சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விற்பனையில் தொடரும் சரிவு: ஓசூர் உட்பட 5 ஆலைகளில் 59 நாட்கள் உற்பத்தியை நிறுத்தும் அசோக் லேலண்ட்

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Ashok Leyland closes Chennai Ennore unit for 16 days

    சென்னை: விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதால் செப்டம்பர் மாதம் 16 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்துவதாக சென்னை எண்ணூர் அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆட்டோமொபைல் துறையின் பங்களிப்பு 7.5 சதவீதம் ஆகும். ஆனால் நாட்டில் இந்த துறை தற்போது பெரும் சரிவை சந்தித்துள்ளது. பல்வேறு வாகன தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் நிறுவனங்களை மூடி வருகின்றனர்.

    நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி தனது மானேசர் மற்றும் குர்கான் ஆலைகளை இரண்டு நாட்களுக்கு மூடும் திட்டத்தை அறிவித்தது.

    தமிழகத்தில் புதிய மின் இணைப்பு கட்டணம் விரைவில் உயருகிறது ? கட்டண விவரங்கள்தமிழகத்தில் புதிய மின் இணைப்பு கட்டணம் விரைவில் உயருகிறது ? கட்டண விவரங்கள்

    கட்டாய விடுப்பு

    கட்டாய விடுப்பு

    மாருதி- சுசுகி, டிவிஎஸ், ஹீரோ உள்ளிட்ட முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்கெனவே கட்டாய விடுப்பை அறிவித்துள்ளது. முன்னதாக ஹூண்டாய் மற்றும் டொயோட்டா நெருக்கடியைத் தொடர்ந்து ஆலையை மூடியிருந்தன.

    விடுமுறை

    விடுமுறை

    இந்த நிலையில் அசோக் லேலண்ட் நிறுவனமும் தங்கள் ஊழியர்களுக்கு கடந்த 6-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை 5 நாட்கள் கட்டாய விடுப்பு அளித்தது. வாகன உற்பத்தி குறைவால் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    16 நாட்கள் மூடல்

    16 நாட்கள் மூடல்

    இந்த அறிவிப்பால் ஊதியமின்றி தற்காலிக ஊழியர்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் சென்னை எண்ணூர் ஆலையில் 16 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்தியது அசோக் லேலண்ட்.

    18 நாட்களுக்கு மூடல்

    18 நாட்களுக்கு மூடல்

    அதுபோல் ஓசூரில் உள்ள 1, 2 பிரிவுகளில் 5 நாட்களுக்கு ஆலைகளை மூடுவதாகவும் அறிவித்துள்ளது. மேலும் ஆல்வாரில் 10 நாட்களுக்கும், பாந்த்ராவில் 10 நாட்களுக்கும், பந்த் நகரில் 18 நாட்களுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது.

    பாதிப்பு இல்லை

    பாதிப்பு இல்லை

    சந்தையில் வாகனத்தின் தேவை குறைந்துள்ளதால் தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளதாக அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது. இதனால் ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். யூனியன் ஆகியவை இருப்பதால் நிரந்தர ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என கூறப்படுகிறது.

    சரி செய்யப்படுமா

    சரி செய்யப்படுமா

    ஆனால் தற்காலிக ஊழியர்களுக்குத்தான் ஊதிய பிடிப்பும், வேலை பறிப்பும் நடைபெறும் என்பதால் அவர்கள் அச்சத்துடன் இருக்கின்றனர். ஆட்டோமொபைல் துறையில் உள்ள மந்த நிலை எப்போது சரி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    English summary
    Ashok Leyland closes Chennai Ennore unit for 16 days as there is no need for vehicles in the market.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X