சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆட்டோமொபைல் துறையில் சரிவு.. ஊழியர்களுக்கு 5 நாட்கள் கட்டாய விடுப்பு அளித்த அசோக் லேலண்ட் நிறுவனம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Chennai Automobile industry in trouble | ஆட்டோமொபைல் துறை சரிவு! சென்னைக்கு எச்சரிக்கை

    சென்னை: ஆட்டோமொபைல் துறையில் பெரும் சரிவு ஏற்பட்டதை அடுத்து ஊழியர்களுக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் 5 நாட்களுக்கு கட்டாய விடுப்பு அளித்துள்ளது.

    இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆட்டோமொபைல் துறையின் பங்களிப்பு 7.5 சதவீதம் ஆகும். ஆனால் நாட்டில் இந்த துறை தற்போது பெரும் சரிவை சந்தித்துள்ளது. பல்வேறு வாகன தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் நிறுவனங்களை மூடி வருகின்றனர்.

    நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி தனது மானேசர் மற்றும் குர்கான் ஆலைகளை இரண்டு நாட்களுக்கு மூடும் திட்டத்தை அறிவித்துள்ளது. முன்னதாக ஹூண்டாய் மற்றும் டொயோட்டா நெருக்கடியைத் தொடர்ந்து ஆலையை மூடியிருந்தன.

     அந்த 15 நிமிடம்தான் முக்கியம்.. சந்திரயானுக்கு காத்திருக்கும் திக் நொடிகள்.. இஸ்ரோ சொன்ன சுவாரசியம் அந்த 15 நிமிடம்தான் முக்கியம்.. சந்திரயானுக்கு காத்திருக்கும் திக் நொடிகள்.. இஸ்ரோ சொன்ன சுவாரசியம்

    வாகன உற்பத்தி

    வாகன உற்பத்தி

    இந்த நிலையில் அசோக் லேலண்ட் நிறுவனமும் தங்கள் ஊழியர்களுக்கு 5 நாட்கள் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 9 -ஆம் தேதி வரை விடுப்பு அளித்துள்ளது. வாகன உற்பத்தி குறைவால் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒப்பந்த தொழிலாளர்கள்

    ஒப்பந்த தொழிலாளர்கள்

    வணிக ரீதியான வாகனங்கள் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து ஊழியர்களுக்கு விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5 நாட்கள் உற்பத்தியை முடக்குவதால் நிரந்தர, ஒப்பந்த தொழிலாளர்கள் 9000 பேர் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

    வெளியே ஒட்டிய நிறுவனம்

    வெளியே ஒட்டிய நிறுவனம்

    நிதி நிலையை கருத்தில் கொண்டு கட்டாய விடுப்பு நாட்களை மேலும் அதிகரிப்பது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக யூனியன்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு நிறுவனத்தின் வெளியேயும் ஒட்டியுள்ளது.

    கட்டாய விடுப்பு

    கட்டாய விடுப்பு

    எனினும் அத்தியாவசிய பணியில் உள்ளவர்கள் பணிக்கு வருவது குறித்து அந்தந்த துறைகளின் பொறுப்பாளர்கள் அறிவிப்பார்கள் என்றும் கூறியுள்ளது. மிகப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான அசோக் லேலண்ட் இது போல் கட்டாய விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கட்டாய விடுப்பு

    கட்டாய விடுப்பு

    மாருதி- சுசுகி, டிவிஎஸ், ஹீரோ உள்ளிட்ட முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்கெனவே கட்டாய விடுப்பை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆட்டோமொபைல் துறையில் சரிவு ஏற்பட்டபோதிலும் பெரிய வாகன உற்பத்தியில் எந்த பாதிப்பும் இல்லை என்று சொல்லப்பட்ட நிலையில் இந்த தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.

    English summary
    Ashok leyland offers compulsory holiday for 5 days to its workers citing decrease in vehicle manufacturing.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X