்லிம் வாக்குகளை அறுவடை செய்வதில் ஓவைசி கட்சி கூட்டணி, காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவியது..

ஆனால், இதற்கு நடுவில், முஸ்லிம்களின் 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்பதை தேர்தல் வாக்குறுதியாக பாஜக வழங்கி, ட்விஸ்ட் தந்ததால், முஸ்லிம்கள் வாக்குகள் யாருக்கு பெரும்பான்மையாக போகப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த தெலுங்கானாவில் 14 சதவீதம் இஸ்லாமியர்கள் வாக்குகள் அதிக அளவில் உள்ளன.. மேலும் முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் தொகுதிகளில், ஓவைசியின் கையே ஓங்கி வருகிறது. எனினும், சிறுபான்மையிர் நலனுக்கு பட்ஜெட்டில் ரூ4,000 கோடி நிதியை ஒதுக்குவோம் என்ற வாக்குறுதியை காங்கிரஸ் அளிக்கவும், இதனை சமாளிக்க வேண்டிய கட்டாயமும், பாஜகவின் B டீம் என்ற காங்கிரஸின் விமர்சனத்தையும் சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஓவைசிக்கு ஏற்பட்டது.

காங்கிரஸ்: அதுமட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும் என்று முஸ்லிம்கள் கூட்டமைப்பு அறிவித்ததை ஓவைசி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மேலும், பிஆர்எஸ் கட்சிக்கும் இந்த முடிவு, ஒரு எதிர்பாராத பின்னடைவாக பார்க்கப்பட்டது. மேலும், முஸ்லிம் வாக்குகளை கவர வேண்டும் என்ற முனைப்புடன் ஓவைசியுடன் கேசிஆர் கைகோர்த்துவிட்டார்
இதனிடையே, ஓவைசி கட்சியினர் போட்டியிடும் தொகுதியில் ஓவைசிக்கும், ஓவைசி அல்லாதவர் போட்டியிடும் தொகுதிகளில் காங்கிரசுக்கும் வாக்களிக்க வேண்டும் என்று ஜமாத் தரப்பில் முடிவு செய்யப்பட்டதாக தகவல்களும் கசிந்தன.

சவால்கள்: ஆக, இப்படியான சவால்களுக்கு நடுவில்தான் தேர்தலில் களமிறங்கியது ஓவைசி கட்சி.. மொத்தம் 9 தொகுதிகளில் வேட்பாளர்களை இறக்கியது.. ஆனால், எல்லாமே இஸ்லாமியர்கள் அதிகமுள்ள தொகுதிகளாகும்..

தெலுங்கானாவில் இதைத்தவிர 35 முதல் 40 தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கக்கூடியவர் முஸ்லிம்கள்தான்.. இஸ்லாமியர்கள் அதிகம் என்பதுடன், 29 தொகுதிகளில் 15 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள்தான் உள்ளனர்.. அதிலும் தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள 7 தொகுதிகளில் 50 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை முஸ்லிம்கள்தான்.. அதனால்தானோ என்னவோ, ஹைதராபாத்தில் மட்டுமே அதிக கவனத்தை செலுத்தியது ஓவைசி கட்சி..

5 தொகுதிகள்: தான் போட்டியிட்ட 9 தொகுதிகளில், 5 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று உறுதியுடன் சொல்லியிருந்தார் ஓவைசி.. ஆனால், இந்த முறை ஓவைசியின் 9 வேட்பாளர்களும் வெற்றிபெற்றால் தெலங்கானாவில் புதிய அரசை தீர்மானிக்கும் சக்தியாக ஓவைசியாகத்தான் இருப்பார் என்று அரசியல் விமர்சகர்கள் சொன்னதை இங்கு நினைவுகூர வேண்டியுள்ளது.

கடந்த தேர்தலில் 8 தொகுதிகளில் ஓவைசி கட்சியினர் போட்டியிட்டு, 7 தொகுதியில் வெற்றி பெற்றிருந்தனர். இந்த முறை 9 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அப்படி 9 வேட்பாளர்களும் வெற்றி பெற்றால் அவர்கள் பிஆர்எஸ் கட்சிக்கே ஆதரவை தருவார்கள் என்று நம்பப்படுகிறது.. அப்படி ஆதரவை தரும்பட்சத்தில், காங்கிரஸை ஓரம்கட்டிவிடும் முடிவாக இது அமைந்துவிடும் என்றும் கணிக்கப்படுகிறது.

தொகுதிகள்: 7 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது என்றாலும், ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சியை பின்னுக்கு தள்ளிவிட்டு 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது பாஜக.. அதுமட்டுமல்ல, இஸ்லாமிய
வாக்குகளை வெகுவாரியாகவே தன்பக்கம் இழுத்து, ஓவைசிக்கே ஷாக் தந்துள்ளது காங்கிரஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+